மேலும் அறிய

CUET PG 2022 Exam Date: செப்டம்பரில் CUET முதுகலைத் தேர்வு... தேதிகளை அறிவித்த யுஜிசி தலைவர்

CUET முதுகலைத் தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அறிவித்துள்ள யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார், தேதிகளையும் அறிவித்துள்ளார். 

CUET முதுகலைத் தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அறிவித்துள்ள யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார், தேதிகளையும் அறிவித்துள்ளார். 

மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் இளங்கலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அதேபோல முதுகலைத் தேர்வுக்கும் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. எனினும் மத்தியப் பல்கலைக்கழகங்களில் சேர, இந்தத் தேர்வு இன்னும் கட்டாயம் ஆக்கப்படவில்லை.

இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில் முதுகலைத் தேர்வு நடைபெறும் என்று யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

செப்டம்பர் மாதத்தில் தேர்வு

தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட13 மொழிகளில் இந்தத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்த உள்ளது. செப்டம்பர் மாதத்தில் இந்தத் தேர்வு நடைபெறும். 

குறிப்பாக செப்டம்பர் 01, 02, 03, 04, 05, 06, 07, 09, 10, 11 ஆகிய தேதிகளில் முதுகலைத் தேர்வுகள் நடைபெற உள்ளன. தேர்வு நடைபெறும் நகரம் மற்றும் ஹால்டிக்கெட் வெளியீடு உள்ளிட்ட பிற விவரங்கள் பின்னர் வெளியாகும்.

கூடுதல் விவரங்களுக்கு: http://nta.ac.in, https://cuet.nta.nic.in 

கணினி முறையில் 3.57 லட்சம் தேர்வர்கள், முதுகலைத் தேர்வை எழுத உள்ளனர். தோராயமாக 500 இந்திய நகரங்கள் மற்றும்  இந்தியாவுக்கு வெளியே 13 நகரங்களில் க்யூட் முதுகலைத் தேர்வு நடைபெற உள்ளது.  

முழுமையான அட்டவணை, தேர்வு நடைபெறும் நேரம் உள்ளிட்ட விவரங்களை விரைவில் தேசியத் தேர்வுகள் முகமை வெளியிடும். தேர்வு குறித்த கூடுதல், உடனடித் தகவல்களுக்குத் தேர்வர்கள் http://nta.ac.in மற்றும் https://cuet.nta.nic.in ஆகிய இணைய முகவரிகளை அடிக்கடி பரிசோதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

இ-மெயில் முகவரி: cuet-pg@nta.ac.in

இவ்வாறு ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

3 பிரிவுகளாகக் கேள்விகள்

பொது நுழைவுத் தேர்வு கேள்விகள் 3 பிரிவுகளாகக் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் பிரிவில் இரண்டு பகுதிகள் இருக்கும். முதல் பகுதி கட்டாய மொழித் தேர்வாக இருக்கும். தமிழ், இந்தி, மராத்தி, குஜராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, அசாமி, பெங்காலி, பஞ்சாபி, ஒடியா மற்றும் ஆங்கிலம் ஆகிய 13 மொழிகளில் ஏதேனும் ஒன்றில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். மொழி சார்ந்து வாசிப்புத் திறன், சொல்லகராதி சார்ந்த கேள்விகள், அருஞ்சொல், எதிர்ச்சொல்கள் உள்ளிட்டவை சோதிக்கப்படும். 

இரண்டாவது பகுதியில் கூடுதலாக விருப்ப மொழித் தேர்வையும் தேர்வர்கள் எழுதலாம். ஃப்ரெஞ்ச், ஸ்பானிஷ், ஜெர்மனி, நேபாளி, பெர்ஷியன், இத்தாலியன், அரபி, சிந்தி, காஷ்மீரி, கொங்கணி, போடோ, டோக்ரி, மைதிலி, மணிப்புரி, சந்தலி, திபெத்தியன், ஜப்பான், ரஷ்யன், சீனம் ஆகிய 19 மொழிகளில் இந்தத் தேர்வை எழுதலாம். 

2ஆவது பிரிவில் தேர்வர்களின் துறை சார் அறிவு சோதிக்கப்படும். மொத்தமுள்ள 27 துறைகளில் இருந்து தேர்வர்கள் தங்களுக்குப் பிடித்தமான, தேவையான துறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதிகபட்சமாக ஒரு தேர்வர் 6 துறைகள் வரை தேர்வு செய்ய முடியும். பல்கலைக்கழகங்களும் துறைசார் தேர்வுகளை நடத்த முடிவு செய்யலாம்.

3ஆவது பிரிவில், பொதுவான கேள்விகள் கேட்கப்படும். பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள், மனத் திறன், கணக்குத் திறன், தர்க்க மற்றும் பகுத்தறியும் திறன் சார்ந்த கேள்விகள் இந்தப் பிரிவில் கேட்கப்படும். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka Gandhi

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
Embed widget