CSIR UGC NET 2023: யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு; என்டிஏ அறிவிப்பு
சி.எஸ்.ஐ.ஆர். எனப்படும் மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் நடத்தப்படும் தேசிய தகுதித் தேர்வுக்கு (நெட்) விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
![CSIR UGC NET 2023: யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு; என்டிஏ அறிவிப்பு CSIR UGC NET 2023 Registration Deadline Extended by NTA Till April 17th Check Steps to Apply CSIR UGC NET 2023: யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு; என்டிஏ அறிவிப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/11/f2c150bc1465b1442924adcd4b1ab4e21681206807143332_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சி.எஸ்.ஐ.ஆர். எனப்படும் மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் (CSIR- Council of Scientific & Industrial Research) நடத்தப்படும் தேசிய தகுதித் தேர்வுக்கு (நெட்) விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி தேர்வர்கள் ஏப்ரல் 17ஆம் தேதி வரை தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.
இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணிக்கான தகுதியையும், இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship- JRF) பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வு தேசியத் தேர்வுகள் முகமையால் (NTA) நடத்தப்படுகிறது. மொத்தம் 84 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை நடத்தப்படுகிறது.
வேதியியல், புவியியல், சுற்றுச்சூழல், அறிவியல், இயற்பியல், உயிரியல் போன்ற படிப்புகளுக்கான தகுதித் தேர்வினை சி.எஸ்.ஐ.ஆர். பிரிவுன் மூலம் பல்கலைக்கழக மானிய குழு அறிவித்துள்ளது. கடந்தாண்டு டிசம்பர், 2022 மற்றும் ஜூன்,2023 ஆகிய இரண்டிற்கும் விண்ணப்பிகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.எஸ்.ஐ.ஆர். தகுதித் தேர்வு எப்போது?
விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்ட போதும், ஜூன் மாதம் 6,7,8 ஆகிய மூன்று நாட்களில் தேர்வு நடைபெறும் என்ற அறிவிப்பில் மற்றம் இல்லை என்று தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
தேர்வு கட்டணம்
ஆன்லைனில் முறையில் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். தேர்வும் ஆன்லைனில் நடைபெறும். மாற்றுத் திறனாளிகள் மட்டும் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
விண்ணப்பிப்பது எப்படி?
- https://ugcnet.nta.nic.in/- என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
- CSIR UGC NET Exam - என்ற பிரிவில் https://examinationservices.nic.in/ExamSys23/root/Home.aspx?enc=WPJ5WSCVWOMNiXoyyomJgGDtWcAbgFDre9xlyz9+V+Qofj7bz/f2saq9vGuVnSs/ - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
- அதில் கேட்கப்படும் தேவையான தகவல்களை பதிவிடவும்.
- விண்ணப்ப கட்டணத்தை செலுத்தவும்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதியாக 10.04.2023 இருந்த நிலையில், தற்போது ஏப்ரல் 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.
அதேபோல விண்ணப்ப படிவத்தில் திருத்தம் மேற்கொள்ள 12.04.2023 முதல் 18.04.2023 வரை தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 19.04.2023 முதல் 25.04.2023 வரை தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அறிவிப்பின் முழு விவரம் அறிய https://cdnbbsr.s3waas.gov.in/s3efdf562ce2fb0ad460fd8e9d33e57f57/uploads/2023/04/2023041146.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
என்.டி.ஏ.வின் உதவி எண்கள் - 011-40759000 / 011-69227700
இ-மெயில் முகவரி - csirnet@nta.ac.in.
இதையும் வாசிக்கலாம்: 10ஆம் வகுப்பு பாடங்களின் மாதிரி வினாத் தாளைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)