CBSE Term 2 Exams Schedule: சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு: முழு பட்டியல்
சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
கரோனா பெருந்தொற்றுச் சூழல் காரணமாக சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த 2020ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டன. அதுபோன்ற எதிர்பாராத சூழல் மீண்டும் ஏற்படுவதைத் தவிர்க்கும் விதமாக, இரு பருவப் பொதுத் தேர்வு முறையை சிபிஎஸ்இ கடந்த ஆண்டு அறிவித்தது.
புதிய நடைமுறையின்படி, பொதுத் தேர்வு இரண்டாகப் பிரிக்கப்பட்டு, முதல் பருவத் தேர்வு நவம்பர் - டிசம்பர் மாதங்களிலும், 2-வது பருவத் தேர்வு மார்ச் - ஏப்ரல் மாதங்களிலும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தேர்வு 90 நிமிடங்களுக்கு நடைபெறுகிறது.
CBSE releases date sheet for Class 10 and 12 term-II board papers, both category of exams to commence from April 26
— Press Trust of India (@PTI_News) March 11, 2022
ஒவ்வொரு பருவத் தேர்விலும் பாடத்திட்டத்தின் 50 சதவீதப் பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். ஏதேனும் ஒரு தேர்வை நடத்த முடியாத சூழலில், ஏற்கெனவே நடத்தப்பட்ட தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
புதிய தேர்வு முறையை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், மாதிரி கேள்வித் தாள்களும், மாற்றி அமைக்கப்பட்ட பாடத்திட்டமும் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டன. ஏற்கெனவே திட்டமிட்டவாறு நடப்புக் கல்வி ஆண்டுக்கான (2021-22) சிபிஎஸ்இ முதல் பருவப் பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்றது.
இந்த சூழலில், இரண்டாம் பருவத் தேர்வுக்கான கால அட்டவணை இன்று மதியம் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியாகும் என்று தகவல் வெளியானது. எனினும் அவ்வாறு வெளியான தகவல் போலி என்று சிபிஎஸ்இ மறுப்பு தெரிவித்தது.
இந்நிலையில் இன்று சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
10-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு அட்டவணை
--------------------------------------
12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு அட்டவணை
--------------------------------------
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்