மேலும் அறிய

Class 12 Board Exam Hearing: சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் நடைபெறுமா? 2 நாட்களில் முடிவு!

கடந்தாண்டு பின்பற்றிய அதே  வழிமுறைகளை ஏன்  தற்போது மீண்டும் பின்பற்ற கூடாது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்

2021 சிபிஎஸ்இ பிளஸ் 2  வகுப்பு வாரியத் தேர்வுகள் நடத்துவது குறித்து இன்னும் இரண்டு நாட்களில் மத்திய அரசு முடிவெடுக்கும் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை வழக்கறிஞர் கே.கே வேணுகோபால்  தெரிவித்தார்.   

சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ 12ம் வகுப்பு வாரியத் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை  உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.  மனுதாரர் தனது மனுவில், " சிபிஎஸ்இ தவிர்த்து, இதர மாநிலங்களின் 12ம் வகுப்பு வாரியத்  தேர்வுகள் நடத்துவது குறித்தும், அகில இந்திய நுழைவுத் தேர்வுகள் நடத்துவது குறித்தும் நீதிமன்றம் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார். 

கடந்தாண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடக்கவிருந்த 12ஆம் வகுப்புக்களுக்கான தேர்வுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ரத்து செய்தது. மதிப்பீடு திட்டத்தின் அடிப்படையில் மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. சிபிஎஸ்இ பரிந்துரைத்த மதிப்பெண் திட்ட அடிப்படையில், மாணவர்கள் உயர்க்கல்வி நிறுவனங்ககளில் விண்ணப்பித்து சேர்க்கை பெற்றனர்.     


Class 12 Board Exam Hearing: சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் நடைபெறுமா? 2 நாட்களில் முடிவு!

 

இதற்கிடையே, 2021 கல்வியாண்டுக்கான சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள்,  மே 4ஆம் தேதி முதல் 2021 ஜூன் 10ஆம் தேதி வரை நடக்கும் எனவும், தேர்வு முடிவுகள் ஜூலை 15ஆம் தேதி அறிவிக்கப்படும்  எனவும் மத்திய கல்வி அமைச்சர் 2019 டிசம்பர் 31ம் தேதி அறிவித்தார்.  ஆனால், மார்ச் மாத நடுப்பகுதியில் இருந்து இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. தினசரி பாதிப்புகளும், இறப்புகளும் ஒட்டு மொத்த நாட்டையே நிலைகுழைய செய்தது.  இதனையடுத்து, 2021 சிபிஎஸ்இ 10ம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், 12ம் வகுப்புத் தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாகும் மத்தியக் கல்வி அமைச்சர் அறிவித்தார்.      

Class 12 Board Exams: பிளஸ் 2 தேர்வு வேண்டுமா, வேண்டாமா? மாநிலங்கள் பரிந்துரைக்க வேண்டுகோள்!

இந்நிலையில், வழக்கறிஞர் மம்தா சர்மா என்பவர் இந்தாண்டும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ 12ம் வகுப்பு வாரியத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும், பாரபட்சமற்ற பொறிமுறைகள் (Neutral Mechanisms) மூலம் தேர்வு முடிவுகளை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அறிவிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.   


Class 12 Board Exam Hearing: சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் நடைபெறுமா? 2 நாட்களில் முடிவு!
நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி அடங்கிய விடுமுறை கால அமர்வு இன்று வழக்கை விசாரித்தனர்.  விசாரணையின் போது, "கடந்தாண்டு பின்பற்றிய அதே  வழிமுறைகளை ஏன்  தற்போது மீண்டும் பின்பற்ற கூடாது" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், பின்பற்ற முடியாத காரணத்தை முறைப்படி தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினர். 

