மேலும் அறிய

அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; அதிரடி காட்டிய உச்ச நீதிமன்றம்!

சென்னை மாநகர காவல் ஆணையர் குறித்துத் தெரிவித்த கருத்துகளுக்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.  

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், முதல் தகவல் அறிக்கை கசிய காரணமாக இருந்தவர்கள், மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அதேபோல சென்னை மாநகர காவல் ஆணையர் குறித்துத் தெரிவித்த கருத்துகளுக்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.  

கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் தேதி இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். அடுத்த நாள் கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

அண்ணா பல்கலை வளாகத்தில் இருந்த சிசிடிவி அடிப்படையில் போலீசார் ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர். வழக்கின் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட நிலையில், அது இணையத்தில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் மாணவியின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் பகிரங்கமாக வெளியிடப்பட்டன.

முதல் தகவல அறிக்கையில், ’’நண்பருடன் தனியாக அந்த மாணவி இருந்ததை ஞானசேகரன் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். அதை மாணவியிடம் காண்பித்து, ’’என்னுடைய இச்சைக்கு இணங்காவிட்டால், இதை கல்லூரி டீன், பேராசிரியர்களிடம் காண்பித்து கல்லூரியை விட்டே வெளியேற்ற வைப்பேன்’’ என்று மிரட்டியுள்ளார்.

போதாததற்கு ’’மாணவியின் தந்தை எண்ணை செல்போனில் இருந்து எடுத்து, தந்தைக்கே அந்த வீடியோவை அனுப்பி வைப்பேன்’’ என்றும் ’’சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிட்டு விடுவேன்’’ என்றும் மிரட்டி உள்ளார்.

மாணவியும் மாணவரும் எவ்வளவு கெஞ்சியும் கேட்காமல், மாணவரை விரட்டிவிட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்’’ என்று முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டது.

உயர் நீதிமன்றம் சொன்னது என்ன?

ஏற்கெனவே இதுதொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற கோரி வழக்கறிஞர்கள் வரலட்சுமி மற்றும் மோகன்தாஸ் ஆகியோர் மனுத் தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம் மற்றும் வி.லட்சுமி நாராயணன் ஆகியோர், 25 லட்சம் ரூபாயை வழங்க உத்தரவிட்டு இருந்தனர். 

அதேபோல, உரிய அனுமதி பெறாமல் செய்தியாளர் சந்திப்பு நடத்திய காவல் ஆணையர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி இருந்தனர். இந்த நிலையில் ஆணையர் குறித்து உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

EPS ADMK: கோட்டைவிடும் அதிமுக, தீவிரம் காட்டாத எடப்பாடி? டேமேஜ் கண்ட்ரோலில் திமுக மும்முரம், ஸ்டாலின் மூவ்
EPS ADMK: கோட்டைவிடும் அதிமுக, தீவிரம் காட்டாத எடப்பாடி? டேமேஜ் கண்ட்ரோலில் திமுக மும்முரம், ஸ்டாலின் மூவ்
Modi in Ghana: கானாவில் 21 குண்டுகள் முழங்க மோடிக்கு வரவேற்பு; ‘ஹரே கிருஷ்ணா‘ பாடல் பாடி வரவேற்ற இந்தியர்கள்
கானாவில் 21 குண்டுகள் முழங்க மோடிக்கு வரவேற்பு; ‘ஹரே கிருஷ்ணா‘ பாடல் பாடி வரவேற்ற இந்தியர்கள்
ISRO Job Opportunity: பி.இ, பி.டெக் படித்தவர்கள் கவனத்திற்கு; இஸ்ரோவில் பணியாற்ற ஒரு வாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி.?
பி.இ, பி.டெக் படித்தவர்கள் கவனத்திற்கு; இஸ்ரோவில் பணியாற்ற ஒரு வாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி.?
Shubman Gill: நான் தான் இருக்கேன்ல.. சதம் விளாசி மாஸ் காட்டிய கேப்டன் கில், இங்கிலாந்தில் பாரத் ஆர்மி சம்பவம்
Shubman Gill: நான் தான் இருக்கேன்ல.. சதம் விளாசி மாஸ் காட்டிய கேப்டன் கில், இங்கிலாந்தில் பாரத் ஆர்மி சம்பவம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?
Sivagangai Ajith Attack Video | அடித்தே கொன்ற POLICE! நடுங்க வைக்கும் பகீர் காட்சி வெளியான வீடியோ
Actor KPY Bala | “அண்ணன் நான் இருக்கேமா” வீடு கட்டிக்கொடுத்த KPY பாலா! Surprise கொடுத்த சிறுமி
”அஜித்குமார் LOCKUP DEATH!வாய் திறங்க ஸ்டாலின்” கொந்தளித்த VIJAY! Sivagangai Custodial Death

