![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந்தராக சி.எம்.கதிரேசன் நியமனம்!
கற்பித்த பணியில் 36 ஆண்டுகள் அனுபவம் கொண்ட சி.எம்.கதிரேசன், மத்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் இயக்குநராக பதவி வகித்துள்ளார்.
![அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந்தராக சி.எம்.கதிரேசன் நியமனம்! CM Kathiresan appointed Vice Chancellor of Annamalai University அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந்தராக சி.எம்.கதிரேசன் நியமனம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/20/2939b68592368e2a1229ac593c53066e_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தராக டாக்டர் கதிரேசனை நியமனமித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கழைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக சி.எம்.கதிரேசன் நியமிக்கப்பட்டுள்ளார். துணை வேந்தராக பொறுப்பேற்ற நாளில் இருந்து மூன்று ஆண்டுகள் கதிரேசம் பதவி வகிப்பார். கற்பித்த பணியில் 36 ஆண்டுகள் அனுபவம் கொண்ட சி.எம்.கதிரேசன், மத்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் இயக்குநராக பதவி வகித்துள்ளார்.
#JUSTIN
— ABP Nadu (@abpnadu) November 20, 2021
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந்தராக டாக்டர் சி.எம்.கதிரேசன் நியமனம்
ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு
துணை வேந்தராக பதவியேற்ற நாளில் இருந்து மூன்று ஆண்டுகள் பதவியில் நீடிப்பார் என்றும் அறிவிப்பு#ChidamparamAnnamalaiUniversity pic.twitter.com/0f47eijR0K
டாக்டர் சி.எம்.கதிரேசன், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் இயக்குநராகவும், டீனாகவும், வேளாண்மைத் துறைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
31 ஆய்வுக் கட்டுரைகளை இண்டெக்ஸ்டு ஜர்னல்களில் வெளியிட்டு, சர்வதேச நிகழ்வுகளில் 30 கட்டுரைகளை சமர்ப்பித்து, பல சர்வதேச கல்வி/ஆராய்ச்சி நிகழ்வுகளை ஏற்பாடு செய்த பெரிய ஆராய்ச்சி அனுபவம் அவருக்கு உண்டு. தேசிய அளவிலான மாநாடுகளில் 29 ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து 2 புத்தகங்களை எழுதியுள்ளார். மேலும், ரூ.16.11 லட்சம் மதிப்பில் 14 ஆய்வுத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். அவர் 10 பிஎச்டிக்கு வழிகாட்டியுள்ளார். அவர் 2001 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் பயிர் பாதுகாப்பு கவுன்சில் விருது, காமன்வெல்த் மூத்த கல்விப் பணியாளர் பெல்லோஷிப் (1997), அகில இந்திய விவசாய மாணவர் சங்கம் மற்றும் ICAR வழங்கும் AIASA ஹரித் புரஸ்கார் விருது (2018) ஆகியவற்றைப் பெற்றுள்ளார். மேலும் "இந்திய விவசாயத்தின் நாயகர்கள் 2017" என்ற விருதையும் பெற்றுள்ளார்.
இயக்குநர், டீன் மற்றும் துறைத் தலைவர் என 8 வருட நிர்வாக அனுபவத்தைக் கொண்ட அவர் பல்கலைக்கழக நிர்வாகத்தை நன்கு அறிந்தவர். சிங்கப்பூர், நேபாளம், இந்தோனேசியா, சீனா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, தாய்லாந்து, மலேசியா, ஜப்பான், இஸ்ரேல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜிம்பாப்வே, இங்கிலாந்து, டென்மார்க், வியட்நாம், தென்னாப்பிரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய 18 வெளிநாடுகளுக்கு கல்வி மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காகச் சென்றுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)