Postgraduate | பட்ட மேற்படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: ஹோமியோபதி இயக்குநரகம் அறிவிப்பு
எம்.டி. (ஓமியோபதி) பட்ட மேற்படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
![Postgraduate | பட்ட மேற்படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: ஹோமியோபதி இயக்குநரகம் அறிவிப்பு Apply Online for Postgraduate Studies: Directorate of Homeopathy Postgraduate | பட்ட மேற்படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: ஹோமியோபதி இயக்குநரகம் அறிவிப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/27/ccf4b04e04b372926d1e2a8ba251dd6b_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
எம்.டி. (ஹோமியோபதி) பட்ட மேற்படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
2021- 2022 ஆம் கல்வியாண்டுக்கான எம்.டி. (ஹோமியோபதி) பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாட்டிலுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள இரண்டு சுயநிதி ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகளான சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் ஒயிட் மெமோரியல் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்டி.ஹோமியோபதி) மருத்துவப்
பட்டமேற்படிப்புகளில் 2021- 2022 ஆம் கல்வி ஆண்டில் சேருவதற்கான விண்ணப்பங்கள் ஓமியோபதி மருத்துவத்திற்கான AAIPGET - 20212-ல் தகுதி பெற்றவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன
1. அரசு ஒதுக்கீட்டு இடங்கள்
2. நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள்
விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை (முறையே அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனித்தனியாக) tn.health.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
நேரில் விண்ணப்பங்கள் இல்லை
அரும்பாக்கம், சென்னை-106இல் உள்ள இந்திய மருத்துவம் (ம) ஹோமியோபதி இயக்குநரகத்திலோ தேர்வுக்குழு அலுவலகத்திலோ அல்லது எந்தவொரு அரசு இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவ கல்லூரிகளிலிருந்தோ விண்ணப்பங்கள் வழங்கப்படமாட்டாது.
விண்ணப்பப் படிவம் பதிவிறக்கம் செய்யத் தொடக்க நாள்: 28.12.2021 காலை 10.00 மணி
* விண்ணப்பப் படிவம் பதிவிறக்கம் செய்யக் கடைசி நாள்:18.01.2022 பிற்பகல் 05.00 மணி வரை
* பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தைச் சமர்ப்பிக்கக் கடைசி நாள் 18.01.2022 பிற்பகல் 05.30 மணி வரை.
விண்ணப்பக் கட்டணம், தகுதி, மேற்கண்ட படிப்புகளுக்கான சுயநிதி ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகளின் பட்டியல் போன்ற தகவல்களை tn.health.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட உரிய தகவல் தொகுப்பேட்டில் காணலாம்.
அதில் தெரிவித்துள்ளவாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட உரிய விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து, உடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து,
செயலாளர், தேர்வுக்குழு,
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை அலுவலகம்,
அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம்,
அரும்பாக்கம், சென்னை-600 106
என்ற முகவரியில் 18.01.2022 பிற்பகல் 5.30 மணி அல்லது அதற்கு முன் வந்தடையுமாறு சமர்ப்பிக்க வேண்டும்.
தாமதமாக, கடைசி நாளிற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்பட மாட்டாது. கலந்தாய்வின்போது நடைமுறையில் உள்ள இனசுழற்சி விதிமுறைகள் / ஆணைகளின்படி பின்பற்றப்படும்.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)