CA Exam Results: சிஏ தேர்வு 2022: முடிவுகள் இன்று வெளியீடு- 12,449 பேர் சிஏவில் தேர்ச்சி..!
கடந்த மே மாதம் நடைபெற்ற சிஏ தேர்வின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.
இந்தியா முழுவதும் ஆடிட்டர் படிப்புகளுக்கான சிஏ தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்வுகளின் முடிவு இன்று வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சிஏ தேர்வுகளின் முடிவு இன்று வெளியாகியுள்ளது. அதன்படி 12,449 பேர் சிஏ தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
அதன்படி முதல் நிலையில் 14,643 பேரும், இரண்டாம் நிலையில் 13,877 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த இரண்டு நிலைகளிலும் சேர்த்து 3695 பேர் தேர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் அகில இந்திய அளவில் அனில் ஷா என்பவர் 800க்கு 642 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தை அக்ஷத் கோயல் 800க்கு 639 மதிப்பெண்கள் பெற்று பிடித்துள்ளார். மூன்றாவது இடத்தை சூரத்தைச் சேர்ந்த ஷருஸ்தி சங்கவி 800க்கு 611 மதிப்பெண்கள் பெற்று பிடித்துள்ளார்.
Results of the ICAI Chartered Accountants Final Examination held in May 2022 have been declared.
— Institute of Chartered Accountants of India - ICAI (@theicai) July 15, 2022
To check results please visithttps://t.co/A1v3YCy9DO pic.twitter.com/ZpigmTkMbu
கடந்த மே மாதம் சிஏ படிப்புக்களுக்கான முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை தேர்வுகள் நடைபெற்றது. இந்தத் தேர்வின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்று ஆவலாக மாணவர்கள் காத்திருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஜூலை 15 அல்லது 16ஆம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தகவல் பரவி வந்தது. இந்தச் சூழலில் இன்று காலை சிஏ தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளன. இந்தத் தேர்வின் முடிவுகளை மாணவர்கள்
caresults.icai.org
icai.nic.in
icaiexam.icai.org
என்ற இணையதளங்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த தளங்களில் மாணவர்கள் அவர்களுடைய மதிப்பெண் பட்டியல்களையும் தற்போது பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் படிக்க:Rs 1000 Scholarship: கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்