மேலும் அறிய

டெட் தேர்வு வினாத்தாள் வடிவமைப்பு, மதிப்பெண்களில் தளர்வு: ஆசிரியர் கூட்டமைப்பு வேண்டுகோள்

ஆசிரியர்களுடைய பணி அனுபவம் உயர் கல்வித் தகுதி ஆகியவற்றிற்கு ஏற்ப சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும்- தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு TET தேர்வு நடத்தப்படும் விவகாரத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு பற்றி பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு முக்கியக் கோரிக்கைகள் சிலவற்றை விடுத்துள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கூறும்போது, ‘’குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 அமலுக்கு வருவதற்கு முன்பே பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் நியமனங்கள் அன்றைய நடைமுறை விதிகளின்படி நடைபெற்றவை.

எனவே, முன் நியமனம் பெற்ற ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு, அனுபவம், சேவை உரிமை மற்றும் பதவி உயர்வு வாய்ப்பு ஆகியவை சட்ட ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது எங்களது நிலைப்பாடாகும்.

3 ஆண்டுகள் அவகாசம்

இந்த விவகாரத்தில் பல்வேறு மாநில அரசுகள், ஆசிரியர் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் தாக்கல் செய்த மறுஆய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் 29-05-2026 அன்று விசாரித்து, முந்தைய தீர்ப்பை அடிப்படையில் உறுதி செய்துள்ளது. அதே நேரத்தில், ஆசிரியர்கள் TET தகுதி பெறுவதற்கான கால அவகாசத்தை 2 ஆண்டுகளிலிருந்து 3 ஆண்டுகளாக நீட்டித்து, புதிய காலக்கெடுவை 31-08-2028 என நிர்ணயித்துள்ளது.

மேலும், மாநில அரசுகள் ஆசிரியர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் வகையில் சுமார் ஆறு மாத இடைவெளியில், ஆண்டுக்கு இருமுறை TET தேர்வுகளை நடத்த முயற்சிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இனிமேல் கால நீட்டிப்பு கோரிக்கை ஏற்கப்படாது என்றும் தீர்ப்பில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

  1. பணியில் உள்ள ஆசிரியர்களுக்காக கடந்த ஜூலை 4, 5 மற்றும் 6 தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற்றது. தகுதி தேர்வு பாடத்திட்டத்தின்படி கேட்கப்பட்டதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்திருந்தாலும் தாள் ஒன்றில் 9, 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான வினா பகுதிகள் 60 சதவீதத்திற்கு அதிகமாகவும் தாள் இரண்டில் 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கான வினாத்தாள் பகிர்வு 70% ஆகும் இருந்ததை உணர முடிகிறது. பணியில் சேரும்போதே உரிய கல்வித் தகுதியும் புலமையும் பணி அனுபவம் பெற்ற ஆசிரியர்களுக்கு இது பெரிய மன உளைச்சலையும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே வரும் காலங்களில் உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஆசிரியர்கள் சார்ந்த பாடத்தில் அதிக வினாத்தாள் வினாக்கள் கேட்கும்படி வினாத்தாள் வடிவமைப்பு மாற்ற வேண்டும்.

 

  1. அரசாணை எண் 23 நாள்-ன்படி என்பது பொதுப் பிரிவினர் தவிர அனைத்து பிரிவினருக்கும் தகுதி தேர்வுக்கான மதிப்பெண்களில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் பொதுப்பிரிவினர் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்கள் 90 ஆக உள்ளது. ஆசிரியர்களின் வயது, அனுபவம், கல்வித்தகுதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு பொது பிரிவினர் உள்ளிட்ட அனைவருக்கும் மேலும் 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்க வேண்டும்.

சிறப்பு மதிப்பெண்கள் அளிக்க வேண்டும்

  1. ஆசிரியர்களுடைய பணி அனுபவம் உயர் கல்வித் தகுதி ஆகியவற்றிற்கு ஏற்ப சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும்.

 

  1. பாடத்திட்டத்தை பொறுத்தவரை நீண்ட நாட்களாக பணியில் உள்ள ஆசிரியர்கள் என்பதை கருத்தில் கொண்டு அவர்கள் பாடத்தில் Major கூடுதல் மதிப்பெண்கள் வழங்கி வினாத்தாள் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

 

  1. சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்துகிறபோது ஆசிரியர்களின் பணிக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண்களில் தளர்வு வழங்கிட வேண்டும்.

தகுதித் தேர்வில் இருந்து விலக்கு

  1. கேரளா அரசு விதிவிலக்கு அளித்தது போல NET/ SET/ M.Phil/ Phd முடித்த ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும்.

 

இவ்வாறு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: மாணவர் தங்கும் விடுதிகள்; மதுரையில் சிறப்பு சட்டக்கல்லூரி- உயர் கல்வித்துறைக்கு என்னென்ன அறிவிப்புகள்?
TN Budget 2026: மாணவர் தங்கும் விடுதிகள்; மதுரையில் சிறப்பு சட்டக்கல்லூரி- உயர் கல்வித்துறைக்கு என்னென்ன அறிவிப்புகள்?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget