மேலும் அறிய

CBSE Board Exams 2023: சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஹால் டிக்கெட் எப்போது? டவுன்லோடு செய்வது எப்படி?

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் விரைவில் வெளியாக உள்ளது. இதை டவுன்லோடு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் விரைவில் வெளியாக உள்ளது. இதை டவுன்லோடு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

கரோனா பெருந்தொற்றுச் சூழல் காரணமாக சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த 2020ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டன. அதுபோன்ற எதிர்பாராத சூழல் மீண்டும் ஏற்படுவதைத் தவிர்க்கும் விதமாக, இரு பருவப் பொதுத் தேர்வு முறையை கடந்த 2021ஆம் ஆண்டு சிபிஎஸ்இ அறிவித்தது.

புதிய நடைமுறையின்படி, பொதுத் தேர்வு இரண்டாகப் பிரிக்கப்பட்டு, முதல் பருவத் தேர்வு நவம்பர் - டிசம்பர் மாதங்களிலும், 2-வது பருவத் தேர்வு மார்ச் - ஏப்ரல் மாதங்களிலும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

புதிய தேர்வு முறையை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், மாதிரி கேள்வித் தாள்களும், மாற்றி அமைக்கப்பட்ட பாடத்திட்டமும் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டன. ஏற்கெனவே திட்டமிட்டவாறு நடப்புக் கல்வி ஆண்டுக்கான (2021-22) சிபிஎஸ்இ முதல் பருவப் பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்றது. 

34 லட்சம் மாணவர்கள்

அதைத் தொடர்ந்து சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை சிபிஎஸ்இ அறிவித்தது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 வரை 2 மணி நேரங்களுக்கு நடைபெறுகிறது. சிபிஎஸ்இ பொதுத் தேர்வை 34 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இதில் 18 லட்சம் பேர் 10ஆம் வகுப்பு மாணவர்கள் ஆவர். 12ஆம் வகுப்பில் இருந்து 16 லட்சம் மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.

ஒவ்வொரு பருவத் தேர்விலும் பாடத்திட்டத்தின் 50 சதவீதப் பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். ஏதேனும் ஒரு தேர்வை நடத்த முடியாத சூழலில், ஏற்கெனவே நடத்தப்பட்ட தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

திறன் அடிப்படையில் தேர்வுகள்

10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வில் கொள்குறி வகை, பதிலை உருவாக்கும் வகை, அசர்ஷன் வகை, ரீசனிங் மற்றும் சம்பவத்துக்கு ஏற்ற முடிவு (objective type, constructing response type, assertion and reasoning and case based format) ஆகிய பல்வேறு வடிவங்களில் கேள்விகள் இருக்கும். 

2022- 23ஆம் கல்வி ஆண்டில், 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தோராயமாக 40 சதவீதக் கேள்விகளும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தோராயமாக 30 சதவீதக் கேள்விகளும் திறன் அடிப்படையில் அமைய உள்ளன. 

இதன்படி, 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்குகின்றன. மார்ச் 21ஆம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளும் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்குகின்றன. ஏப்ரல் 5ஆம் தேதி வரை பிளஸ் 2 தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் பொதுத் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் விரைவில் வெளியாக உள்ளது. 

டவுன்லோடு செய்வது எப்படி?

* மாணவர்கள் cbse.gov.in என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்
* முகப்புப் பக்கத்தில் உள்ள admit card link என்ற பகுதியை  க்ளிக் செய்யவும்
* பதிவு எண், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களைப் பூர்த்தி செய்யவும்
* 10, 12ஆம் வகுப்பு ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்யவும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Jayam Ravi: கோலிவுட்டில் அடுத்த விவாகரத்து? கணவர் ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கிய மனைவி ஆர்த்தி!
Jayam Ravi: கோலிவுட்டில் அடுத்த விவாகரத்து? கணவர் ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கிய மனைவி ஆர்த்தி!
TN RAIN: மக்களே! 7 மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வெளுக்கப் போகும் கனமழை!
TN RAIN: மக்களே! 7 மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வெளுக்கப் போகும் கனமழை!
Breaking News LIVE: பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய்
Breaking News LIVE: பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய்
எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமி அவதூறு வழக்கு தாக்கல்
எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமி அவதூறு வழக்கு தாக்கல்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jayam Ravi: கோலிவுட்டில் அடுத்த விவாகரத்து? கணவர் ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கிய மனைவி ஆர்த்தி!
Jayam Ravi: கோலிவுட்டில் அடுத்த விவாகரத்து? கணவர் ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கிய மனைவி ஆர்த்தி!
TN RAIN: மக்களே! 7 மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வெளுக்கப் போகும் கனமழை!
TN RAIN: மக்களே! 7 மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வெளுக்கப் போகும் கனமழை!
Breaking News LIVE: பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய்
Breaking News LIVE: பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய்
எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமி அவதூறு வழக்கு தாக்கல்
எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமி அவதூறு வழக்கு தாக்கல்
"தார்மீக, அரசியல் தோல்விக்கு பிறகும் ஆணவம் தொடர்கிறது" பிரதமர் மோடிக்கு எதிராக கொந்தளித்த கார்கே!
நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து வளர்வது சந்தோஷம் தான் - வரிச்சூர் செல்வம்
நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து வளர்வது சந்தோஷம் தான் - வரிச்சூர் செல்வம்
Vikravandi by election: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் வேட்புமனு ஏற்பு, நிராகரிப்பு - முழு விவரம் இதோ
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் வேட்புமனு ஏற்பு, நிராகரிப்பு - முழு விவரம் இதோ
Atlee: ரசிகர்களே! சல்மான் கானுடன் இணைந்து நடிக்கிறாரா ரஜினி? அட்லீ மாஸ்டர் ப்ளான்
Atlee: ரசிகர்களே! சல்மான் கானுடன் இணைந்து நடிக்கிறாரா ரஜினி? அட்லீ மாஸ்டர் ப்ளான்
Embed widget