மன அழுத்தத்தின் போது உட்கொள்ளும் உணவு தேர்வில் கவனம் செலுத்த வேண்டும். இ
மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்க சர்க்கரை மற்றும் கொழுப்பு அதி கம் உள்ள உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
பெர்ரி வகை பழங்களை சாப்பிடலாம். ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்தவை, செல்கள் சேதம் அடைவதை தடுக்கும்.
உடலில் துத்தநாகம் குறைவாக இருந்தால் மன அழுத்த பாதிப்பு அதிகமாகி விடும். முந்திரிப் பருப்பில் 14 முதல் 20 சதவீதம் வரை துத்தநாகம் இருக்கிறது.
சியா விதைகள், பூசணி விதைகள் மற் றும் முட்டையில் மெக்னீசியம் உள்ளது.
ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் பி6 ஆகியவை மன அழுத்தத்தையும், ரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவும்.
கீரைகளில் இருக்கும் போலேட்டுகள் பதற்றத்தை தணிக்க உதவும். சால்மன்,மத்தி போன்ற மீன்வகைகளையும் சாப்பிடலாம். வைட்டமின் டி பதற்றத்தை குறைக்கும்.
தூங்க செல்லும் முன் பால் குடிக்கலாம். பாலில் இருக்கும் டிரிப்டோபன் மெலபோனின் மற்றும் பி வைட்டமின்கள் உள்ளிட்டவை தூக்கத்திற்கு வழிவகுக்கும்.
நார்ச்சத்து மிகுந்த ஆகாரங்கள் உட் கொள்வது மிக அவசியம். குறிப்பாக தண்ணீரை விட மிகப்பெரிய மருந்து எதுவும் இல்லை. நிறைய தண்ணீர் குடிக்கவும்.