மேலும் அறிய

பள்ளிகளில் சர்ச்சைக்குரிய சொற்பொழிவுகள் இனி நடக்காது: தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை- அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!

இனி பள்ளிகளில் சர்ச்சைக்குரிய சொற்பொழிவு போன்ற சம்பம் நடைபெறாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் சென்னை அசோக் நகரில் சிறப்பு விருந்தினர் கலந்துகொண்டு பேசிய விவகாரம் சர்ச்சையானதைத் தொடர்ந்து, இனி அது போன்ற சம்பம் நடைபெறாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

சென்னை அசோக்நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் சைதாப்பேட்டை அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் நிகழ்ச்சி என்ற பெயரில் மகா விஷ்ணு என்னும் பேச்சாளரை அழைத்து வந்து பேச வைத்துள்ளனர்.

மூட நம்பிக்கை அகங்காரப் பேச்சு

அவர், மாணவிகள் அழகாக இல்லாததற்கு கடந்த பிறவிகளில் செய்த பாவம்தான் காரணம், மாற்றுத் திறனாளிகளாகப் பிறக்கவும் அதுவே காரணம் என்று பேசியுள்ளார். மறு பிறவி, பாவம், புண்ணியம், பிரபஞ்ச சக்தில் பூமியில் இறங்கும் என்றெல்லாம் மகா விஷ்ணு கூறி இருந்தார். இதுதொடர்பான வீடியோக்கள் இனையத்தில் வைரலாகின. 

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழ்நாட்டின் எதிர்காலச் சந்ததியினரான நம் பள்ளிக் குழந்தைகள் அனைவரும், முற்போக்கான - அறிவியல் பூர்வமான கருத்துகளையும் வாழ்க்கை நெறிகளையும் பெற்றிடும் வகையில், மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட நான் ஆணையிட்டுள்ளேன். அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி!" என்று தெரிவித்து இருந்தார். 

இந்த நிலையில், இனி சர்ச்சைக்குரிய வகையில் பேச்சாளர்கள் அரசுப் பள்ளிகளில் பேசுவது போன்ற சம்பம் நடைபெறாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

பேச்சாளர்களின் பின்னணி குறித்து அறிந்தபிறகே அழைக்க வேண்டும்

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’தவறுக்கு யார் பொறுப்பாக இருந்தாலும் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். இனி சர்ச்சைக்குரிய வகையில் பேச்சாளர்கள் அரசுப் பள்ளிகளில் பேசுவது போன்ற சம்பவம் நடைபெறாது. பேச்சாளர்களின் பின்னணி குறித்து அறிந்தபிறகே, அவர்களை பள்ளிகளுக்கு அழைக்க வேண்டும். மாணவர்கள் எந்த விஷயத்தையும் பகுத்தறிந்துதான் செயல்பட வேண்டும். 

யாராக இருந்தாலும் 3 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை

தமிழ்நாடு முழுவதும் அனைத்துப் பள்ளிகளுக்கும் பாடமாக இருக்கும் வகையில் நடவடிக்கை இருக்கும். சர்ச்சைக்குரிய சொற்பொழிவைக் கேட்டபோது எல்லோருக்கும் ஏற்பட்ட உணர்வுதான் முதலமைச்சரும் எனக்கும் ஏற்பட்டது. தவறுக்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் 3 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பேசியது என்ன..?” திருமாவளவன் பரபரப்பு பேட்டி..!
”முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பேசியது என்ன..?” திருமாவளவன் பரபரப்பு பேட்டி..!
Siddharth - Aditirao Marriage: டும் டும் டும்! அதிதி ராவ் ஹைதாரியை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.. குவியும் வாழ்த்துக்கள்
டும் டும் டும்! அதிதி ராவ் ஹைதாரியை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.. குவியும் வாழ்த்துக்கள்
Ranipet Jaguar Mega: ராணிப்பேட்டையில் ஜாகுவார் கார், மெகா காலணி உற்பத்தி ஆலை - 25,000 பேருக்கு வேலை - ஸ்டாலின் அதிரடி
Ranipet Jaguar Mega: ராணிப்பேட்டையில் ஜாகுவார் கார், மெகா காலணி உற்பத்தி ஆலை - 25,000 பேருக்கு வேலை - ஸ்டாலின் அதிரடி
Breaking News LIVE: கும்மிடிப்பூண்டி தடைகளை உடைத்து பட்டியலின மக்கள் ஆலய பிரவேசம்..
Breaking News LIVE: கும்மிடிப்பூண்டி தடைகளை உடைத்து பட்டியலின மக்கள் ஆலய பிரவேசம்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

SP Varun kumar Anna Award : அரசின் அண்ணா பதக்கம்! அடித்து ஆடும் வருண்குமார்! Thirumavalavan meets MK Stalin : ஸ்டாலின் திருமா மீட்டிங்! முடிவுக்கு வருமா சர்ச்சை? பின்னணி என்ன?Nitin Gadkari on Congress : ’’எனக்கு பிரதமர் பதவி’’எதிர்க்கட்சி பக்கா ஸ்கெட்ச்! போட்டுடைத்த  கட்காரிMK Stalin Phone Call |’’தைரியமா இருங்க’’PHONE-ல் பேசிய முதல்வர்! உத்தரகாண்ட் நிலச்சரிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பேசியது என்ன..?” திருமாவளவன் பரபரப்பு பேட்டி..!
”முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பேசியது என்ன..?” திருமாவளவன் பரபரப்பு பேட்டி..!
Siddharth - Aditirao Marriage: டும் டும் டும்! அதிதி ராவ் ஹைதாரியை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.. குவியும் வாழ்த்துக்கள்
டும் டும் டும்! அதிதி ராவ் ஹைதாரியை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.. குவியும் வாழ்த்துக்கள்
Ranipet Jaguar Mega: ராணிப்பேட்டையில் ஜாகுவார் கார், மெகா காலணி உற்பத்தி ஆலை - 25,000 பேருக்கு வேலை - ஸ்டாலின் அதிரடி
Ranipet Jaguar Mega: ராணிப்பேட்டையில் ஜாகுவார் கார், மெகா காலணி உற்பத்தி ஆலை - 25,000 பேருக்கு வேலை - ஸ்டாலின் அதிரடி
Breaking News LIVE: கும்மிடிப்பூண்டி தடைகளை உடைத்து பட்டியலின மக்கள் ஆலய பிரவேசம்..
Breaking News LIVE: கும்மிடிப்பூண்டி தடைகளை உடைத்து பட்டியலின மக்கள் ஆலய பிரவேசம்..
"என் தாரா.. என் தாரா" விருது வென்ற நயன்தாரா! அன்பு முத்தமிட்ட விக்னேஷ்சிவன்!
”பரபரப்பான அரசியல் சூழலில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் திருமாவளவன்” கூட்டணி பற்றி முடிவு..?
”பரபரப்பான அரசியல் சூழலில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் திருமாவளவன்” கூட்டணி பற்றி முடிவு..?
டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்களை குறைக்க வேண்டும்: அரசுக்கு தேர்வர்கள் கோரிக்கை
டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்களை குறைக்க வேண்டும்: அரசுக்கு தேர்வர்கள் கோரிக்கை
VETTAIYAN Audio Launch: ரஜினியின் வேட்டையன் ஃபீவர் ஸ்டார்ட் - இசை வெளியீட்டு தேதியை அறிவித்தது லைகா..!
VETTAIYAN Audio Launch: ரஜினியின் வேட்டையன் ஃபீவர் ஸ்டார்ட் - இசை வெளியீட்டு தேதியை அறிவித்தது லைகா..!
Embed widget