Crime: வாலிபால் நெட் கம்பத்தில் சடலமாக தொங்கிய இளைஞர் - செஞ்சி அருகே பரபரப்பு
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வாலிபால் நெட் கம்பத்தில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம்: செஞ்சி அருகே வாலிபால் நெட் கம்பத்தில் இளைஞர் ஒருவர் சடலமாக தொங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞர் நேற்று மாயமான நிலையில், இன்று காலை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இளைஞரின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த காரை கிராமத்தை சேர்ந்த சர்க்கரை என்பவரது மகன் தணிகைவேல் (வயது 20). வெல்டிங் கடையில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று இரவு அவரது வீட்டின் அருகே உள்ள வாலிபால் விளையாடும் மைதானத்தில் உள்ள வாலிபால் போஸ்டரில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியடி உயிரிழந்த நிலையில் இருந்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் அனந்தபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த செஞ்சி துணை காவல் கண்காணிப்பாளர் பிரியதர்ஷினி விசாரணை செய்தார். அப்போது தனது மகன் சாவில் சந்தேகம் இருப்ப தாக கூறி உறவினர்கள் போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், உடலை எடுக்க விடாமல் முற்றுகையிட்டனர். இவரை அடித்து கொலை செய்து யாரோ தூக்கில் மாட்டி இருக்கிறார்கள் எனவும், இதுகுறித்து உரிய விசாரணை செய்ய வேண்டும் எனவும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்பு போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு இணங்கிய பொதுமக்கள் உடலை எடுக்க விட்டனர். உடனடியாக உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கொலையா? அல்லது தற்கொலையா? என விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்