மேலும் அறிய

திருட வந்த வீட்டில் முடியை திருடி சென்ற திருடன்....இது என்னடா புதுசா இருக்கு.....!

விழுப்புரம்:- திண்டிவனத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 60 ஆயிரம் ரூபாய் பணம், 2 கிலோ தலை முடி திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம்:- திண்டிவனத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 60 ஆயிரம் ரூபாய் பணம், 2 கிலோ தலை முடி திருடு போனது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் செஞ்சி சாலை சுதாகர் நகரை சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் கண்ணதாசன் ( வயது 48), இவர் தலைமுடி வியாபாரம் செய்து வருகிறார். நேற்று இரவு வியாபாரத்திற்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்த கண்ணதாசன், தனது பேண்ட் பாக்கெட்டில் 60 ஆயிரம் ரூபாய் பணத்தை வைத்து விட்டு அவரது மகனை வீட்டின் உள்ளே வைத்து வெளியில் பூட்டி உள்ளார்.

திருட வந்த வீட்டில் முடியை திருடி சென்ற திருடன்....இது என்னடா புதுசா இருக்கு.....!

பின்னர் அவரது மற்றொரு வீடான பின்பக்கம் உள்ள வீட்டிற்கு உறங்கச் சென்றுவிட்டார். இன்று அதிகாலை வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும்,  உள்ளே சென்று பார்த்தபோது பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த 60 ஆயிரம் ரூபாய் பணம், சுமார் 2 கிலோ அளவிலான தலைமுடி ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து கண்ணதாசன் ரோசணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் தலைமுடி திருடி சென்ற நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

திருட வந்த வீட்டில் முடியை திருடி சென்ற திருடன்....இது என்னடா புதுசா இருக்கு.....!

குறிப்பாக திண்டிவனம் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவிலான குற்றச்சம்பங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் திண்டிவனம் டவுன்,ரோஷனை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிக அளவிலான திருட்டு நடைபெருகிறது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அப்பகுதியில் பொருத்தப்பட்ட அனைத்து சிசிடிவி கேமராக்களும் இயங்க வில்லை, இதனை சாதமாக பயன்படுத்துக்கொண்டு திருடர்கள் தொடர் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், அப்பகுதியில் காவல் நிலையத்திற்கு வரும் காவலர்கள், காவல் ஆய்வாளர்கள் யார் வந்தாலும் திண்டிவனம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஒருவர், அவர் பணியாற்றும் காவல் நிலையத்தை கவனிக்காமல் மற்ற காவல் நிலையங்களில் நடைபெறும் நிகழ்விற்கு இவர் செல்வதால், அந்த காவல் நிலைய காவலர்கள் பணியாற்ற முடியாமல் புலம்பி வருகின்றனர். இதனை விழுப்புரம் மாவட்ட காவல் ஆய்வாளர் கவனத்திற்கு கொண்டு சென்றாலும் அதனை கவனிப்பதில்லை என சக காவலர்கள் தெரிவிகின்றனர்.

Anbil Mahesh Speech : அறிவாலயத்தில் இருப்பது போல் உணர்கிறேன் - அன்பில் மகேஷின் அசத்தல் பேச்சு

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
Vikravandi child death: குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மாணவி கொடுத்த HINT.. சிக்கிய ஞானசேகரன் கூட்டாளி!  திருப்பூர் விரையும் போலீஸ்வேகமெடுக்கும் லஞ்ச வழக்கு..  அமெரிக்கா வைத்த ஆப்பு?  கலக்கத்தில் கவுதம் அதானி!’’புடவை என்னமா விலை?’’  ரஷ்ய பெண்ணுடன் SELFIE  பாஜக  மகளிரணி ATROCITYMRK  Panneerselvam Angry |’'எருமை மாடா டா நீ’’ஒருமையில் திட்டிய அமைச்சர்  அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
Vikravandi child death: குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
ரூ.2000 தேவையில்லை..‌ ரூ.250 போதும் 'மாஸ்டர் ஹெல்த் செக்கப்'.. செங்கல்பட்டு மக்கள் ஹேப்பி..!
ரூ.2000 தேவையில்லை..‌ ரூ.250 போதும் 'மாஸ்டர் ஹெல்த் செக்கப்'.. செங்கல்பட்டு மக்கள் ஹேப்பி..!
Vikravandi Child Death: குழந்தை மரணத்தில் சந்தேகம்; பள்ளி ஆசிரியர் கைது - உச்சகட்ட பதற்றத்தில் விக்கிரவாண்டி
குழந்தை மரணத்தில் சந்தேகம்; பள்ளி ஆசிரியர் கைது - உச்சகட்ட பதற்றத்தில் விக்கிரவாண்டி
TN Heavy Rain: மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
Embed widget