மேலும் அறிய

CUET UG 2024: க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு: எப்போது வரை? எப்படி விண்ணப்பிக்கலாம்?

CUET UG 2024 Registration: க்யூட் இளநிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று காணலாம்.  

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை, அறிவியல் பட்டப் படிப்புகளில் சேர நடத்தப்படும் க்யூட் இளநிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று காணலாம்.  

மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் நடத்தப்படும் இளங்கலை மற்றும் முதுநிலை படிப்புகளில் சேர பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு (Common University Entrance Test - CUET) கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு 2024ஆம் ஆண்டு மே 15 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கலப்பு முறையில் நாளுக்கு 2 அல்லது 3 ஷிஃப்டுகளில் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு முடிவுகள் ஜூன் 30ஆம் தேதி அன்று வெளியாக உள்ளன.

அவகாசம் நீட்டிப்பு

நாடு முழுவதும் 13 மொழிகளில் 26 வெளிநாட்டு நகரங்கள் உட்பட 380 நகரங்களில் க்யூட் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு பிப்.26ஆம் தேதி தொடங்கிய நிலையில், மார்ச் 26 இரவு 9.50 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டது. எனினும் தேர்வர்களின் கோரிக்கைக்கு இணங்க அவகாசம் மார்ச் 31ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்த அறிவிப்பை யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார் மாமிதாலா வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’இளங்கலை க்யூட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவுக்கான அவகாசம் மார்ச் 31, இரவு 9.50 மணி வரை வழங்கப்பட்டுள்ளது. தேர்வர்களின் கோரிக்கைக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த உடனடித் தகவல்களுக்கு exams.nta.ac.in/CUET-UG/ என்ற இணைப்பை க்ளிக் செய்து பாருங்கள்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

* என்டிஏவின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்துக்குச் செல்லவும்.

* அதாவது https://exams.nta.ac.in/CUET-UG/ என்னும் இணைப்பை க்ளிக் செய்யவும். அ

* அதில்,  CUET (UG) - 2024 Click Here for Registration/Login என்ற இணைப்பை சொடுக்கவும். அல்லது  https://cuetug.ntaonline.in/ என்ற இணைப்பைத் தெரிவு செய்யவும்.

* அதில், விண்ணப்ப எண், கடவுச் சொல், பாதுகாப்பு பின் ஆகியவற்றை உள்ளீடு செய்யவும்.

* தேவையான ஆவணங்கள், புகைப்படங்கள், கையெழுத்து ஆகியவற்றை உள்ளிடவும்.  

* விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, விண்ணப்பித்ததை உறுதி செய்யவும்.

கூடுதல் தகவல்களுக்கு: https://cuet.nta.nic.in/

 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

NEET UG 2026: நீட் தேர்வு 2026: விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய என்டிஏ அவகாசம் - எதையெல்லாம் மாற்றலாம்?
NEET UG 2026: நீட் தேர்வு 2026: விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய என்டிஏ அவகாசம் - எதையெல்லாம் மாற்றலாம்?
IAAC: விண்வெளி ஆர்வலர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு! சர்வதேச வானியல் போட்டி: பரிசு & சான்றிதழ்கள் வெல்லலாம்!
IAAC: விண்வெளி ஆர்வலர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு! சர்வதேச வானியல் போட்டி: பரிசு & சான்றிதழ்கள் வெல்லலாம்!
பொதுத் தேர்வின்போது மொபைல் பயன்படுத்திக்கொள்ள அனுமதி; யாருக்கெல்லாம்? எதற்கு?
பொதுத் தேர்வின்போது மொபைல் பயன்படுத்திக்கொள்ள அனுமதி; யாருக்கெல்லாம்? எதற்கு?
பல்லி விழுந்த மதிய உணவு விவகாரம்... 3 பேர் இடைநீக்கம்...
பல்லி விழுந்த மதிய உணவு விவகாரம்... 3 பேர் இடைநீக்கம்...
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mojtaba on Hormuz Strait: அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
Kim Jong Un: ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Best Bikes for Rural Roads: நீங்க கிராமத்துல இருக்கீங்களா.? உங்க சாலைகளுக்கு ஏத்த சிறந்த மலிவான பைக்குகள் எவை தெரியுமா.?
நீங்க கிராமத்துல இருக்கீங்களா.? உங்க சாலைகளுக்கு ஏத்த சிறந்த மலிவான பைக்குகள் எவை தெரியுமா.?
Petrol Diesel Issue India: பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
Minister Ragupathy‘ : நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
‘நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
Embed widget