Crime : கொடூர பாலியல் வன்கொடுமை.. மகளிடம் அத்துமீறிய தந்தை.. குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்..
குஜராத் மாநிலத்தில் பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்.
குஜராத் மாநிலத்தில் பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் கோம்திபூர் என்னும் இடம் உள்ளது. இங்கு வசித்து வரும் தம்பதியினர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜூஹாபுராவில் சாதி வழக்கப்படி திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் மணவாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென அப்பெண் தன்னுடைய தந்தை பெற்ற மகள் என்றும் பாராமல் பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டை கணவரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் இது திருமணத்திற்கு முன்னரும், பின்னரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த நபர், மனைவிக்கு ஆறுதல் சொல்லியதோடு இதுதொடர்பாக அப்பெண்ணை காவல் நிலையத்தில் புகாரளிக்க வைத்தார். உடனடியாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தந்தையை கைது செய்தனர்.
இதனிடையே அப்பெண் போலீசாரிடம் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். அதன்படி, “நான் 10 வகுப்பு தேர்ச்சி பெற்ற பின் 11-ஆம் வகுப்பில் கம்யூட்டர் சயின்ஸ் பிரிவை எடுத்து கணினி பொறியாளராக விரும்பினேன். ஆங்கில மீடியம் படித்த என்னிடம் குடும்பத்தின் பொருளாதார நிலையை தெரிவித்து எனது தந்தை ஒப்புக் கொள்ளவில்லை. நான் வாக்குவாதம் செய்தேன். என்னை வீட்டை விட்டு வெளியே துரத்தி விடுவேன் என மிரட்டினார்.
இதற்கிடையில் எனது அம்மாவும், சகோதரியும் கோடை விடுமுறைக்கு என் மூத்த சகோதரியை ராஜஸ்தானுக்கு அழைத்து சென்ற நிலையில் நான் வீட்டில் தந்தையுடன் தனியாக இருந்தேன். அப்போது என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். நான் யாரிடமாவது சொன்னால் வீட்டை விட்டு வெளியேற்றி விடுவதாக மிரட்டினார். நான் பயந்துபோய் யாரிடமும் சொல்லவில்லை. இதனை சாதகமாக்கி கொண்ட அவரோ, என் அம்மா, சகோதரி வீட்டில் இல்லாத போதெல்லாம் வன்கொடுமை செய்வதை வழக்கமாக்கினார். இதனால் எனக்கு மனரீதியாக பாதிப்பு ஏற்பட்டது. உடலிலும் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சில மருத்துகளை தந்தையே பரிந்துரைத்து எடுத்துக்க வற்புறுத்தினார்.
நான் மருந்து சாப்பிட்டு தூங்கிய பிறகும் பாலியல் வன்கொடுமை செய்வார். அப்படியான சூழலில் எனக்கு திருமணம் நடந்தது. அடிக்கடி என் வீட்டுக்கு வந்து தாய் வீட்டுக்கு கூட்டிச் செல்கிறேன் என அழைத்து சென்று மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்தார். என் கணவரோ நல்ல மனிதர் என்பதால் நான் அம்மா வீட்டுக்கு செல்ல மறுத்தபோது அப்பாவின் பேச்சுக்கு மதிப்பளிக்க வேண்டும் என அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தார்.
பின்னர் ஒருநாள் என் கணவர் வீட்டுக்கு தந்தை வந்தார். என்னுடன் உறவு கொள்ள வேண்டும் என வற்புறுத்தினார். நான் மறுக்கவே, அடித்தார். நான் வலி தாங்காமல் அலற, பக்கத்து வீட்டுக்காரர் என் மைத்துனிக்கு தகவல் தெரிவித்தார். இதனால் என் தந்தை அங்கிருந்து சென்று விட்டார்” என பாதிக்கப்பட்ட அப்பெண் காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் குஜராத் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.