கரூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்து - 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயம்
கரூர் டெக்ஸ்டைல் பார்க்கிற்கு கூலி வேலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற வேன், மதுக்கரை என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
கரூர் அருகே டெக்ஸ்டைல் வேலைக்குச் ஆட்களை ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், தோகைமலை மற்றும் பஞ்சப்பட்டி பகுதிகளில் இருந்து டெக்ஸ் தொழிலுக்கு ஆட்களை ஏற்றி வந்த வாகனம், உப்பிடமங்களம் வழியாக கரூர் டெக்ஸ்டைல் பார்க்கிற்கு வந்து கொண்டிருந்தபோது மதுக்கரை என்ற இடத்தில் வேன் கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வேனில் பயணித்த ஆண் மற்றும் பெண்கள் என 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட அவர்களில், ஏழு பேர் உள்நோயாளியாகவும், நான்கு பேர் புற நோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து மாயனூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்