தோல்வி தந்த சோகம்! மாணவர் விபரீத முடிவு..அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்
செமஸ்டர் தேர்வில் தோல்வியடைந்த மாணவன் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை!. போலீசார் விசாரணை.

திருப்பத்தூரில் செமஸ்டர் தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரம், புது முத்தப்பர் தெருவில் வசித்து வரும் வேலு மகன் மெளலிஸ் (19). இவர், தூய நெஞ்சக் கல்லூரியில் பீ.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில், கடந்து ஆண்டு ஹரியர் வைத்து இருந்ததாகக் கூறப்படுகிறது.
அதே போன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த செமஸ்டர் தேர்விலும் மாணவன் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவரை சக மாணவர்கள் யாரோ கிண்டல் செய்ததாக தெரிகிறது.
இதனால் மாணவர் வீட்டில் யாரும் இல்லாத போது பெல்ட் மூலம் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக மாணவர் மௌலிசை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று கூறியுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நகர காவல்துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுமதித்து தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பின்னர் உடல் பிரேத பரிசோதனை செய்த பின்னர் சக கல்லூரி மாணவர்கள் அமரர் ஊர்தி முன்பு பைக்கில் அணிவகுத்து சென்றனர்.
மாணவர் மௌலிஸ் தேர்வில் தோல்வியடைந்த காரணத்தினால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Suicidal Trigger Warning..
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.





















