மேலும் அறிய

CAT 2024: ஐஐஎம்களில் எம்பிஏ படிக்க அவகாசம் நீட்டிப்பு; எப்போது வரை, எப்படி விண்ணப்பிக்கலாம்?

ஐஐஎம்களில் எம்பிஏ படிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தப் படிப்புகளில் சேர நடத்தப்படும் கேட் நுழைவுத் தேர்வுக்கு செப்டம்பர் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CAT 2024 Admission: ஐஐஎம்களில் எம்பிஏ படிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தப் படிப்புகளில் சேர நடத்தப்படும் கேட் நுழைவுத் தேர்வுக்கு செப்டம்பர் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் 

நாடு முழுவதும் புகழ்பெற்ற மேலாண்மை நிறுவனங்களான ஐஐஎம்களில் எம்பிஏ எனப்படும் முதுகலை மேலாண்மைப் படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.  இந்தப் படிப்புகளில் சேர கேட் (CAT – Common Admission Test)  என்னும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் நாடு முழுவதும் நடத்தப்படும் இந்தத் தேர்வை சுமார் 2 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். 2024ஆம் ஆண்டுக்கான கேட் தேர்வு நவம்பர் 24ஆம் தேதி நடைபெற உள்ளது. 

ஐஐஎம்கள் நாடு முழுவதும் அகமதாபாத், அமிர்தசரஸ், பெங்களூரு, புத்தகயா, கல்கத்தா, இந்தூர், ஜம்மு, காஷிபூர், கோழிக்கோடு, லக்னோ, நாக்பூர், ராய்ப்பூர், ராஞ்சி, ரோஹ்டக், சம்பல்பூர், ஷில்லாங், சிர்மவுர், திருச்சி, உதய்பூர், விசாகப்பட்டிணம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

விண்ணப்பிக்க என்ன தகுதி?

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் அல்லது அதற்கு சமமான சி.ஜி.பி.ஏ.வைப் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, மாற்றுத்திறனாளி மாணவர்கள் இட ஒதுக்கீட்டின்கீழ் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். 

கட்டங்களாகத் தேர்வு

இந்த ஆண்டு ஐஐஎம் கல்கத்தா கேட் தேர்வை நடத்துகிறது. பொது நுழைவுத் தேர்வு தேர்வு 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. குறிப்பாக காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை முதல்கட்டத் தேர்வும் 2ஆவது கட்டத் தேர்வு 12.30 முதல் 2.30 மணி வரையும் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் நடைபெற உள்ளது. 

விண்ணப்பக் கட்டணம் 

எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு - ரூ.1,250 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல பிற அனைத்துத் தேர்வர்களுக்கும் - ரூ.2500 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இடங்கள் இட ஒதுக்கீடு

எம்பிஏ படிப்புகளில் சேர 15 சதவீத இடங்கள் பட்டியல் சாதி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பழங்குடி (ST) வேட்பாளர்களுக்கு சுமார் 7.5 சதவீதம், 27 சதவீத இடங்கள் கிரீமி லேயர் அல்லாத (NC-OBC) இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு (EWS) 10 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பிப்பது எப்படி?

கூடுதல் விவரங்களுக்கு: https://cdn.digialm.com/per/g06/pub/32842/EForms/CAT24/CAT_2024_Information_Bulletin.pdf

