மேலும் அறிய

Muthukaalai : குடிப்பழக்கம்.. எச்சரித்த வடிவேலு.. மதுவில் இருந்து மீண்ட முத்துக்காளை! மறுபக்கம் சொன்ன ’காதல்’ நடிகர்..

மதுவை விட்டொழித்து புது ஆளாக வலம்வரும் முத்துக்காளையின் கதையை அவர் நண்பரும் நடிகருமான சுகுமார் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சில நடிகர்களுடன் வடிவேலு சேர்ந்து நடிக்கும் காம்போ காமெடிகள் சூப்பர் டூப்பர் ஹிட்டாக அமையும் . அப்படித்தான் நடிகர் முத்துக்காளையுடன் வடிவேலு செய்த அனைத்து காமெடியும் ரசிக்கும் படியாக இருக்கும். முத்துக்காளை மதுரை மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர். தனது 18 வய்திலேயே கராத்தே சண்டைப்பயிற்சியில் பிளாக் பெல்ட் பெற்றவர். முதலில் ஸ்டெண்ட் நடிகராகத்தான் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு வடிவேலுவுடன் ஏற்பட்ட நட்பு காரணமாக காமெடியனாக தன்னை தகவமைத்துக்கொண்டார். ஆனால் வடிவேலு சினிமாவுக்கு கேப் விடவும் முத்துக்காளை மாதிரியான நடிகர்களும் காணாமல்போனார்கள். ஆனால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் அவர்களை திருப்பிப் போட்டுள்ளது. மதுவால் துணை நடிகர்கள் பலர் சீரழிந்த கதையை கோலிவுட் கண்டிருக்கிறது. அதேபோல் முத்துக்காளையும் மதுப்பழக்கத்தில் சிக்கியுள்ளார். ஆனால் தற்போது மதுவை விட்டொழித்து புது ஆளாக வலம்வரும் முத்துக்காளையின் கதையை அவர் நண்பரும் நடிகருமான சுகுமார் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவில், 

''மேலோட்டமாக பார்க்க முடியாது எங்க நட்பை.. நகைச்சுவை நடிகர்களாக அறியப்பட்ட எங்கள் இருவருக்கும் ஜிம்னாஸ்டிக் தெரியும் என்பதால் ஒரு நெருக்கமான நட்பு. நேற்று அண்ணனை ஒரு நிகழ்ச்சியில் பார்க்க நேர்ந்தது.. தீவிரமாக ஆன்லைனில் பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்தார்."எப்பிடிண்ணே இருக்கீங்க?. படிப்பே போதையாயி போய்ட்டு இருக்கு" என்றார்.ஒருகணம் பழைய நினைவுகள் வர பேச்சுக் கொடுத்தேன்..தீவிர குடிப்பிரியராக இருந்தவர் இன்று படிப்பாளியாகி இரண்டு பட்டப்படிப்பு முடித்திருக்கிறார்.குடியை நிறுத்த அவருக்கு ஏற்பட்ட வைராக்கியம் ஒரு நொடியில் நிகழ்ந்திருக்கிறது..குடியால் ஒரு படப்பிடிப்புக்கு தாமதமாக செல்ல..வடிவேலு அவர்கள் "எழுதி வச்சிக்கோங்க..முதல்ல குடியால அல்வா வாசு சாவான்.. அடுத்த வருசத்துல முத்துக்காளை செத்துருவான்" எனக் கூற ..அந்த ஒரு வார்த்தை அவரை வருத்தியிருக்கிறது..சொன்னது போலவே அதே வருடம் அல்வா வாசு அண்ணன் இறந்து போக..காளை குடியை நிறுத்த முயற்சித்து இரண்டு முறை தோற்றிருக்கிறார்...ஒரு கட்டத்தில் Alchohol anonymous center சென்றிருக்கிறார்.. முழுவதுமாக விட்டு ஐந்து வருடங்கள் வெற்றிகரமான ஒரு வாழ்க்கையைத் தொடர்கிறார் .

