மேலும் அறிய

CBSE Results 2024: எந்த நேரமும் 10, 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகலாம்: சிபிஎஸ்இ தகவல்

நாடு முழுவதும் 39 லட்சம் மாணவர்கள் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை எழுதி, தேர்வு முடிவுகளைக் காத்திருக்கின்றனர்.

மே 20ஆம் தேதி என்றில்லை. எந்த நேரமும் 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்று சிபிஎஸ்இ அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். 

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.) 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் பிப்ரவரி 15ம் தேதி அன்று தொடங்கின. 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு மார்ச் 13ம் தேதியும், 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 2ம் தேதியும் முடிவடைந்தன. இந்த ஆண்டு 12.38 லட்சம் மாணவர்கள், பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர்.

மே 12ஆம் தேதி வெளியான 2023 தேர்வு முடிவுகள்

கடந்த ஆண்டைப் பொறுத்தவரையில், 10ஆம் வகுப்புத் தேர்வை 20,16,779 மாணவ- மாணவிகள் எழுதினர். இதில் 93.12 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை 2023ஆம் ஆண்டு, 14,50174 மாணவர்கள் எழுதிய நிலையில், தேர்ச்சி பெற்றவர்களின் விகிதம் 90.68 ஆக இருந்தது. கடந்த ஆண்டு மே 12ஆம் தேதி, 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்டது.  

இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் எப்போது (CBSE Board exam result date 2024) என்று கேள்வி எழுந்தது. சில போலித் தேதிகள் கூட இணையத்தில் வைரலாகின. இதைத் தொடர்ந்து மே 20ஆம் தேதிக்குப் பிறகு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

எந்த நேரமும் தேர்வு முடிவுகள் வெளியாகலாம்

இந்த நிலையில் எந்த நேரமும் 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்று சிபிஎஸ்இ அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். சிபிஎஸ்இ திறன் கல்வி மற்றும் பயிற்சி இயக்குனர் பிஸ்வஜித் சாஹா தனியார் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ’’தேர்வு முடிவுகள் குறித்த துல்லியமான தேதியை என்னால் கூற முடியாது. ஏற்கெனவே மே 20ஆம் தேதிக்குப் பிறகே 10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவித்து இருந்தோம்.

தேர்வு முடிவுகள் அறிவிப்புப் பணியில் சிபிஎஸ்இ வாரியம் ஈடுபட்டுள்ளது. இந்தப் பணி முடிவடைந்ததும் தேர்வு முடிவுகளை நாங்கள் எந்த நேரத்திலும் வெளியிடுவோம். மே 20ஆம் தேதிக்கு முன்னதாகவும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படலாம்’’ என்று பிஸ்வஜித் சாஹா தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்காக, அனைத்துப் பாடங்களிலும் 33 சதவீத மதிப்பெண்களைப் பெற வேண்டியது அவசியம் ஆகும்.

கூடுதல் தகவல்களுக்கு: https://cbseresults.nic.in/

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர அறிய வாய்ப்பு! செங்கல்பட்டு மாணவர்களுக்கு ஹாப்பியான நியூஸ்!
அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர அறிய வாய்ப்பு! செங்கல்பட்டு மாணவர்களுக்கு ஹாப்பியான நியூஸ்!
TET தாள்-1 தேர்வு ஓவர்... நாளை தாள்-2 தேர்வு! மயிலாடுதுறை கலெக்டர் வெளியிட்ட முக்கிய விபரம்!
TET தாள்-1 தேர்வு ஓவர்... நாளை தாள்-2 தேர்வு! மயிலாடுதுறை கலெக்டர் வெளியிட்ட முக்கிய விபரம்!
கோடை விடுமுறையில் புத்தக வாசிப்பில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு.. உற்சாகம் ஏற்படுத்தும் பள்ளி நிர்வாகம் !
கோடை விடுமுறையில் புத்தக வாசிப்பில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு.. உற்சாகம் ஏற்படுத்தும் பள்ளி நிர்வாகம் !
சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!
சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Mamata Banerjee: ”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
Embed widget