மேலும் அறிய

CUET : தொடரும் சர்ச்சைகள்; பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜூலை 19 க்யூட் மறுதேர்வு- என்டிஏ அறிவிப்பு

6 மாநிலங்களில் 1000 மாணவர்களுக்கு மட்டும் தவறான வினாத்தாள் வழங்கப்பட்டதால் க்யூட் மறு தேர்வு நடத்தப்பட உள்ளது. 

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மட்டும் ஜூலை 19ஆம் தேதி க்யூட் மறுதேர்வு நடத்தப்படும் என்று என்டிஏ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நீட், யுஜிசி நெட், சிஎஸ் ஐஆர் நெட் ஆகிய தேர்வுகள் நடத்தப்பட்ட விதம் சர்ச்சைகளைக் கிளப்பி இருந்த நிலையில், இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மத்தியப் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் கலை, அறிவியல் படிப்புகளில் சேர க்யூட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. 2022 முதல் இந்தத் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. சில தனியார் பல்கலைக்கழகங்களும் க்யூட் தேர்வை அடிப்படையாக வைத்தே மாணவர் சேர்க்கையை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் 2024ஆம் ஆண்டுக்கான இளநிலை க்யூட் தேர்வு மே மாதம் 15, 16, 17, 18, 21, 22, 24 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. நாடு முழுவதும் கலப்பு முறையில் அதாவது கணினி மற்றும் பேனா, காகித முறையில் தேர்வு நடந்தது. இந்தியாவுக்கு வெளியே 26 நகரங்கள் உட்பட 379 நகரங்களில் நடைபெற்ற தேர்வை 13.48 லட்சம் மாணவர்கள் எழுத விண்ணப்பித்து இருந்தனர்.

தேர்வு முடிந்த பிறகு தவறான வினாத்தாள் வழங்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. மாணவர்களிடம் இருந்து ஜூன் 30 வரை குறைகள் பெறப்பட்டன. rescuetug@nta.ac.in என்ற இ- மெயில் முகவரிக்கு இவை அனைத்தும் அனுப்பப்பட்டன.

ஜூலை 19 மறுதேர்வு

இந்த நிலையில் மாணவர்களின் குறைகளைப் பரிசீலனை செய்து, பாதிக்கப்பட்ட சுமார் 1000 மாணவர்களுக்கு மட்டும் ஜூலை 19ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்று தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. முழுக்க முழுக்க கணினி முறையில் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான ஹால் டிக்கெட் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியான தகவலின்படி, சுமார் 6 மாநிலங்களில் 1000 மாணவர்களுக்கு மட்டும் தவறான வினாத்தாள் வழங்கப்பட்டதால் மறு தேர்வு நடத்தப்பட உள்ளது. 

மாணவர்கள் https://exams.nta.ac.in/CUET-UG/ என்ற இணைப்பை க்ளிக் செய்து, ஹால் டிக்கெட்டைப் பெறலாம். இதுகுறித்த பாட விவரங்களுக்கு மறுதேர்வு குறித்த விவரங்கள் இ- மெயில் அனுப்பப்பட்டுள்ளன.

தொடர்ந்து ஜூலை 7 முதல் 9ஆம் தேதி வரை ஆட்சேபனைக்கு உரிய விடைக் குறிப்புகள் பெறப்பட்டன. பாட வாரியாக குறிப்புகள் பெறப்பட்டு, பரிசீலனை செய்யப்பட்டன. இவற்றுக்கான இறுதி விடைக் குறிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.

தேர்வு முடிவுகள் எப்போது?

இதற்கிடையே எப்போது க்யூட் இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கேள்வி எழுந்துள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு 011 - 40759000 / 011 - 69227700 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம். cuet-ug@nta.ac.in என்ற இ – மெயில் முகவரிக்கும் சந்தேகங்களை அனுப்பலாம்.