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK: கோட்டைவிடும் அதிமுக, தீவிரம் காட்டாத எடப்பாடி? டேமேஜ் கண்ட்ரோலில் திமுக மும்முரம், ஸ்டாலின் மூவ்
EPS ADMK: கோட்டைவிடும் அதிமுக, தீவிரம் காட்டாத எடப்பாடி? டேமேஜ் கண்ட்ரோலில் திமுக மும்முரம், ஸ்டாலின் மூவ்
Modi in Ghana: கானாவில் 21 குண்டுகள் முழங்க மோடிக்கு வரவேற்பு; ‘ஹரே கிருஷ்ணா‘ பாடல் பாடி வரவேற்ற இந்தியர்கள்
கானாவில் 21 குண்டுகள் முழங்க மோடிக்கு வரவேற்பு; ‘ஹரே கிருஷ்ணா‘ பாடல் பாடி வரவேற்ற இந்தியர்கள்
ISRO Job Opportunity: பி.இ, பி.டெக் படித்தவர்கள் கவனத்திற்கு; இஸ்ரோவில் பணியாற்ற ஒரு வாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி.?
பி.இ, பி.டெக் படித்தவர்கள் கவனத்திற்கு; இஸ்ரோவில் பணியாற்ற ஒரு வாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி.?
Shubman Gill: நான் தான் இருக்கேன்ல.. சதம் விளாசி மாஸ் காட்டிய கேப்டன் கில், இங்கிலாந்தில் பாரத் ஆர்மி சம்பவம்
Shubman Gill: நான் தான் இருக்கேன்ல.. சதம் விளாசி மாஸ் காட்டிய கேப்டன் கில், இங்கிலாந்தில் பாரத் ஆர்மி சம்பவம்
Auto Sale June 2025: வாங்கி குவித்த இந்தியர்கள் - டாடா மேல என்னப்ப அவ்ளோ காண்டு? ரைசிங் ஸ்டார்களாகும் கியா, ஸ்கோடா
Auto Sale June 2025: வாங்கி குவித்த இந்தியர்கள் - டாடா மேல என்னப்ப அவ்ளோ காண்டு? ரைசிங் ஸ்டார்களாகும் கியா, ஸ்கோடா
அஜித் வீட்டில் விஜய்.. ”நான் இருக்கேன் மா” கையை இருகிப்பிடித்து ஆறுதல் சொன்ன தவெக தலைவர்..
அஜித் வீட்டில் விஜய்.. ”நான் இருக்கேன் மா” கையை இருகிப்பிடித்து ஆறுதல் சொன்ன தவெக தலைவர்..
Hari Nadar : ‘சிறைக்கு சென்றவருடன் அமைச்சர் பெரியகருப்பன்’ ஹரி நாடாரை அருகே வைத்துக்கொண்டது ஏன்..? – பரபரப்பு பின்னணி..!
‘சிறைக்கு சென்றவருடன் அமைச்சர் பெரியகருப்பன்’ ஹரி நாடாரை அருகே வைத்துக்கொண்டது ஏன்..?
அன்றே மோசடி செய்த நிகிதா.. அதுவும் அவர் பேர்ல? அஜித்குமார் மரண வழக்கில் புதிய திருப்பம்
அன்றே மோசடி செய்த நிகிதா.. அதுவும் அவர் பேர்ல? அஜித்குமார் மரண வழக்கில் புதிய திருப்பம்
Embed widget