மேலும் அறிய

விழுப்புரம் : 80 ஆண்டுகள் பழமைவாய்ந்த லட்சுமி நாராயணப்பெருமாள் கோவிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு

விழுப்புரம் : 80 ஆண்டுகள் பழமைவாய்ந்த லட்சுமி நாராயணப்பெருமாள் கோவிலில் மூன்று ஐம்பொன் சிலைகள் திருட்டு

லட்சுமி நாராயணா கோவில் ( Lakshmi Narayana Perumal Temple )

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே பெரியதச்சூர் கிராமம் உள்ளது. இங்குள்ள எசாலம் சாலையில் பிரசித்திப் பெற்ற லட்சுமி நாராயணா கோவில் உள்ளது. இக்கோவிலில் அதே ஊரைச் சேர்ந்த நரசிம்மன் (78), நடராஜன் (70) ஆகியோர் அர்ச்சகர்களாக உள்ளனர். இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஐம்பொன்னாலான லட்சுமி நரசிம்மர், நடராஜர், பெருமாள், லட்சுமி, ஆண்டாள் ஆகிய உற்சவர் சிலைகள் இருந்தன. விசேஷ நாட்களில் இந்த உற்சவர் சிலைகள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும்.

ஐம்பொன் சிலை திருட்டு 

இந்நிலையில் இரவு அர்ச்சகர் நடராஜன் வழக்கம் போல கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். காலை கோவிலை திறப்பதற்கு அர்ச்சகர் நரசிம்மன் வந்தார். அப்போது கோவிலின் கதவு திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக கிராம பிரமுகர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்களுடன் கோவிலுக்குள் சென்று பார்த்த போது, உற்சவர் சிலைகள் திருட்டு போயிருந்ததை கண்டனர். பெருமாள், லட்சுமி, ஆண்டாள் ஆகிய 3 உற்சவர் சிலைகள் திருட்டுபோயிருந்தது. மற்ற 2 உற்சவர்கள் மட்டும் கோவிலில் இருந்தது. இதையடுத்து ஊர் பிரமுகர்கள் மற்றும் கோவில் அர்ச்சகர் இந்து அறநிலையத் துறையினருக்கும், பெரியதச்சூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

நள்ளிரவில் கதவை உடைத்து திருட்டு 

தகவல் அறிந்து விரைந்து வந்த பெரியதச்சூர் காவல் நிலைய போலீசார், திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். கோவிலில் ஐம்பொன் உற்சவர் சிலைகள் உள்ளதை நோட்டமிட்ட மர்மநபர்கள், நள்ளிரவில் கதவை உடைத்து கோவிலுக்குள் புகுந்து கொள்ளையடித் திருக்கலாம் என்று போலீசார் கூறினர். மேலும், அந்த கிராமத்தில் உள்ள அனைத்து சி.சி.டி.வி. கேமராக்களின் பதிவுகளையும் பெரியதச்சூர் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், விழுப்புரத்தில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வந்து கோவிலில் இருந்த தடயங்களை சேகரித்தனர். திருட்டுபோன 3 ஐம்பொன் சிலைகளின் மதிப்பு ரூ.30 லட்சம் என தெரிகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சிலைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். ஊரின் நடுவில் உள்ள கோவிலில் ஐம்பொன் சிலைகள் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

சிகரெட் சூடு.. சித்திரவதை.. ஜாலியாக இருக்க முடியாததால் 2 மகன்களை டார்ச்சர் செய்த பெற்றோர்!
சிகரெட் சூடு.. சித்திரவதை.. ஜாலியாக இருக்க முடியாததால் 2 மகன்களை டார்ச்சர் செய்த பெற்றோர்!
தற்கொலை செய்த இளம் பெண்ணின் வயிற்றிலிருந்த சிசுவுக்கு யார் தந்தை ? DNA சோதனையில் மாட்டிய காதலன்
தற்கொலை செய்த இளம் பெண்ணின் வயிற்றிலிருந்த சிசுவுக்கு யார் தந்தை ? DNA சோதனையில் மாட்டிய காதலன்
கண் தெரியாத தாயை எட்டி உதைத்த கொடூர மகன்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?
கண் தெரியாத தாயை எட்டி உதைத்த கொடூர மகன்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?
" இன்ஸ்டாகிராம் தோழியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த வாலிபர் "

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
CM Vijay Speech: 5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
CM Vijay Speech: வாயை திறங்க சிஎம்மா? நான் பேசாம இருக்க இதான் காரணம்- சீறிய சிஎம் விஜய்!
CM Vijay Speech: வாயை திறங்க சிஎம்மா? நான் பேசாம இருக்க இதான் காரணம்- சீறிய சிஎம் விஜய்!
Nissan Tekton: நிஸான் டெக்டானை சொந்தமாக்கலாம்; 19.4KM மைலேஜ், வெறும் ரூ.8820 EMI- 5 ஆண்டு லோன், கால்குலேஷன்
Nissan Tekton: நிஸான் டெக்டானை சொந்தமாக்கலாம்; 19.4KM மைலேஜ், வெறும் ரூ.8820 EMI- 5 ஆண்டு லோன், கால்குலேஷன்
CM Vijay: திரும்பும் பக்கமெல்லாம் கதறல்.. திமுகவுக்கு நிரந்தரமாக அடி கொடுக்கணும்.. கரூரில் கொந்தளித்த விஜய்!
CM Vijay: திரும்பும் பக்கமெல்லாம் கதறல்.. திமுகவுக்கு நிரந்தரமாக அடி கொடுக்கணும்.. கரூரில் கொந்தளித்த விஜய்!
CM விஜய் ஆக்‌ஷன் எடுக்கனும்..! DMKவின் சேகர் பாபுவை போட்டுக்கொடுத்த MR விஜயபாஸ்கர் - விஷயம் என்ன?
CM விஜய் ஆக்‌ஷன் எடுக்கனும்..! DMKவின் சேகர் பாபுவை போட்டுக்கொடுத்த MR விஜயபாஸ்கர் - விஷயம் என்ன?
விஜய்க்கு ஷாக்.! கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்திற்கு தற்காலிக அரசு பணி.! ட்விஸ்ட் கொடுத்த நீதிமன்றம்
விஜய்க்கு ஷாக்.! கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்திற்கு தற்காலிக அரசு பணி.! ட்விஸ்ட் கொடுத்த நீதிமன்றம்
Aadi Amman Temples Tour : ரொம்ப கம்மியான கட்டணம்.! ஆடி அம்மன் கோயில்களுக்கு ஒரு நாள் சுற்றுலா- முன்பதிவு செய்ய TTDC அழைப்பு
ரொம்ப கம்மியான கட்டணம்.! ஆடி அம்மன் கோயில்களுக்கு ஒரு நாள் சுற்றுலா- முன்பதிவு செய்ய TTDC அழைப்பு
Embed widget