மேலும் அறிய

Schools Colleges Holiday: சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை; எங்கெல்லாம்?

Schools and Colleges Holiday Tomorrow, October 16th: நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக். 16) விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

அதாவது 16.10.2024 அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

அரசு, பொதுத் துறை நிறுவனங்களுக்கும் விடுமுறை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலுள்ள அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

அத்தியாவசிய சேவை அவசியம்

எனினும், அத்தியாவசிய சேவை துறைகளான காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, உள்ளாட்சி நிர்வாகத் துறைகள். பால் வளத்துறை, குடிநீர் வழங்கல் துறை. மருத்துவமனைகள், மருந்தகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், மின்சாரத் துறை, காய்கறிகள் மற்றும் இதர அத்தியாவசிப் பொருட்களுக்கான போக்குவரத்து, மாநகரப் போக்குவரத்து, சென்னை மெட்ரோ ரயில், MRTS, இரயில்வே, விமான நிலையம், விமான போக்குவரத்து, பெட்ரோல் பங்குகள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மற்றும் பேரிடர் மீட்பு நிவாரண பணிகள் மேற்கொள்ளும் துறைகள் ஆகியவை வழக்கம் போல் இயங்கும். பிற கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும்.

வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுரை

நாளை (16.10.2024) மிக அதி கனமழை எதிர்பார்க்கப்படுவதை முன்னிட்டு, சென்னையில் உள்ள தனியார் அலுவலகங்கள் மிகக் குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டோ அல்லது தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்றும்படியோ அறிவுரை வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே இன்று சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்பது குறித்து முதல்வர் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பார் என்றும் இன்று மாலைக்குள் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஏற்கெனவே தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Schools Colleges Holiday: சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை; எங்கெல்லாம்?
Schools Colleges Holiday: சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை; எங்கெல்லாம்?
TN Rain News LIVE: அடுத்த 3 நாட்களுக்கு.... மழையின் வேகம் எப்படி இருக்கும்? புது புது அப்டேட்
TN Rain News LIVE: அடுத்த 3 நாட்களுக்கு.... மழையின் வேகம் எப்படி இருக்கும்? புது புது அப்டேட்
தமிழ்நாட்டில் எப்போது வரை மழை இருக்கும்? சென்னைக்கு எப்போது அதிகரிக்கும்?: புது அப்டேட்
தமிழ்நாட்டில் எப்போது வரை மழை இருக்கும்? சென்னைக்கு எப்போது அதிகரிக்கும்?: புது அப்டேட்
Chennai Rains: மஞ்சள், ஆரஞ்ச் மற்றும் ரெட் அலர்ட் என்றால் என்ன? வானிலை மையம் அப்படி சொல்வது ஏன்?
Chennai Rains: மஞ்சள், ஆரஞ்ச் மற்றும் ரெட் அலர்ட் என்றால் என்ன? வானிலை மையம் அப்படி சொல்வது ஏன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chennai rain : வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு! அடுத்த 2 நாட்களுக்கு... வானிலை மையம் சொல்வது என்ன?Thamo Anbarasan : ”ஒன்னும் வேலை நடக்கலயே” ரெய்டு விட்ட அமைச்சர்! விழிபிதுங்கி நின்ற அதிகாரிகள்Bridge Car Parking : ”கார்களுக்கு அபராதமா?” கார்களை எங்கே நிறுத்தலாம்? ஆக்‌ஷனில் இறங்கிய காவல்துறைEB Office Alcohol | பணி நேரத்தில் மது அருந்தியமின்வாரிய ஊழியர்கள் “ஏய் யாருடா நீங்க...”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Schools Colleges Holiday: சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை; எங்கெல்லாம்?
Schools Colleges Holiday: சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை; எங்கெல்லாம்?
TN Rain News LIVE: அடுத்த 3 நாட்களுக்கு.... மழையின் வேகம் எப்படி இருக்கும்? புது புது அப்டேட்
TN Rain News LIVE: அடுத்த 3 நாட்களுக்கு.... மழையின் வேகம் எப்படி இருக்கும்? புது புது அப்டேட்
தமிழ்நாட்டில் எப்போது வரை மழை இருக்கும்? சென்னைக்கு எப்போது அதிகரிக்கும்?: புது அப்டேட்
தமிழ்நாட்டில் எப்போது வரை மழை இருக்கும்? சென்னைக்கு எப்போது அதிகரிக்கும்?: புது அப்டேட்
Chennai Rains: மஞ்சள், ஆரஞ்ச் மற்றும் ரெட் அலர்ட் என்றால் என்ன? வானிலை மையம் அப்படி சொல்வது ஏன்?
Chennai Rains: மஞ்சள், ஆரஞ்ச் மற்றும் ரெட் அலர்ட் என்றால் என்ன? வானிலை மையம் அப்படி சொல்வது ஏன்?
"போன வருஷம் இங்க என்ன நடந்தது" என்ன செய்யப் போறீங்க .. நள்ளிரவில் களத்தில் இறங்கிய துணை முதல்வர்
Chennai Rains:
Chennai Rains: "219 படகுகள், 931 நிவாரண மையங்கள்" மழையை எதிர்கொள்ள தயார் - துணை முதலமைச்சர் உதயநிதி
IND vs NZ 1st Test:
IND vs NZ 1st Test:"அச்சச்சோ"கழுத்தில் ஏற்பட்ட திடீர் வழி! இந்தியா-நியூசிலாந்து டெஸ்டில் இருந்து விலகும் சுப்மன் கில்?
“இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை – களைகள் எல்லாம் நீக்கம்” அதிரடி காட்டிய EPS..!
“இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை – களைகள் எல்லாம் நீக்கம்” அதிரடி காட்டிய EPS..!
Embed widget