மேலும் அறிய

School Reopen: பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு? இன்று மாலை வருகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அண்டை மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில், தேதியை ஒத்திவைக்கலாமா என ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

பள்ளி, கல்லூரிகள் திறக்கலாமா அல்லது தேதியை ஒத்திவைக்கலாமா என முதலமைச்சர் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் செப்டம்பர் 1ஆம் முதல் திறக்கப்பட உள்ளன. பள்ளிகளில் 9,10,11,12ஆம் ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 

இந்த நிலையில்,  பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவது தொடர்பாக  சுகாதாரத்துறை, காவல் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். பள்ளி, கல்லூரிகள் திறப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், பள்ளி, கல்லூரிகள் திறக்கலாமா அல்லது தேதியை ஒத்திவைக்கலாமா என முதலமைச்சர் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்டை மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில், தேதியை ஒத்திவைக்கலாமா என ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


School Reopen: பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு? இன்று மாலை வருகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

முன்னதாக, கடந்த 18ஆம் தேதி பள்ளி திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. அதில், அனைத்து பள்ளிகளிலும் சானிடைசர் வைக்கப்பட்டு, சுகாதார வசதிகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நேரடியாக சென்று ஆய்வு செய்ய வேண்டும். கொரோனா பரவலை தடுக்க 6 அடி இடைவெளியில் மாணவர்களை அமர வைக்க வேண்டும். மாணவர்கள் கை கழுவும் வசதி, உடல் வெப்பத்தை பரிசோதனை செய்யும் கருவி ஆகியவை பள்ளியில் இடம்பெற வேண்டும். முதல் நாளில் 50 சதவீத மாணவர்களும், மறுநாளில் எஞ்சிய 50 சதவீத மாணவர்களும் மாறி மாறி பள்ளிக்கு வர வேண்டும். கொரோனா அறிகுறி உள்ள மாணவர்கள், ஆசிரியர்களை பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்க கூடாது. பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். இதமான சூழல் இருந்தால் மாணவர்களை பள்ளி வளாகத்தில் அமர வைத்து பாடம் நடத்தலாம்;பள்ளி வளாகத்தில் எச்சில் துப்புவதை தடுக்க வேண்டும். பள்ளிவரும் மாணவர்களுக்கு வைட்டமின் சி மாத்திரை, நோய் எதிர்ப்பு மருந்துகள் வழங்க வேண்டும். பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் உடல்நிலையை வாரம் ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட கொரோனா இரண்டாவது அலையால், புதிய கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை மீண்டும் தடைபட்டது. கடந்த ஜூலை 14-ஆம் தேதி முதல், நோய்த் தொற்றுப் பரவல் குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தொடங்கியது.  இருப்பினும், பள்ளிகளில் வகுப்பு நடத்த அனுமதி கிடையாது என்றும், மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று சேர்க்கைக்கான விண்ணப்பிப்பது அல்லது மாற்றுச் சான்றிதழ் பெறுவது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடலாம்  என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


School Reopen: பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு? இன்று மாலை வருகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இதேபோல், கல்லூரி திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதன்படி, கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, ஆன்லைன் வகுப்புகளே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம் என்றும்,மாற்றுத் திறனாளி மாணவர்கள் கல்லூரிகளுக்கு வருகை தர அவசியமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பாக, தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு அந்தந்த கல்லூரிகளிலேயே தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அரசு குறிப்பிட்டுள்ளது.

புதுச்சேரி : செப்டம்பர் 1-ஆம் தேதி பள்ளிகள் திறப்பு; மதிய உணவு வழங்கப்படாது - கல்வித்துறை அறிவிப்பு

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
Chembarambakkam Lake: 6 மணி நேரம்.. 5 மடங்கு உயர்வு.. ஆலோசனையில் அதிகாரிகள்..‌ செம்பரம்பாக்கம் நிலை என்ன ?
6 மணி நேரம்.. 5 மடங்கு உயர்வு.. ஆலோசனையில் அதிகாரிகள்..‌ செம்பரம்பாக்கம் நிலை என்ன ?
Naan Mudhalvan scheme: நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 1 லட்சம் பேருக்குப் பணி: அமைச்சர் கோவி செழியன் பெருமிதம்!
Naan Mudhalvan scheme: நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 1 லட்சம் பேருக்குப் பணி: அமைச்சர் கோவி செழியன் பெருமிதம்!
சாய் பல்லவியவே கோபப்பட வச்சீட்டாங்களே...சைவத்திற்கு மாறினாரா சாய் பல்லவி ?
சாய் பல்லவியவே கோபப்பட வச்சீட்டாங்களே...சைவத்திற்கு மாறினாரா சாய் பல்லவி ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay : ”2026-ல் விஜய் முதலமைச்சர்! என்.டி.ஆர் பாணியில் வெற்றி” வெளியான மெகா சர்வே!Trichy Suriya on Annamalai | Bussy Anand | Palani Drunken Women: சுக்குநூறான POLICE பூத்.. அடித்து நொறுக்கிய பெண்.. பழனியில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
Chembarambakkam Lake: 6 மணி நேரம்.. 5 மடங்கு உயர்வு.. ஆலோசனையில் அதிகாரிகள்..‌ செம்பரம்பாக்கம் நிலை என்ன ?
6 மணி நேரம்.. 5 மடங்கு உயர்வு.. ஆலோசனையில் அதிகாரிகள்..‌ செம்பரம்பாக்கம் நிலை என்ன ?
Naan Mudhalvan scheme: நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 1 லட்சம் பேருக்குப் பணி: அமைச்சர் கோவி செழியன் பெருமிதம்!
Naan Mudhalvan scheme: நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 1 லட்சம் பேருக்குப் பணி: அமைச்சர் கோவி செழியன் பெருமிதம்!
சாய் பல்லவியவே கோபப்பட வச்சீட்டாங்களே...சைவத்திற்கு மாறினாரா சாய் பல்லவி ?
சாய் பல்லவியவே கோபப்பட வச்சீட்டாங்களே...சைவத்திற்கு மாறினாரா சாய் பல்லவி ?
Teachers Leave: இனி அனைத்து ஆசிரியர்களும் அனுமதி பெற்றுத்தான் விடுப்பு எடுக்க வேண்டுமா? சுற்றறிக்கையால் சர்ச்சை!
Teachers Leave: இனி அனைத்து ஆசிரியர்களும் அனுமதி பெற்றுத்தான் விடுப்பு எடுக்க வேண்டுமா? சுற்றறிக்கையால் சர்ச்சை!
இது சமத்துவ கொள்கை மட்டுமல்ல; ஆட்சியின் கொள்கை: பெரியார் விழாவில் ஸ்டாலின் முழங்கியது என்ன?
இது சமத்துவ கொள்கை மட்டுமல்ல; ஆட்சியின் கொள்கை: பெரியார் விழாவில் ஸ்டாலின் முழங்கியது என்ன?
Minister Senthil Balaji: அண்ணாமலை குறித்து கேள்வி...
அண்ணாமலை குறித்து கேள்வி... "சிலருக்கு ஊரில் வேலை வெட்டி இல்லை" கடுப்பான செந்தில் பாலாஜி
Dhanusu New Year Rasi Palan: தனுசுக்கு ஜெயமே! 2025ல் நினைத்தது எல்லாம் நடக்கப்போகுது - ஆண்டு ராசிபலன்
Dhanusu New Year Rasi Palan: தனுசுக்கு ஜெயமே! 2025ல் நினைத்தது எல்லாம் நடக்கப்போகுது - ஆண்டு ராசிபலன்
Embed widget