மேலும் அறிய

CLAT 2024 Exam: சட்டம் படிக்க ஆசையா?- டிச.3-ல் கிளாட் தேசிய நுழைவுத் தேர்வு; விண்ணப்பிப்பது எப்படி?- விவரம்

நாடு முழுவதும் தேசியக் கல்வி நிறுவனங்களில் சட்டப் படிப்புகளில் சேர்வதற்கான கிளாட் நுழைவுத் தேர்வு, டிசம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது.

நாடு முழுவதும் தேசியக் கல்வி நிறுவனங்களில் சட்டப் படிப்புகளில் சேர்வதற்கான கிளாட் நுழைவுத் தேர்வு, டிசம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு நவம்பர் 3ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் கீழ் இந்தியா முழுவதும் 22 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு (Consortium of National Law Universities) சார்பில் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இளநிலை, முதுநிலை சட்டப் படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் சேர ‘கிளாட்’ (Common Law Admission Test- CLAT) எனும் பொது சட்ட நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். குறிப்பாக 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த எல்எல்பி மற்றும் எல்எல்எம் படிப்புகளுக்காக (5-year integrated Ll.B. மற்றும் Ll.M. programmes) இந்த நுழைவுத் தேர்வு நடக்கிறது.

டிசம்பர் 3ஆம் தேதி தேர்வு

அதேபோல தேசிய சட்டப் பல்கலைக்கழங்களின் கூட்டமைப்பின் அங்கீகாரம் பெற்ற பல்வேறு பல்கலைக்கழகங்களும் கிளாட் தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு, மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. இந்த நிலையில், 2024- 25ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட உள்ளது. இதற்காக கிளாட் தேர்வு, டிசம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

கிளாட் நுழைவுத் தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள், நவம்பர் 3-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்காகத் தேர்வர்கள் https://consortiumofnlus.ac.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிப்பது அவசியம். மொத்தம் 120 மதிப்பெண்களுக்கு 2 மணி நேரம் மதியம் 2 முதல் 4 மணி வரை நுழைவுத் தேர்வு நடைபெறும். கடந்த ஆண்டு 150 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடைபெற்றது.

தேர்வு ஆஃப்லைன் மூலம் நடைபெற உள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 

CLAT 2024 Exam: சட்டம் படிக்க ஆசையா?- டிச.3-ல் கிளாட் தேசிய நுழைவுத் தேர்வு; விண்ணப்பிப்பது எப்படி?- விவரம்

கட்டணம் எவ்வளவு?

விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினர் ரூ.4 ஆயிரம் கட்ட வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.3,500 செலுத்த வேண்டியது முக்கியம். முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்களைப் பெற ரூ.500 கட்டணம் தனியாகச் செலுத்த வேண்டும்.

ஜூலை 1ஆம் தேதி முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தேர்வர்கள் நவம்பர் 3ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் முன்பதிவு செய்து, லாகின் செய்யும்போது மாதிரி வினாத் தாள்களைப் பார்வையிடும் வாய்ப்பும் கிடைக்கும்.

கூடுதல் தகவல்களுக்கு https://consortiumofnlus.ac.in/ என்ற முகவரியைத் தொடர்பு கொள்ளலாம். 

இ - மெயில் முகவரி : clat@consortiumofnlus.ac.in
தொலைபேசி எண்: 08047162020

இளங்கலைப் படிப்புகளுக்கான தகுதி குறித்து அறிய: https://consortiumofnlus.ac.in/clat-2024/ug-eligibility.html என்ற இணைப்பை க்ளிக் செய்து பார்க்கவும். 

இளநிலைப் படிப்புகளின் பாடத் திட்டத்தைப் பெற https://consortiumofnlus.ac.in/clat-2024/ug-syllabus.html என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

அதேபோல முதுகலைப் படிப்புகளுக்கான தகுதி குறித்து அறிய: https://consortiumofnlus.ac.in/clat-2024/pg-eligibility.html என்ற இணைப்பை க்ளிக் செய்து பார்க்க வேண்டியது அவசியம். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"ஆயிரம் கைகள் மறைத்தாலும்.. ஆதவ(ன்) மறைவதில்லை" ஆதவ் அர்ஜுனா பரபரப்பு ட்வீட்!
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்.. குளிர்கால கூட்டத்தொடரில் மெகா பிளானுடன் களமிறங்கும் பாஜக!
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்.. குளிர்கால கூட்டத்தொடரில் மெகா பிளானுடன் களமிறங்கும் பாஜக!
Tirupati: பக்தர்களே! இனி திருப்பதிக்கு போனால் தங்கக்காசு தருவாங்க - என்னங்க சொல்றீங்க?
Tirupati: பக்தர்களே! இனி திருப்பதிக்கு போனால் தங்கக்காசு தருவாங்க - என்னங்க சொல்றீங்க?
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ’’நான் ஓயமாட்டேன்..மன்னர் பரம்பரை ஒழியணும்’’ஆதவ் அர்ஜுனா பரபரAadhav Arjuna Suspend | விஜய்யுடன் ரகசிய சந்திப்பு ஆதவ்-ஐ தூக்கியடித்த திருமா காரணம் என்ன? | VijayAadhav Arjuna Suspend : “எனக்கு பதவி கொடுங்க விஜய்”ஆதவ் போடும் CONDITION ஷாக்கில் புஸ்ஸி ஆனந்த்!Aadhav Arjuna Suspended: 6 மாதம் சஸ்பெண்ட்.. ஆதவ் அர்ஜூனா மீது Action.. திருமாவளவன் அதிரடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஆயிரம் கைகள் மறைத்தாலும்.. ஆதவ(ன்) மறைவதில்லை" ஆதவ் அர்ஜுனா பரபரப்பு ட்வீட்!
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்.. குளிர்கால கூட்டத்தொடரில் மெகா பிளானுடன் களமிறங்கும் பாஜக!
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்.. குளிர்கால கூட்டத்தொடரில் மெகா பிளானுடன் களமிறங்கும் பாஜக!
Tirupati: பக்தர்களே! இனி திருப்பதிக்கு போனால் தங்கக்காசு தருவாங்க - என்னங்க சொல்றீங்க?
Tirupati: பக்தர்களே! இனி திருப்பதிக்கு போனால் தங்கக்காசு தருவாங்க - என்னங்க சொல்றீங்க?
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
Sai Abhyankkar:
Sai Abhyankkar: "ஒரு நாயகன் உதயமாகிறான்" கோலிவுட்டின் அடுத்த அனிருத் சாய் அபியங்கரா?
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
புகைக்காதவர்களையும் தாக்கும் நுரையீரல் புற்றுநோய் ; பகீர் கிளப்பும் அன்புமணி
புகைக்காதவர்களையும் தாக்கும் நுரையீரல் புற்றுநோய் ; பகீர் கிளப்பும் அன்புமணி
சென்னையில் பரபரப்பு...  ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
சென்னையில் பரபரப்பு... ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
Embed widget