இதற்குப் பதிலளித்த தலைமை வழக்கறிஞர் கே.கே வேணுகோபால், " மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கல்வி நலனை மனதில் கொண்டு இன்மும் 2 நாட்களில் சிறந்த முடிவுகளை  மத்திய அரசு அறிவிக்கும்" என்று தெரிவித்தார். இதனையடுத்து, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வரும் வியாழக்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

மேலும், வாசிக்க: 

12ம் வகுப்புத் தேர்வுகள் தொடர்பாக சிபிஎஸ்இ முன்வைத்த முக்கிய 2 ஆலோசனை

தலைப்பு செய்திகள்

School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
School Student: 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு! அக்டோபர் 31 வரை கெடு! அரசு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!
School Student: 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு! அக்டோபர் 31 வரை கெடு! அரசு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!
Government Employees: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சி! ஓய்வூதியப் பிடித்தம் செய்யும் உத்தரவு வாபஸ்!
Government Employees: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சி! ஓய்வூதியப் பிடித்தம் செய்யும் உத்தரவு வாபஸ்!
கலைஞர் பெயரில் Ph.D ஆராய்ச்சி உதவித்தொகை.. லண்டன் பல்கலை.,யில் சபரீசன் தொடங்கிய சூப்பர் திட்டம்!
கலைஞர் பெயரில் Ph.D ஆராய்ச்சி உதவித்தொகை.. லண்டன் பல்கலை.,யில் சபரீசன் தொடங்கிய சூப்பர் திட்டம்!

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Cooum: துர்நாற்றம் வீசாது..! க்ளீனா டூரிஸ்ட் ஸ்பாட் ஆகும் சென்னை கூவம் - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
துர்நாற்றம் வீசாது..! க்ளீனா டூரிஸ்ட் ஸ்பாட் ஆகும் சென்னை கூவம் - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
Trichy TVK Conference : ‘திருச்சியை குறி வைத்த முதல்வர் விஜய்’ விரைவில் பிரம்மாண்ட வெற்றி மாநாடு..!
‘திருச்சியை குறி வைத்த முதல்வர் விஜய்’ விரைவில் பிரம்மாண்ட வெற்றி மாநாடு..!
New Secretariat: சென்னைக்கு நடுவே..! பேருந்து, ரயில், மெட்ரோ வசதியுடன் புதிய தலைமை செயலகம் - 13.22 ஏக்கர் திட்டம்
சென்னைக்கு நடுவே..! பேருந்து, ரயில், மெட்ரோ வசதியுடன் புதிய தலைமை செயலகம் - 13.22 ஏக்கர் திட்டம்
MK Stalin : ‘தொடரும் கொலைகள் – போலீஸ் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் இல்லையா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை..!
MK Stalin : ‘தொடரும் கொலைகள் – போலீஸ் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் இல்லையா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை..!
Shai Hope: அடிச்ச அடி அப்டி..! ஷாய் ஹோப்பை ஏலத்தில் எடுக்க IPL அணிகள் போட்டா போட்டி!
Shai Hope: அடிச்ச அடி அப்டி..! ஷாய் ஹோப்பை ஏலத்தில் எடுக்க IPL அணிகள் போட்டா போட்டி!
Hyundai Neira: 4 பவர்ட்ரெயின்களில் கெத்தா வரும் ஹுண்டாயின் 7 சீட்டர் - லாஞ்ச் எப்போது? வசதி, விலை எப்படி?
4 பவர்ட்ரெயின்களில் கெத்தா வரும் ஹுண்டாயின் 7 சீட்டர் - லாஞ்ச் எப்போது? வசதி, விலை எப்படி?
Hyundai முதல் Kia வரை... அடுத்தடுத்து களமிறங்கப்போகும் ஹைப்ரிட் கார்கள்! என்னென்ன?
Hyundai முதல் Kia வரை... அடுத்தடுத்து களமிறங்கப்போகும் ஹைப்ரிட் கார்கள்! என்னென்ன?
France Protest: பற்றி எரியும் ஃப்ரான்ஸ்..! வன்முறையான போராட்டம் - தீ வைப்பு, கடைகளில் கொள்ளை - அரசு வார்னிங்
பற்றி எரியும் ஃப்ரான்ஸ்..! வன்முறையான போராட்டம் - தீ வைப்பு, கடைகளில் கொள்ளை - அரசு வார்னிங்
Embed widget