Muthukaalai : குடிப்பழக்கம்.. எச்சரித்த வடிவேலு.. மதுவில் இருந்து மீண்ட முத்துக்காளை! மறுபக்கம் சொன்ன ’காதல்’ நடிகர்..
180 நாடுகளில் இருக்கும் அமைப்பு இது.  வருத்தமளிக்கும் செய்தி என்னவெனில் நிறையத் திரைப் பிரபலங்கள் வருகிறார்கள். ஆனால் அவர்களில் சிலரால் நிறுத்த சிரமப்படுகிறார்கள். சினிமாவில் தடுக்கி விழுந்தால் தண்ணிமேல்தான் விழவேண்டும். எல்லாவற்றுக்கும் குடிப்பார்கள்.எனக்கும் அந்தப் பழக்கம் தொட்டுச் சென்றிருக்கிறது...! அங்கே 20 வயதினர்கள் அதிகமாக வருகிறார்கள் எனக் கூற அதிர்ந்தேன் என்னண்ணே .. ஆமா அவங்கள்ளாம் ஆறு ஏழு வயதில் பான்பராக், குட்கா என ஆரம்பித்து இப்போது போதையின் பாதையில் இருந்து மீள வருகிறார்கள்..25 வருடங்களாக ஒருவர் வருகிறார்.. குடி அடிமையாக இருந்த அவர் சொன்னது.

கையில காசு இல்ல கைக்குழந்தை கையில ஒண்ணை என்கிட்ட விட்டுட்டு என் மனைவி கவுர்மென்ட் ஆஸ்பிட்டல்ல அவளா போயி பிரசவத்துக்கு அட்மிட் ஆயிட்டா.. அக்கம் பக்கத்துல கிடைச்ச கொஞ்ச காசை கொண்டு போயி குடிச்சிட்டு அங்கயே படுத்துட்டேன் வீட்ல குழந்தை பசியில அழ பக்கத்துல இருந்தவங்க ரெண்டு நா கழிச்சி எனை எழுப்பி ஆஸ்பிட்டல் கூட்டிப்போயிப் பார்த்தா பொண்டாட்டி குழந்த பெத்துப் படுத்திருந்தா மேக்கொண்டு வைத்தியம் பாக்க காசில்ல பஸ்ஸுல கூட்டிட்டு வீட்டுக்கு வரேன் மனைவி உக்காந்த இடத்துல ரத்தம் கொட்டுது என்னடின்னு கேட்டா.. விரக்தியா என்னை ஒரு பார்வை பார்த்தவ. வயித்த தொட்டுப் பார்த்துட்டு, "ஆப்பரேசன் பண்ணின இடத்துல தையல் பிரிஞ்சி அந்த நூலு வழியா  ரத்தம் வழியுது" என்றாள். நான் அப்பவே செத்துட்டேன்.. அப்போ விட்டதுதான். இங்க வந்துட்ருக்கேன் என்றார்.நான் வெடவெடத்துப் போனேன். நண்பர்களே இது இல்லாம இருக்க முடில அப்டீங்கிறவங்க இப்பவே கொஞ்சம் கொஞ்சமா விட்ருங்க.. இல்லன்னா இந்த சென்டருக்குப் போங்க ஒருபா செலவில்லாம மீளமுடியும். அதுக்கு சாட்சி இதோ எங்க முத்துக்காளை அண்ணன்’’ எனக் குறிப்பிட்டுள்ளார். மதுவை விட்டொழித்து புது வாழ்க்கையை தொடங்கிய முத்துக்காளைக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
"மொத்த நகத்தையும் வெட்டி எடுத்து சித்திரவதை" லவ்வருடன் இருந்த பெண்.. கோபத்தில் கொலை செய்த கணவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dharmendra Yadav: ’’நாலு தேர்தல் ஒழுங்கா நடத்தமுடில..நாடு முழுக்க நடத்த போறீங்களா?’’ கிழித்தெடுத்த சமாஜ்வாதி MPSupriya Sule: ”சுவிஸ் நிறுவனங்கள் ஓடுறாங்காபதில் சொல்லுங்க மோடி”வெளுத்து வாங்கிய சுப்ரியா சுலே!Tongue Splitting:  நாக்கை கிழித்து Tattooஇயற்கைக்கு மாறாக சம்பவம் தட்டி தூக்கிய போலீஸ்!Medical Waste :  டன் கணக்கில் மருத்துவ கழிவுகள்.. கேரள குப்பை தொட்டியா தமிழ்நாடு? கோபத்தில் மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
"மொத்த நகத்தையும் வெட்டி எடுத்து சித்திரவதை" லவ்வருடன் இருந்த பெண்.. கோபத்தில் கொலை செய்த கணவர்!
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
"டி.ஆர். பாலு சொன்னதை செய்றேன்" ஒரு நாடு ஒரே தேர்தல் மசோதா.. அமித் ஷா செய்த காரியம்!
Aadhav Arjuna :  “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
Aadhav Arjuna : “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
Embed widget