30-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு - கரூரில் இருந்து தூத்துக்குடிக்கு உற்சாகமாக சென்ற மாணவர்கள்
30-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு தூத்துக்குடியில் புனித அன்னை தெரசா பொறியியல் கல்லூரியில் இரண்டு நாள்கள் சிறப்பாக நடைபெற உள்ளது.
30-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு தூத்துக்குடியில் உள்ள புனித அன்னை தெரசா பொறியியல் கல்லூரியில் ஆகிய இரண்டு நாள்கள் சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க கரூரில் இருந்து மாணவ, மாணவிகள் சென்றனர்.
இதில் பங்கேற்க கரூர் மாவட்டத்தில் இருந்து 24 பள்ளிகளில் இருந்து கரூர் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்று தேர்வு செய்யப்பட்ட 39 ஆய்வுகளுக்கான 78 மாணவ மாணவிகளும், அவர்களுக்கு வழிகாட்டியாக உடன் 28 வழிகாட்டி ஆசிரியர்களும் இன்று கரூரில் இருந்து மகிழ்வுடன் கிளம்பினார்கள்.
இவர்களை வாழ்த்தி வழியனுப்பும் விழா தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் திரு. தீபம் சங்கர் தலைமையில் கரூர் MHSS பள்ளி முன்பு நடைபெற்றது. மாவட்ட செயலாளர் திரு.ஜான்பாட்ஷா அவர்கள் NCSC தேர்வு நடைமுறை குறித்து விளக்கி பேசினார். மாநாட்டில் பங்கேற்ற மாணவ, மாணவிகளை லயன்ஸ்கிளப் சகோதரி வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.
பேருந்து பொறுப்பாளர்களாக ஆசிரியர் தனபால் மற்றும் திலகவதி ஆகியோர்களும், பயண ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆரோக்கிய பிரேம்குமார் மற்றும் ஜெயராஜ் ஆகியோர்கள் மேற்கொண்டனர்.
மாணவர்களுக்கு சைக்கிள் நிறுத்துமிடம் அமைக்கும் பணி.
கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியத்துக்கு உட்பட்ட இன்னுங்கூர் ஊராட்சி பகுதியில் புதுப்பட்டி மற்றும் ஓன்தாம்பட்டி ஆகிய கிராமங்களில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் பிரபுசங்கர் பார்வை இட்டு ஆய்வு மேற்கொண்டார். குளித்தலை ஒன்றியம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 4.15 லட்சம் மதிப்பில் மாணவர்களுக்கான மிதிவண்டிகள் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்டும், பள்ளிகளுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மற்றும் இதர அடிப்படை வசதிகளை ஏற்படுத்திட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
அரசு ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு திட்டத்தின் கீழ் 5.32 லட்சம் மதிப்பில் முடிவுற்ற சமையலறை கட்டிட பணிகளையும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ 1.65 லட்சம் மதிப்பில் மண் வரப்பு அமைக்கப்பட்டு வரும் பணிகளையும் புதுப்பட்டி கிராமத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூஒ 1.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பணிகளையும் பார்வையிட்டு விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது திட்ட இயக்குனர் வாணி ஈஸ்வரி செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன் வட்டாட்சியர் அலுவலர் நீலமேகம் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.
கல்வித்துறை சார்பில் ஒன்றிய அளவிலான கலைத் திருவிழா போட்டி
கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. சிலம்பம், கட்டுரை, பேச்சு, ஓவியம், நடனம், இசைக்கருவி, வாசித்தல், உள்ளிட்ட போட்டிகளில் மணவாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் முதலிடம் பெற்றுள்ளனர். முதலிடம் பெற்றவர்கள் மாவட்ட கலைத் திருவிழா போட்டிக்கு தகுதி பெற்றனர். ரோட்டரி கிளப் ரயிலா கேம்பில் ஆளுமை மேம்பாடு குறித்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். தனியார் அகாடமி மூலம் நடந்த திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் மாணவ மாணவிகள் வெற்றி பெற்றனர். வெற்றி மாணவர்களை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரான ஊராட்சி தலைவர் கந்தசாமி துணைத்தலைவர் பிரின்ச் சரவணன் ஆகியோர் பாராட்டினார். பள்ளி தலைமை ஆசிரியர் சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தேசிய பாக்சிங் வீரருக்கு பாராட்டு
தான்தோன்றி மலை மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் பீமா சங்கர் பாக்சிங் லைட் பிரிவில் தேசிய அளவில் வெற்றி பெற்றதற்காக பாராட்டு விழா நடந்தது. திருவனந்தபுரத்தில் என் ஸ்போர்ட்ஸ் ஆப் இந்தியா இன்டர்நேஷனல் ஸ்போர்ட்ஸ் கவுன்சில் சார்பில் தேசிய பாக்சிங் லைட் போட்டி நடந்தது. இதில் மாணவர் பீமா சங்கர் இரண்டாம் இடம் பெற்று சர்வதேச போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார். இதை அடுத்து பீமா சங்கருக்கு பாராட்டு விழா பள்ளியில் நடந்தது. பள்ளி முதல்வர் ஜெயசித்ரா தலைமை வகித்தார். தாளாளர் பேங்க் சுப்ரமணியன் சான்றிதழ் வழங்கினார். ஆசிரியர்கள் அழகம்மாள் கார்த்திக் அருண் பிரசாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.