கூடுதல் தகவல்களுக்கு: www.nta.ac.in , https://exams.nta.ac.in/CUET-UG/

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay:
TVK Vijay: "முயற்சி வெற்றி பெறட்டும்" தமிழக மக்களுக்கு ஆயுத பூஜை வாழ்த்து கூறிய நடிகர் விஜய்!
Vettaiyan Collection Day 1: வேட்டையன் முதல் நாள் வசூல் வேட்டை - விஜயின் தி கோட்டை மிஞ்சினாரா சூப்பர் ஸ்டார் ரஜினி?
Vettaiyan Collection Day 1: வேட்டையன் முதல் நாள் வசூல் வேட்டை - விஜயின் தி கோட்டை மிஞ்சினாரா சூப்பர் ஸ்டார் ரஜினி?
Ayutha Pooja 2024: தமிழ்நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை கோலாகல கொண்டாட்டம்! பூக்கள், பழங்கள் விற்பனை படுஜோர்!
Ayutha Pooja 2024: தமிழ்நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை கோலாகல கொண்டாட்டம்! பூக்கள், பழங்கள் விற்பனை படுஜோர்!
Aadhar Money Withdrawal: டெபிட்/கிரெடிட் கார்ட் வேண்டாம், ஆதார் போதும் -  பணம் எடுப்பது எப்படி? வரம்பு என்ன?
Aadhar Money Withdrawal: டெபிட்/கிரெடிட் கார்ட் வேண்டாம், ஆதார் போதும் - பணம் எடுப்பது எப்படி? வரம்பு என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Noel Tata : TATA-ன் கிரீடம் யாருக்கு? ரத்தன் டாடாவின் மனசாட்சி! யார் இந்த நோயல் டாடா?Ratan Tata Untold love story  | ரத்தன் டாட்டா BREAK UP 💔 கடைசி வரை BACHELOR!Ratan Tata Passed away | RIP ரத்தன் டாடாஉடலுக்கு இறுதி அஞ்சலி! கண்ணீர் மழையில் மக்கள்History of Ratan Rata |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay:
TVK Vijay: "முயற்சி வெற்றி பெறட்டும்" தமிழக மக்களுக்கு ஆயுத பூஜை வாழ்த்து கூறிய நடிகர் விஜய்!
Vettaiyan Collection Day 1: வேட்டையன் முதல் நாள் வசூல் வேட்டை - விஜயின் தி கோட்டை மிஞ்சினாரா சூப்பர் ஸ்டார் ரஜினி?
Vettaiyan Collection Day 1: வேட்டையன் முதல் நாள் வசூல் வேட்டை - விஜயின் தி கோட்டை மிஞ்சினாரா சூப்பர் ஸ்டார் ரஜினி?
Ayutha Pooja 2024: தமிழ்நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை கோலாகல கொண்டாட்டம்! பூக்கள், பழங்கள் விற்பனை படுஜோர்!
Ayutha Pooja 2024: தமிழ்நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை கோலாகல கொண்டாட்டம்! பூக்கள், பழங்கள் விற்பனை படுஜோர்!
Aadhar Money Withdrawal: டெபிட்/கிரெடிட் கார்ட் வேண்டாம், ஆதார் போதும் -  பணம் எடுப்பது எப்படி? வரம்பு என்ன?
Aadhar Money Withdrawal: டெபிட்/கிரெடிட் கார்ட் வேண்டாம், ஆதார் போதும் - பணம் எடுப்பது எப்படி? வரம்பு என்ன?
Breaking News LIVE 11th OCT 2024: தமிழக மக்களுக்கு ஆயுத பூஜை வாழ்த்து கூறிய த.வெ.க. தலைவர் விஜய்
Breaking News LIVE 11th OCT 2024: தமிழக மக்களுக்கு ஆயுத பூஜை வாழ்த்து கூறிய த.வெ.க. தலைவர் விஜய்
Pigeons Robbery: அடுத்தடுத்து 50 வீடுகளில் கொள்ளை, சிக்கிய கொள்ளையன், புறா மூலம் ரூ.30 லட்சம் திருடியது எப்படி?
Pigeons Robbery: அடுத்தடுத்து 50 வீடுகளில் கொள்ளை, சிக்கிய கொள்ளையன், புறா மூலம் ரூ.30 லட்சம் திருடியது எப்படி?
ஜாதகத்தில் குரு உச்சம் வேண்டுமா? அப்போ இந்த குரு ஸ்தலத்துக்கு போங்க!
ஜாதகத்தில் குரு உச்சம் வேண்டுமா? அப்போ இந்த குரு ஸ்தலத்துக்கு போங்க!
Rohit Sharma: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் - விலகும் கேப்டன் ரோகித் சர்மா, காரணம் என்ன?
Rohit Sharma: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் - விலகும் கேப்டன் ரோகித் சர்மா, காரணம் என்ன?
Embed widget