Anna University Arrear Exam: கடைசி வாய்ப்பு; மிஸ் பண்ணிடாதீங்க- 15 ஆண்டுகளாக அரியர் வைத்திருப்போர் மீண்டும் தேர்வெழுலாம்- எப்படி?
Anna University Special arrear Exam: நீண்ட காலமாக அரியர் வைத்திருப்போர் ஆக.30 முதல் செப்.18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து, படித்து முடிக்காமல், அரியர் வைத்த மாணவர்கள் மீண்டும் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கு ஆக.30 முதல் செப்.18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 30 காலை 11 மணி முதல் செப்டம்பர் 18ஆம் தேதி மாலை 4 மணி வரை மட்டுமே இந்த போர்ட்டல் செயல்பாட்டில் இருக்கும்.
விண்ணப்பிப்பது எப்படி?
* தேர்வர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு https://coe1.annauniv.edu/ என்ற இணையதளத்தை க்ளிக் செய்து பார்க்க வேண்டும்.
* அதில், Student login பகுதிக்குச் செல்ல வேண்டும்.
* அதில், பதிவு எண், பிறந்த தேதி, குறியீட்டு எண் ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.
* திறக்கும் பக்கத்தில் உங்களின் அரியர் தாள்கள் விவரம் இருக்கிறதா என்று பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.
* இல்லையெனில் addition/ deletion பகுதியை க்ளிக் செய்துகொள்ள வேண்டும்.
* தொடர்ந்து இ- மெயில் முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.
* தேர்வு நகரத்தைத் தேர்வு செய்து, உரிய கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
15 ஆண்டுகளுக்கு முன்பு அரியர் வைத்தவர்கள் கூட தேர்வெழுத வாய்ப்பு
அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்வி ஆண்டு முடிந்து 3 ஆண்டுகளில் அரியர் தேர்வை முடிக்காதவர்களின் டிகிரி கேன்சல் ஆகிவிடும் எனும் நடைமுறை பின்பற்றப்பட்டு வரும் சூழலில், தேர்வெழுத கால அவகாசம் முடிந்தவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஆக.30 முதல் செப்.18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த முறை, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் தன்னாட்சி பெறாத பொறியியல் கல்லூரிகள், தொலைதூர முறையில் கல்வி பயின்றோர் ஆகியோருக்கு மட்டுமே பொருந்தும்.
கூடுதல் தகவல்களுக்கு: https://aucoe.annauniv.edu/