மேலும் அறிய

Annual Exam Time Table: 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு அட்டவணை வெளியீடு

தமிழ்நாட்டில் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு நடைபெறும் தேதியானது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு நடைபெறும் தேதியானது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களில் ஆண்டு இறுதித்தேர்வுகள் நடைபெற்று வருகின்றது. 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் நிலையில் ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபட்டு வருவதால் பள்ளிகளில் மற்ற வகுப்புகள் அரைநாள் மட்டுமே நடைபெற்று வருகிறது.

பொதுத்தேர்வுகள்

கடந்த மார்ச் 13 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வை சுமார் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 மாணவ-மாணவிகள் எழுதிய நிலையில் இந்த தேர்வுகள் நேற்று முடிவடைந்தது. 12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 10 ஆம் தேதி தொடங்கி  21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முடிவுகள் மே 5 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் 11 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 14 ஆம் தேதி தொடங்கிய நிலையில் நாளையுடன் இந்த தேர்வு நிறைவடைகிறது. 

இதனைத் தொடர்ந்து 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தேர்வை சுமார் 10 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். 

6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள்

இதற்கிடையில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் எப்போது நடைபெறும் என்ற கேள்வி எழுந்தது. வெயில் காலம் நெருங்குவதால் முன்கூட்டியே தேர்வுகளை முடிக்க வேண்டும் என அரசுக்கு பலரும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும் 6 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு தேதியை தனித்தனியாக வெளியிட்டுள்ளனர். எனவே மாணவர்கள் கவனமுடன் தங்கள் மாவட்டத்திற்கான தேர்வு தேதிகளை பார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்ட அறிக்கையில், ஏப்ரல் 21 ஆம் தேதி தமிழ், 24 ஆம் தேதி ஆங்கிலம், 25 ஆம் தேதி கணிதம், 26 ஆம் தேதி அறிவியல், 27 ஆம் தேதி உடற்கல்வி, 28 ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  6 ஆம் வகுப்புக்கு காலை 10 மணி முதல் 12 மணி வரையும், 7 ஆம் வகுப்புக்கு மதியம் 2 மணி முதல் 4 மணி வரையும், 8 ஆம் வகுப்புக்கு காலை 9.30 மணி முதல் 12 மணி வரையும், 9 ஆம் வகுப்புக்கு மதியம் 2 மணி முதல் 4.30 மணி வரையும் தேர்வுகள் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

தலைப்பு செய்திகள்

அரசுப் பள்ளி ஆய்வு அராஜகம்: அமைச்சர் கீர்த்தனா மீது நயினார் நாகேந்திரன் பாய்ச்சல்!
அரசுப் பள்ளி ஆய்வு அராஜகம்: அமைச்சர் கீர்த்தனா மீது நயினார் நாகேந்திரன் பாய்ச்சல்!
கல்வி விற்பனைக்கே; வேலைக்கு அலையும் இளைஞர்கள்- பொறியியல் கல்லூரிகள் மூடலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்
கல்வி விற்பனைக்கே; வேலைக்கு அலையும் இளைஞர்கள்- பொறியியல் கல்லூரிகள் மூடலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
Cristiano Ronaldo: ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
Hero Xoom 110: சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
Embed widget