போராட்ட காலத்தில் ஆசிரியர்கள் மீது வழக்குகள், ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து- அதிரடி காட்டும் அரசு!
ஜாக்டோ ஜியோ போராட்ட காலத்தில் பதியப்பட்ட வழக்குகள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜாக்டோ ஜியோ போராட்ட காலத்தில் பதியப்பட்ட வழக்குகள் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுகிறது என தற்போதைய பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போதுவரை முதல் தகவல் அறிக்கை பெறப்பட்டு நிலுவை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
2016, 2017 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலை நிறுத்தப் போராட்ட காலங்கள் (10.02.2016 முதல் 19.02.2016 வரை, 22.08.2017 (ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்), 07.09.2017 முதல் 15.09.2017 வரை மற்றும் 22.01.2019 முதல் 30.01.2019 வரை பணிக்காலங்களாக முறைப்படுத்தப்படுகின்றன)
மேற்குறிப்பிட்ட வேலை நிறுத்தப் போராட்டங்களுடன் தொடர்புடைய தற்காலிகப் பணி நீக்கக் காலமும், பணிக் காலமாக முறைப்படுத்தப்படுகிறது. அவ்வேலை நிறுத்தப் போராட்டங்களின் காரணமாக அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்தும் கைவிடப்படுகின்றன.
உரிய முன்னுரிமை வழங்க நடவடிக்கை
அவ்வொழுங்கு நடவடிக்கைகளின் காரணமாக, பதவி உயர்வு பெறுவதில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அலுவலர்களால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். வேலை நிறுத்தப் போராட்டத்தின்போது பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களை, அதே இடத்தில் மீண்டும் பணியமர்த்தும் வகையில், பணியிட மாற்றத்திற்கான கலந்தாய்வின்போது அவர்களுக்கான உரிய முன்னுரிமையினை வழங்க, பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகளால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்:
07.09.2017 முதல் 15.09.2017 வரையிலான வேலை நிறுத்த நாட்களை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமை, விடுமுறை நாட்களில் பணிபுரிந்து ஊதியம் பெற்ற பணியாளர்களுக்கு, இவ்வேலை நிறுத்தக் காலத்தினை தற்போது பணிக்காலமாக முறைப்படுத்துவதன் காரணமாக மீண்டும் ஊதியம் பெற்று வழங்கும் நிலை எழாது; வேலை நிறுத்தப் போராட்டக் காலத்தினை மேற்குறிப்பிட்டவாறு பணிக்காலமாக முறைப்படுத்தும் போது, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாகவே சம்பந்தப்பட்ட பணியாளர் தகவலின்றி பணிக்கு வராமல் இருந்துள்ளார் என்பதையும், வேலை நிறுத்தப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டவுடன், அவர் உடனடியாக பணிக்கு திரும்பி உள்ளார் என்பதையும் சம்பந்தப்பட்ட விடுப்பு முறைப்படுத்தும் அலுவலர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
அதே இடத்தில் மீண்டும் பணியமர்த்த நடவடிக்கை
வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களை, அதே இடத்தில் மீண்டும் பணியமர்த்தும் வகையில், பணியிட மாற்றத்திற்கான கலந்தாய்வின் போது அவர்களுக்கான உரிய முன்னுரிமையினை வழங்க, பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகளால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வேலை நிறுத்த நாட்களை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமை, விடுமுறை நாட்களில் பணிபுரிந்து ஊதியம் பெற்ற பணியாளர்களுக்கு, இவ்வேலை நிறுத்தக் காலத்தினை தற்போது பணிக்காலமாக முறைப்படுத்துவதன் காரணமாக மீண்டும் ஊதியம் பெற்று வழங்கும் நிலை எழாது.
வேலை நிறுத்தப் போராட்டக் காலத்தினை மேற்குறிப்பிட்டவாறு பணிக்காலமாக முறைப்படுத்தும்போது, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாகவே சம்பந்தப்பட்ட பணியாளர் தகவலின்றி பணிக்கு வராமல் இருந்துள்ளார் என்பதையும், வேலை நிறுத்தப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டவுடன், அவர் உடனடியாக பணிக்கு திரும்பி உள்ளார் என்பதையும் சம்பந்தப்பட்ட விடுப்பு முறைப்படுத்தும் அலுவலர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






















