Rs 1000 Scholarship: கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஜூலை18 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கால அவகாசம் நீட்டிப்பு:
தமிழ்நாட்டில், கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு, ஜூலை 18 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 10 ஆம் தேதியுடன் கால அவகாசம் முடிந்த நிலையில், கால அவகாசத்தை நீட்டிப்பதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
ரூ.1,000 உயர் கல்வி உறுதித்தொகை:
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர் கல்வி உறுதித் திட்டத்தின்கீழ் மாதாமாதம் ரூ.1,000 உயர் கல்வி உறுதித்தொகை வழங்கப்பட உள்ளது. அரசுக் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, சுயநிதிக் கல்லூரிகளில் தங்களது உயர் கல்வியைத் தொடரும் அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
ஜீலை 18 வரை நீட்டிப்பு:
மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கும் அவகாசம் ஜீலை 10ஆம் தேதியுடன் நிறைவுபெற்ற நிலையில், மொத்தம் 3.58 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியது. இந்நிலையில் ஜீலை 18 வரை விண்ணப்பிக்கலாம என கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Also Read: TNHRCE JOB: இந்து சமய அறநிலையத்துறையில் ரூ. 35,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்