மேலும் அறிய

AICTE Rule : டல்லடிக்கும் மெக்கானிக்கல், சிவில்! இறுகும் ரூல்ஸ்..! சிக்கலில் 220 பொறியியல் கல்லூரிகள்..!

தொழிற்கல்வியைக் கட்டுப்படுத்தும் உயர் கல்வி அமைப்பான ஏஐசிடிஇயின் விதிமுறையால் 220 தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தொழிற்கல்வியைக் கட்டுப்படுத்தும் உயர் கல்வி அமைப்பான ஏஐசிடிஇயின் விதிமுறையால் 220 தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஏஐசிடிஇ எனப்படும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் அண்மையில் 2022- 23ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி நிறுவனங்களுக்கான ஒப்புதல் பெறும் விதிமுறைகள் வெளியாகின. இதில் கல்வி நிலையங்களில் 50 சதவீதத்துக்கும் குறைவான மாணவர் சேர்க்கை இருக்கும் பாடப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை பெருகி வந்த நிலையில், அண்மைக் காலமாக மாணவர் சேர்க்கை குறைந்து வந்தது. 2021-22ஆம் கல்வி ஆண்டில் ஓரளவு மாணவர் சேர்க்கை உயர்ந்தது. இந்த நிலையில் மாநிலத்தில் உள்ள 440 பொறியியல் கல்லூரிகளில், சுமார் 200 கல்லூரிகளில் மட்டுமே 50 சதவீதத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்தனர். 

AICTE Rule : டல்லடிக்கும் மெக்கானிக்கல், சிவில்! இறுகும் ரூல்ஸ்..! சிக்கலில் 220 பொறியியல் கல்லூரிகள்..!

ஏஐசிடிஇயின் இந்த புதிய விதிமுறையால், தமிழ்நாட்டில் உள்ள சுமார் 220 பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேபோல, கல்லூரியின் ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கையில், 50 சதவீதத்தைவிடக் குறைவான மாணவர்களைக் கொண்டுள்ள பொறியியல் கல்லூரிகள், செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் உள்ளிட்ட புதிய பாடப்பிரிவுகளை அறிமுகம் செய்யவும்  அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அனுமதி மறுத்துள்ளது. 

அதே நேரத்தில் காலத்துக்கும் தேவைக்கும் ஏற்ற வகையில், தரவு அறிவியல், செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், சைபர் பாதுகாப்பு,  Internet of Things (IoT) உள்ளிட்ட புதிய பிரிவுகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் பாரம்பரியமான பொறியியல் பிரிவு படிப்புகளான மெக்கானிக்கல், சிவில் ஆகியவை மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனினும் கடந்த ஆண்டு 300-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் புதிய படிப்புகள் தொடங்க அனுமதி வழங்க மறுக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 220 ஆகக் குறைந்துள்ளது. 

 அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் அறிவிப்பு கல்வியாளர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் மூலம் பொறியியல் கல்லூரிகளில் கல்வித் தரம் உயர்த்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகக் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
"நம்பிக்கை, பக்தி மற்றும் கலாச்சாரத்தின் சங்கமம்" மகா கும்பமேளா குறித்து பூரித்து போன பிரதமர் மோடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
"நம்பிக்கை, பக்தி மற்றும் கலாச்சாரத்தின் சங்கமம்" மகா கும்பமேளா குறித்து பூரித்து போன பிரதமர் மோடி
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
”துளியும் இல்லாத பாதுகாப்பு” கீழ்ப்பாக்கம் பாலியல் சீண்டல் விவகாரம்.. ஈபிஎஸ் காட்டம்
”துளியும் இல்லாத பாதுகாப்பு” கீழ்ப்பாக்கம் பாலியல் சீண்டல் விவகாரம்.. ஈபிஎஸ் காட்டம்
ஆசிரியர்களே..ஜன.23-க்குள் இதை செய்ங்க; தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு-  என்ன தெரியுமா?
ஆசிரியர்களே..ஜன.23-க்குள் இதை செய்ங்க; தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு-  என்ன தெரியுமா?
Embed widget