மேலும் அறிய

பள்ளிக்கு சென்ற மாணவி கிணற்றில் சடலமாக மீட்பு - செஞ்சி அருகே அதிர்ச்சி

செஞ்சி அருகே பள்ளிக்கு சென்ற மாணவி கிணற்றில் சடலமாக மீட்பு - கொலையா தற்கொலையா என போலீசார் விசாரணை.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பரதன் தாங்கள் என்ற ஊரை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகள் ஜனனி (16). இவர் ஆலம்பூண்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளியிலிருந்து வீடு திரும்பியவர் மீண்டும் வெளியே சென்றவர் வெகு நேரமாகியும் வீட்டுக்கு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர்.

இந்நிலையில் மாணவி ஜனனி பள்ளி சீருடையுடன் ஏரியில் உள்ள பொதுக் கிணற்றில் பிணமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் அறிந்த பெற்றோர் சத்தியமங்கலம் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் போலீசார் மற்றும் செஞ்சி தீயணைப்பு படையினர் விரைந்து வந்து கிணற்றில் மிதந்த மாணவியின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதானைக்காக அனுப்பி வைத்தனர்.

பள்ளி மாணவி தானாக கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது கொலை செய்து கிணற்றில் வீசீனார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் இறந்த ஜனனியின் உறவினர்கள் இன்று சுமார் 100 க்கும் மேற்பட்டோர் செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பள்ளிக்கு சென்ற ஜனனி பள்ளி சீருடையுடன் கிணற்றில் பிணமாக மீட்ட வழக்கை போலீசார் கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளி மாணவி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்ட செய்திகள் : 

கிராமங்கள் வளர்ச்சி பெற கடுமையாக உழைப்பவர் தான் முதல்வர் ஸ்டாலின் - எம்எல்ஏ லட்சுமணன்

Crime: ஆவின் பால் பூத் வைப்பதில் தகராறு; விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற தி.மு.க. நிர்வாகி - பெரும் அதிர்ச்சி..!

துர்நாற்றத்தில் மூழ்கி இருக்கும் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்

விழுப்புரம்: சாதி ரீதியாக வேற்றுமை; மறு தேர்விற்கு ஹால் டிக்கெட் வரவில்லை; முதல்வர் தனி பிரிவுக்கு புகார்

புதுச்சேரி,விழுப்புரம், கள்ளகுறிச்சி பகுதியில் உள்ள பொதுமக்களின் பிரச்சனைகளை தெரிவிக்க +918508008569 என்கின்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vikatan : “விகடன் இணையதளம் முடக்கமா?” பார்க்க, படிக்க முடியாததால் வாசகர்கள் கேள்வி..!
Vikatan : “விகடன் இணையதளம் முடக்கமா?” பார்க்க, படிக்க முடியாததால் வாசகர்கள் கேள்வி..!
"பிச்சை கேட்கல" நிதி கொடுக்க முடியாது என சொன்ன மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஷ் பதிலடி!
"தமிழ்நாட்டிற்கு நிதி கிடையாதுங்க" புதிய கல்விக்கொள்கை விவகாரத்தால் மத்திய அமைச்சர் திட்டவட்டம்
சென்னையில் கட்டுமான கழிவுகள் என்ன செய்யப்படுகிறது? பதில் தந்த மாநகராட்சி
சென்னையில் கட்டுமான கழிவுகள் என்ன செய்யப்படுகிறது? பதில் தந்த மாநகராட்சி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | CrimePa Ranjith Slams MK Stalin | ”சாதிய வன்கொடுமை! ஒத்துக்கோங்க ஸ்டாலின்”பா. ரஞ்சித் சரமாரி கேள்வி! | DMKDMK Vs VCK | ”2026-ல் ஸ்டாலினை வீழ்த்துவோம் உண்மையான சங்கி திமுக” விசிக நிர்வாகி ஆவேசம்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vikatan : “விகடன் இணையதளம் முடக்கமா?” பார்க்க, படிக்க முடியாததால் வாசகர்கள் கேள்வி..!
Vikatan : “விகடன் இணையதளம் முடக்கமா?” பார்க்க, படிக்க முடியாததால் வாசகர்கள் கேள்வி..!
"பிச்சை கேட்கல" நிதி கொடுக்க முடியாது என சொன்ன மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஷ் பதிலடி!
"தமிழ்நாட்டிற்கு நிதி கிடையாதுங்க" புதிய கல்விக்கொள்கை விவகாரத்தால் மத்திய அமைச்சர் திட்டவட்டம்
சென்னையில் கட்டுமான கழிவுகள் என்ன செய்யப்படுகிறது? பதில் தந்த மாநகராட்சி
சென்னையில் கட்டுமான கழிவுகள் என்ன செய்யப்படுகிறது? பதில் தந்த மாநகராட்சி
Jayalalitha's Jewellery: அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
"அவரு OBC-யே கிடையாது" மோடி குறித்து ரேவந்த் ரெட்டி பரபர கருத்து!
"கோபாலபுரத்தை தாண்டி எந்த பெண்களுக்கும் பாதுகாப்பு இல்ல" பகீர் கிளப்பும் அண்ணாமலை
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.