TN 11th Exam Result: வெளியானது 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. வீட்டில் இருந்து பார்ப்பது எப்படி?
தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
![TN 11th Exam Result: வெளியானது 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. வீட்டில் இருந்து பார்ப்பது எப்படி? 11th board exam HSC results released today 8 lakhs students are wrote the exam TN 11th Exam Result: வெளியானது 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. வீட்டில் இருந்து பார்ப்பது எப்படி?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/14/1c400d70a4f40cdb4f9c05d03bba58eb1715659390887589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாடு பள்ளிக் கல்வி வாரியத்தில் பொதுத் தேர்வை எழுதிய மாணவர்களுக்கு, வரிசையாகப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இன்று காலை 9.30 மணிக்கு 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம், தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. 10 ஆம் வகுப்பு தேர்வை 12,616 பள்ளிகளைச் சேர்ந்த 8,94,264 மாணவ, மாணவியர் எழுதினர். மாணவிகளின் எண்ணிக்கை: 4,47,061 மாணவர்களின் எண்ணிக்கை: 4,47,203.
இந்நிலையில் இன்று 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்தத் தேர்வு முடிவுகளை, http://tnresults.nic.in அல்லது http://dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகள் வாயிலாக மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, மாணவர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அப்படி இல்லையென்றால் மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய பள்ளிகளில் தேர்வு முடிவுகளையும் அறிந்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் செயல்படும் தேசியத் தகவலியல் மையங்களில் (National Informatics Centres) 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை அறியலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)