மாதாமாதம் ரூ.12,400 மத்திய அரசு உதவித்தொகை: முதுகலை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
மாணவர்களுக்கு மாதாமாதம் ரூ.12,400 உதவித்தொகை வழங்கும் வகையில் முதுகலை படிப்பில் சேரும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
மாணவர்களுக்கு மாதாமாதம் ரூ.12,400 உதவித்தொகை வழங்கும் வகையில் முதுகலை படிப்பில் சேரும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
மத்திய, மாநில அரசுகள் நாடு முழுவதும் மாணவர்களின் கல்விக்கு உரிய பங்களிப்பை வழங்கி வருகின்றன. படிக்க ஆர்வம் இருந்தும் பொருளாதார சூழல் காரணமாக, படிப்பில் சேர முடியாத மாணவ மாணவிகளுக்கும் கட்டணம் செலுத்த போதிய பணம் இன்றி தவிக்கும் மாணவர்களுக்கும் உதவும் வகையில், பல்வேறு விதமான உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், முதுகலை படிப்பில் சேரும் மாணவர்களுக்கு உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
ஏஐசிடிஇ முதுகலை பொறியியல், எம்.டெக்., எம்.ஆர்க்., முதுகலை வடிவமைப்பு (M.E/ M.Tech./ M.Arch./ M.Des.) ஆகிய படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு நவம்பர் 30ஆம் தேதி கடைசித் தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் மாணவர்களின் தகுதி குறித்த சரிபார்ப்பை டிசம்பர் 15ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழு நேரப் படிப்பை படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்படும். பகுதிநேர, தொலைதூர, அஞ்சல் வழிப் படிப்புகளுக்கு உதவித்தொகை கிடையாது. மாதம் தோறும் மாணவர்களின் திருப்திகரமான கல்வி செயல்திறன் மற்றும் பல்கலைக்கழக / நிறுவன விதிகளின்படி, மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
என்ன தகுதி?
* மாணவர் சேர்க்கையின்போது கேட் (GATE) / சீட் (CEED) மதிப்பெண்கள் அவசியம்.
முழு நேர படிப்பை மேற்கொள்பவராக இருக்க வேண்டும்.
* மாதாமாதம் ரூ.12,400 என்ற அளவில், 24 மாதங்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும்.
* இரட்டை டிகிரி படிக்கும் ஒருங்கிணைந்த படிப்புக்கான இறுதியாண்டு மாணவர்களும் இந்த உதவித் தொகைக்குத் தகுதியானவர்கள்.
* உதவித்தொகை பெற ஆதார் எண் கட்டாயம் ஆகும். ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு எண்ணுக்கு உதவித்தொகை ஆன்லைன் மூலம் செலுத்தப்படும்.
* ஸ்பான்சர் மூலம் படிக்கும் மாணவர்கள், மேனேஜ்மென்ட் கோட்டா மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் இந்த உதவித் தொகையைப் பெற முடியாது.
விண்ணப்பிப்பது எப்படி?
* https://pgscholarship.aicte-india.org/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
* இ- மெயில் மற்றும் பாஸ்வேர்டை உள்ளிட்டு, உள்ளே செல்ல வேண்டும்.
* அதில் தேவையான விவரங்களை உள்ளிட்டு உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
உதவித்தொகை குறித்த மத்திய அரசின் அறிவிப்பைக் காண: https://aicte-india.org/sites/default/files/PG%20scholarship%202023-24_Notifications.pdf
முதுகலை படிப்புக்கான உதவித்தொகை குறித்து https://aicte-india.org/sites/default/files/stdc/FAQ%20PG%20scholarship%202023-24.pdf என்ற இணைப்பின் மூலம் அறியலாம் என்று ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.
இதையும் வாசிக்கலாம்: Schools Holiday: பள்ளிகளுக்கு நவ.9 முதல் 11 நாட்கள் விடுமுறை: டெல்லி அரசு அறிவிப்பு- என்ன காரணம்?