Supplementary Exam: தொடங்கிய 10, 11ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள்: ஜூலை முதல் வாரத்தில் நிறைவு
10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று ( ஜூன் 27ஆம் தேதி) துணை பொதுத்தேர்வுகள் தொடங்கி உள்ளன. தொடர்ந்து ஜூலை 4ஆம் தேதி வரை 10ஆம் வகுப்புக்கும் 5ஆம் தேதி வரை 11ஆம் வகுப்புக்கும் தேர்வு நடைபெறுகிறது.
10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று ( ஜூன் 27ஆம் தேதி) துணை பொதுத்தேர்வுகள் தொடங்கி உள்ளன. தொடர்ந்து ஜூலை 4ஆம் தேதி வரை 10ஆம் வகுப்புக்கும் 5ஆம் தேதி வரை 11ஆம் வகுப்புக்கும் தேர்வு நடைபெறுகிறது.
இன்று மொழித் தாளுக்கான தேர்வு நடைபெற்ற நிலையில், நாளை (28ஆம் தேதி) ஆங்கிலப் பாடத்துக்கான தேர்வு நடைபெற உள்ளது. ஜூன் 30ஆம் தேதி கணிதப் பாடத்துக்கும் ஜூலை 1ஆம் தேதி விருப்ப மொழித் தாளுக்கும் ஜூலை 3ஆம் தேதி அறிவியல் பாடத்துக்கும் துணைத் தேர்வுகள் நடைபெற உள்ளன. ஜூலை 4ஆம் தேதி சமூக அறிவியல் பாடத்துக்குத தேர்வு நடைபெற உள்ளன.
அதேபோல 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வும் இன்று தொடங்கி உள்ளது. 10ஆம் வகுப்பைப் போல, 11ஆம் வகுப்புக்கும் இன்று மொழிப் பாடத்துக்கான தேர்வு தொடங்கி நடைபெற்றது.
அடுத்தடுத்து என்னென்ன தேர்வுகள்?
28.06.2023 புதன்கிழமை பகுதி -II ஆங்கிலம்
30.06.2023 வெள்ளிக்கிழமை பகுதி -III
இயற்பியல்
பொருளாதாரம்
கணினி தொழில்நுட்பம்
வேலை வாய்ப்பு திறன்கள்
01.07.2023 - உயிரியல்
தாவரவியல்
வரலாறு
வணிக கணிதம் மற்றும் புள்ளியியல்
அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்
அடிப்படை சிவில் இன்ஜினியரிங்
அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்
அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
டெக்ஸ்டைல் டெக்னாலஜி
அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம்
03.07.2023 - வேதியியல்
கணக்கு
நிலவியல்
04.07.2023 - கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம்
நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம்
கணினி அறிவியல்
கணினி பயன்பாடுகள்
உயிர் வேதியியல்
மேம்பட்ட மொழி (தமிழ்)
வீட்டு அறிவியல்
அரசியல் அறிவியல்
புள்ளிவிவரங்கள்
நர்சிங் தொழிற்கல்வி
அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்
05.07.2023 - கணிதம்
விலங்கியல்
வர்த்தகம்
மைக்ரோ உயிரியல்
ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை
டெக்ஸ்டைல் & டிரஸ் டிசைனிங்
உணவு சேவை மேலாண்மை
வேளாண் அறிவியல்
நர்சிங் (பொது)
முடிந்த 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள்
முன்னதாக 12ஆம் வகுப்புக்கான துணைத் தேர்வுகள் ஜூன் 19ஆம் தேதி அன்று தொடங்கின. நேற்றுடன் (ஜூன் 26) இவர்களுக்கான தேர்வுகள் நடந்து முடிந்தன. குறிப்பாக வேதியியல், கணக்கு, நிலவியல் ஆகிய பாடங்களுக்குத் தேர்வு நடைபெற்றது.
இந்த நிலையில், 10, 11ஆம் வகுப்புக்கான துணைத் தேர்வுகள் இன்று (ஜூன் 27) தொடங்கி உள்ளன. 10ஆம் வகுப்பைப் போல, 11ஆம் வகுப்புக்கும் இன்று மொழிப் பாடத்துக்கான தேர்வு தொடங்கி நடைபெற்றது. தொடர்ந்து ஜூலை 4ஆம் தேதி வரை 10ஆம் வகுப்புக்கும் 5ஆம் தேதி வரை 11ஆம் வகுப்புக்கும் தேர்வு நடைபெறுகிறது.
2022- 23ஆம் கல்வி ஆண்டுக்கான 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி வெளியாகின. 11ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் மே 7ம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாம்: TNPSC Results Schedule: டிசம்பரில் குரூப் 2 தேர்வு முடிவுகள்; 19 தேர்வுகளின் ரிசல்ட் அட்டவணையை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- முழு விவரம்
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.