10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கேள்விகள் எங்கிருந்து கேட்கப்படும்?- அரசின் அறிவிப்பு சொல்வது என்ன?
10, 11, 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் முன்னுரிமை பாடத்திட்டப் பகுதியில் உள்ள பாடங்கள் முழுவதில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
10, 11, 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் முன்னுரிமை பாடத்திட்டப் பகுதியில் உள்ள பாடங்கள் முழுவதில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டுள்ள தகவலின்படி, பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தில் கேள்விகள் முழுமையாகக் கேட்கப்படும்.
2021- 2022 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் மே மாதத்தில் நடைபெற உள்ளன. இத்தேர்விற்கான வினாக்கள் 2021- 2022ஆம் கல்வியாண்டிற்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் வழங்கப்பட்ட முன்னுரிமை பாடத்திட்டத்தில் ( Priority Syllabus-ல் குறைக்கப்பட்ட) உள்ள பாடங்கள் முழுவதில் இருந்தும் கேட்கப்படும்.
இப்பாடத்திட்டம் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளமான https://dge.tn.gov.in/ என்ற முகவரியில் Notification என்ற பகுதியில் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் சுமார் ஒன்றரை வருடங்களாகப் பள்ளிகள் செயல்படாமல், மூடப்பட்டு இருந்தன. இந்த நிலையில் தொற்று குறைந்த பிறகு 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்குப் பள்ளிகளை திறக்கப்பட்டு, இயங்கி வருகின்றன.
பாடத்திட்டம் குறைப்பு
மாணவர்கள் படிப்பதற்கு வசதியாக, 1 முதல் 8ஆம் வகுப்பு வரை 50 சதவீதமும், 9 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையுள்ள பாடத்திட்டத்தில் 35 சதவீத பாடப்பகுதிகளும் குறைக்கப்பட்டது.
குறைக்கப்பட்டபிறகு 1-ஆம் வகுப்புக்கு 50 சதவிகிதமும், 2-ஆம் வகுப்புக்கு 50 சதவிகிதமும், 3-ஆம் வகுப்புக்கு 51 சதவிகிதமும், 4-ஆம் வகுப்புக்கு 51 சதவிகிதமும், 5-ஆம் வகுப்புக்கு 52 சதவிகிதமும், 6-ஆம் வகுப்புக்கு 53 சதவிகிதமும், 7-ஆம் வகுப்புக்கு 54 சதவிகிதமும், 8-ஆம் வகுப்புக்கு 54 சதவிகிதமும், 9-ஆம் வகுப்புக்கு 62 சதவிகிதமும், 10-ஆம் வகுப்புக்கு 61 சதவிகிதமும், 11-ஆம் வகுப்புக்கு 60-65 சதவிகிதமும், 12-ஆம் வகுப்புக்கு 60-65 சதவிகிதமும் பாடத்திட்டம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
மார்ச் மாதத்தில் பாடங்கள் அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் திருப்புதல் தேர்வுகள் நடைபெற்றன. மே மாதம் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்