அறநிலையத்துறை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
இந்த நான்கு கல்லூரிகளும் சுயநிதி கல்லூரிகளாகவே செயல்படும் என தமிழ்நாடு உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்துசமய அறநிலையத்துறையின் நான்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டே மாணவர் சேர்க்கை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர், சென்னை கொளத்தூர் ஸ்ரீகபாலீஸ்வரர் கல்லூரிகளில் இன்று முதல் மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்பட்டது. இதேபோல், விளாத்திகுளம் சுப்பிரமணியசுவாமி, ஒட்டன்சத்திரம் பழனியாண்டவர் மகளிர் கல்லூரிகளிலும் மாணவியர்கள் சேர்க்கை தொடங்கப்பட்டது. BCA, B.Com, BBA, B.Sc (Computer Science) என நான்கு பாடப்பிரிவுகளில் உடனடி மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணம் ரூ.50., (SC/ST) மாணவ, மாணவியர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. https://hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
இந்த நான்கு கல்லூரிகளும் சுயநிதி கல்லூரிகளாகவே செயல்படும் என தமிழ்நாடு உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்தக் கல்லூரிகள் தற்காலிகமாக தனியார் மற்றும் கோயில்களுக்கு சொந்தமான இடத்தில் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, “அறநிலையத்துறை சார்பில் 5 கல்லூரிகள் இயங்கி வருகிறது. புதிதாக 10 கல்லூரிகள் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்தோம். இதில் நான்கு கல்லூரிக்கு உயர்கல்வித்துறையிடம் அனுமதி பெற்றுள்ளோம். இதனைத்தொடர்ந்து, சென்னை கொளத்தூர் எவர் எக்ஸஸ் பிளாக்கில் ஸ்ரீகபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பரமத்தி வேலூர் தேசிய நெடுஞ்சா வையில் அர்த்தநாரீஸ்வரர் சுலை மற்றும் அறிவியல் கல்லூரி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அம்பளிக்கை என்ற இடத்தில் பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரி, தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி என கோயில் பெயர்களில் புதிய கல்லூரிகள் தொடங்கப்படுகிறது. இக்கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவான பிகாம், பிபிஏ, பிசிஏ, பிஎஸ்சி கணிப்பொறி அறிவியல் ஆகிய 4 பாடப் பிரிவுகள், தேவாரம், திருவாசகம், திருப்பாவை, திருவெம்பாவை போன்ற ஆன்மிக பாடபிரிவுகள்இடம்பெறவுள்ளன.
சென்னையில் 2 இடங்களில் கல்லூரி தொடங்கப்படும் என அறிவித்துள்ளோம் சென்னை கொளத்தூரில் கல்லூரி தொடங்க பூம்புகார் நகரில் இடம் தேர்வு செய்யப்பட் டுள்ளது. சென்னையில் இருக்கின்ற தனியார் கல்லூரிக்கு போட்டிபோடும் விதத்தில் இந்த கல்லூரிகள் நடைபெறும்” என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்