முழு விவரங்களை அறியhttps://iimcat.ac.in/

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மக்களே கவனம்! இன்று இரவு 14 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம்
மக்களே கவனம்! இன்று இரவு 14 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம்
IPL 2025 RCB vs RR: சால்ட் சரவெடி.. கோலி மிரட்டல் அடி.. படிக்கல் பவர்புல் அடி! ராஜஸ்தானை அசால்டா ஜெயிச்ச ஆர்சிபி
IPL 2025 RCB vs RR: சால்ட் சரவெடி.. கோலி மிரட்டல் அடி.. படிக்கல் பவர்புல் அடி! ராஜஸ்தானை அசால்டா ஜெயிச்ச ஆர்சிபி
Bangalore Pugazhendi:
"அதிமுகவை இனி ஒருங்கிணைக்க முடியாது" - பெங்களூர் புகழேந்தி
அண்ணாமலையோட டிராமா! நயினார் நாகேந்திரன் செருப்பு கொடுத்தது இதுக்குத்தான் - எஸ்வி சேகர் பேட்டி
அண்ணாமலையோட டிராமா! நயினார் நாகேந்திரன் செருப்பு கொடுத்தது இதுக்குத்தான் - எஸ்வி சேகர் பேட்டி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RB Udhayakumar vs EPS : மேடையில் அசிங்கப்படுத்திய EPS!கோபத்தின் உச்சியில் RB உதயகுமார்  சுக்குநூறாய் உடைந்த அதிமுக?Panguni Uthiram Police Issue : ”பெரிய ம***டா நீ.. போடா” பக்தரை கெட்ட வார்த்தையில் திட்டிய போலீஸ்John Jebaraj Arrest : தப்பி ஓடிய ஜான் ஜெபராஜ் தட்டித்தூக்கிய போலீஸ் மூணாறில் அதிரடி கைது : TN Policeநடிகர் ஶ்ரீ-க்கு என்ன ஆச்சு?ஆடை இல்லாமால் வீடியோ பாலின மாற்று சிகிச்சையா? : Sri Bluetick

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மக்களே கவனம்! இன்று இரவு 14 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம்
மக்களே கவனம்! இன்று இரவு 14 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம்
IPL 2025 RCB vs RR: சால்ட் சரவெடி.. கோலி மிரட்டல் அடி.. படிக்கல் பவர்புல் அடி! ராஜஸ்தானை அசால்டா ஜெயிச்ச ஆர்சிபி
IPL 2025 RCB vs RR: சால்ட் சரவெடி.. கோலி மிரட்டல் அடி.. படிக்கல் பவர்புல் அடி! ராஜஸ்தானை அசால்டா ஜெயிச்ச ஆர்சிபி
Bangalore Pugazhendi:
"அதிமுகவை இனி ஒருங்கிணைக்க முடியாது" - பெங்களூர் புகழேந்தி
அண்ணாமலையோட டிராமா! நயினார் நாகேந்திரன் செருப்பு கொடுத்தது இதுக்குத்தான் - எஸ்வி சேகர் பேட்டி
அண்ணாமலையோட டிராமா! நயினார் நாகேந்திரன் செருப்பு கொடுத்தது இதுக்குத்தான் - எஸ்வி சேகர் பேட்டி
Tamil New Year 2025: சித்திரையா, தையா: தமிழ் புத்தாண்டு எது? அறிவியல் சொல்வது என்ன?
Tamil New Year 2025: சித்திரையா, தையா: தமிழ் புத்தாண்டு எது? அறிவியல் சொல்வது என்ன?
IPL 2025 RCB vs RR: ஜெய்ஸ்வால் சிறப்பு... ஜோரல் ஜோரான அடி! ஆர்சிபி! பவுலிங்கில் பலம்! 174 ரன்களை எட்டுமா பெங்களூர்?
IPL 2025 RCB vs RR: ஜெய்ஸ்வால் சிறப்பு... ஜோரல் ஜோரான அடி! ஆர்சிபி! பவுலிங்கில் பலம்! 174 ரன்களை எட்டுமா பெங்களூர்?
"டீ சூப்பர்" பற்றி எரியும் முர்ஷிதாபாத்.. உள்ளூர் எம்பி யூசுப் பதான் பதிவால் காண்டான மக்கள்
PMK Anbumani: அதிரும் தைலாபுரம்.. ”ராமதாஸுக்கு அதிகாரமே இல்லை, கூட்டணி எனது முடிவு”  அன்புமணி அதிரடி
PMK Anbumani: அதிரும் தைலாபுரம்.. ”ராமதாஸுக்கு அதிகாரமே இல்லை, கூட்டணி எனது முடிவு” அன்புமணி அதிரடி
Embed widget