(Source: ECI/ABP News/ABP Majha)
Syllabus change: கலை, அறிவியல் கல்லூரி பாடத்திட்டத்தில் மாற்றம்.. அமலாவது எப்போது? விவரத்தைக் கூறிய அமைச்சர் பொன்முடி!
பொறியியல் கல்லூரி பாடத்திட்டங்களைப் போலவே, கலை, அறிவியல் பாடத்திட்டங்களும் மாறுகின்றன என்றும் இந்த மாற்றம் இந்த ஆண்டு இரண்டாவது செமஸ்டரில் அமல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
பொறியியல் கல்லூரி பாடத்திட்டங்களைப் போலவே, கலை, அறிவியல் பாடத்திட்டங்களும் மாறுகின்றன என்றும் இந்த மாற்றம் இந்த ஆண்டு இரண்டாவது செமஸ்டரில் அமல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
முதலில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகியோருக்கு சிறப்புக் கலந்தாய்வு ஆகஸ்ட் 20ஆம் தேதி தொடங்கி, நடைபெற்றது. ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை இந்தக் கலந்தாய்வு நடைபெற்றது.
பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைப்பு
இதற்கிடையே ஆகஸ்ட் 25ஆம் தேதி)முதல் பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்குவதாக இருந்தது. எனினும் நீட் தேர்வு முடிவுகள் தேதி அப்போது வெளியாகாததால்,பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு கால வரையறையின்றி, ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து செப்டம்பர் 7ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று என்டிஏ அறிவித்தது. இந்நிலையில் செப்டம்பர் 10ஆம் தேதி உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, ’’வழக்கம்போல 69 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்படும். எல்லாப் பிரிவுகளிலும் உள் இட ஒதுக்கீடாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்படும்.
4 கட்டங்களாக நவம்பர் 3ஆம் தேதி வரை பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெறும். நவம்பர் 15ஆம் தேதி அன்று துணைக் கலந்தாய்வு தொடங்கி, நவம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது. எஸ்சிஏ டூ எஸ்சி கலந்தாய்வு நவம்பர் 19ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி முடிகிறது. அன்றைய தினமே கலந்தாய்வு முடிவடைகிறது.
6 முத 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
பொறியியல் கல்லூரி பாடத்திட்டங்களைப் போலவே, கலை, அறிவியல் பாடத்திட்டங்களும் மாறுகின்றன என்றும் இந்த மாற்றம் இந்த ஆண்டு இரண்டாவது செமஸ்டரில் அமல்படுத்தப்படும். இந்த ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளில் தமிழ் பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒவ்வொரு செமஸ்டரிலும் தமிழ் பாடம் கட்டாயம் கொண்டு வரப்படும். ’’ என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
அனைத்துக் கல்லூரி முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டம்
நான் முதல்வன் திட்டத்தின்கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 29ஆம் தேதி அனைத்துக் கல்லூரி முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், கலை, அறிவியல் பாடத்திட்டங்களில் மாற்றம் மற்றும் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒவ்வொரு செமஸ்டரிலும் தமிழ் பாடம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.