மேலும் அறிய

தூத்துக்குடி: சிறுமி படுகொலை வழக்கில் அதிர்ச்சி! காவல்துறை அலட்சியம், போராட்டம், டிஐஜி அதிரடி நடவடிக்கை!

சிறுமி துண்டு, துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகின்றன. அது தவறான செய்திகள். சம்பவ இடத்தில் சிறுமியின் சடலம் முழுமையாக கண்டெடுக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி  கடந்த 10.03.2026 மாலை இயற்கை உபாதைக்காக தனது வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர் நீண்ட நேரமாகியும் அந்த சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் உறவினர்கள் காட்டுப் பகுதிக்குள் சென்று தேடினர்.

தூத்துக்குடி: சிறுமி படுகொலை வழக்கில் அதிர்ச்சி! காவல்துறை அலட்சியம், போராட்டம், டிஐஜி அதிரடி நடவடிக்கை!

அதனை தொடர்ந்து மாணவி காணாமல் போனது குறித்து உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றுள்ளனர். ஆனால், காவல்துறை உடனடியாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்ததது  மறுநாள் காலை (11.03.2026) காலை தெரியவந்தது.  இதனையடுத்து உடற்கூறாய்வுக்காக மாணவியின் சடலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

வீட்டில் கழிவறை வசதி இல்லாததால் இயற்கை உபாதைக்காகக் காட்டுப்பகுதிக்குச் சென்ற மாணவி ஒருவர் பாலியன் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் குளத்தூர் காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, சந்தேகத்திற்குரிய நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதற்காக நெல்லை சரக டி.ஐ.ஜி. சரவணன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  மதன் ஆகியோர் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே மாணவி காணமல் போனது குறித்து புகார் அளிக்கச் சென்றபோது காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரியும், அலட்சியமாகச் செயல்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களிடம் மாவட்ட காவல்துறையினர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி: சிறுமி படுகொலை வழக்கில் அதிர்ச்சி! காவல்துறை அலட்சியம், போராட்டம், டிஐஜி அதிரடி நடவடிக்கை!

இதே நேரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி துண்டு, துண்டாக வெட்டிக் கொல்லப்படவில்லை என்று மாவட்ட காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். இது குறித்து காவல்துறை தெரிவித்துள்ளதாவது, சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பதை உறுதிப்படுத்தவில்லை. உடற்கூராய்வு அறிக்கை, தடய அறிக்கை, விசாரணை அறிக்கைக்கு பின்பே பாலியல் வன்கொடுமை குற்றம் நிகழ்ந்ததா என்பது தெரியும். மேலும், சிறுமி துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகின்றன. அது தவறான செய்திகள். சம்பவ இடத்தில் சிறுமியின் சடலம் முழுமையாக கண்டெடுக்கப்பட்டது. உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டு குழப்பம், அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம். சிறுமியின் புகைப்படம் மற்றும் பெயரை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இச்​சம்​பவத்​தில் புகாரை வாங்க போலீ​ஸார் மறுத்​த​தாக எழுந்த புகார் குறித்து அதி​காரி​கள் விசா​ரணை மேற்​கொண்​டு, நெல்லை சரக டிஐஜி​யிடம் அறிக்கை சமர்ப்​பித்​தனர். அதன்​பேரில், விளாத்​தி​குளம் மகளிர் காவல் நிலைய ஆய்​வாளர் பிர​வீ​னாவை பணி​யிடை நீக்​கம் செய்​து, டிஐஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

தலைப்பு செய்திகள்

அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
" பேனர் வைப்பதில் தகராறு " ரியல் எஸ்டேட் அதிபர் பட்டப் பகலில் வெட்டிப் கொலை
15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 4 பேர் - ஆம்புலன்ஸ் டிரைவர் வரை திடுக்கிடும் பின்னணி
15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 4 பேர் - ஆம்புலன்ஸ் டிரைவர் வரை திடுக்கிடும் பின்னணி

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 4-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 4-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? லிஸ்ட் இதோ
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
Embed widget