மேலும் அறிய

சிறுமிக்கு காதல் வலை; தட்டிக்கேட்ட தகராறில் ஒருவர் கொலை!

தாக்குதலுக்கு பின் வீட்டுக்கு சென்ற மாதேஸ்வரன் , சிறிது நேரத்தில் தனக்கு நெஞ்சு வலிப்பதாக தன் குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார் . உடனடியாக அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து  சென்ற  போது , அங்குள்ள மருத்துவர்கள் அவர் வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்தனர் .

திருப்பத்தூர் மாவட்டம் எர்ரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (46)  இவர் தேமுதிக கட்சியின் திருப்பத்தூர் மாவட்ட செயலராக உள்ளார் . திருமணம் ஆகி குழந்தைகளுடன் வசித்து வரும் ஹரிகிரிஷ்ணனுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஞானவேல் என்ற இளைஞருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. 24 வயதாகும் ஞானவேல் எர்ரம்பட்டி பகுதியில் உள்ள பெண்களிடம்  தொடர்ந்து கேலிகிண்டல் செய்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளார் . இதில் ஹரிகிரிஷ்ணனின் உறவினர் பெண்களும் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர் .

சிறுமிக்கு காதல் வலை; தட்டிக்கேட்ட தகராறில் ஒருவர் கொலை!

மேலும் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது ஆன பெண்ணை ஞானவேல் காதலித்து வந்ததாகும் அதற்கு ஞானவேலின் நண்பர்கள் உறுதுணையாக உள்ளதாகவும்  தெரிகிறது. இந்த விஷயம் பெண்ணுடைய பெற்றோருக்கு தெரியவர ஹரிகிருஷ்ணனிடம் , ஞானவேலை  கண்டிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர் . 

உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் ஞானவேல் மற்றும் அவரது நண்பர்களை , இதுபோன்ற செயல்களை தொடரக்கூடாது என்றும் மீறினால் காவல் நிலையத்தில் புகார் செய்து , ஜெயிலுக்கு அனுப்பிவிடுவேன் என்று ஹரிகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். இந்த சம்பவத்தில் சில நாட்களுக்கு முன்பு இரு தரப்பினருக்கும் கைகளுப்பு நடைபெற்றதாக  , போலீஸ் தரப்பில்  கூறப்படுகிறது .

இந்நிலையில் நேற்று இரவு  திருப்பத்தூரில் இருந்து  எர்ரம்பட்டிக்கு ,தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்த ஹரிகிரிஷ்ணனை ஞானவேல்  மற்றும் அவர்களது கூட்டாளிகள் வழி மறித்து , "ஏன்  மக்கள் நடமாட்டம் அதிகம்  இருக்கும் தெருவில் வண்டியை இவ்வளோ வேகமா ஓட்டி வரீங்க, இதுக்கு எல்லாம் போலீஸ் புடிக்க மாட்டாங்களா " என்று வம்பு இழுத்துள்ளனர் . 

இதனை தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் முத்தவே , அருகில் இருந்த கிராம மக்கள் இரு தரப்பினரையும்  சமாதானம் செய்து வைத்து அவரவர் வீடுகளுக்கு அனுப்பிவைத்தனர் .

இந்த சம்பவத்தை பற்றி கேள்விப்பட்ட ஹரிகிரிஷ்ணனின் மூத்த சகோதரர் மாதேஸ்வரன் (48 ), சம்மந்தப்பட்ட ஞானவேல் மற்றும் அவனது கூட்டாளிகளை தட்டிகேட்க சென்றபோது  , மீண்டும் ஞானவேலின் கூட்டாளிகள் மாதேஸ்வரனிடம் வாய் தகராறில் ஈடுபட்டுள்ளனர் , மேலும் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது .

இதில் ஞானவேல் மற்றும் அவரது கூட்டாளிகளான சந்தோஷ் (27) துளசி(30) மற்றும் கதிர்வேலு(25) ஜிடி குப்பம் பகுதியைச் சேர்ந்த பெருமாள்(25) ஆகிய 5 பேர் கொண்ட கும்பல் , மாதேஸ்வரனை கழுத்து மாற்று நெஞ்சு பகுதியில் தாக்கி உள்ளனர் .

பின்னர் கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் குறிக்கீட்டால் வீட்டுக்கு சென்ற மாதேஸ்வரன் , சிறிது நேரத்தில் தனக்கு நெஞ்சு வலிப்பதாக தன் குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார் . உடனடியாக அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து  சென்ற  போது , அங்குள்ள மருத்துவர்கள் அவர் வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்தனர் . மேலும் இன்று ஹரிகிருஷ்ணன் கொடுத்த பேரின் பேரில் , கந்தலி போலீசார் , ஞானவேல் மற்றும் அவரது கூட்டாளிகள்  நான்கு  பேர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் .

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!Udhayanidhi Vs Alisha BJP | ”தமிழ்தாய் வாழ்த்து பாட முடியுமா?” உதயநிதிக்கு அலிஷா சவால் | DMK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
IND vs PAK: தடவித் தடவி சேர்த்த ரன்கள்.. பவுலிங்கில் மிரட்டிய இந்தியா! 242 ரன்களை எட்டுமா ரோகித் பாய்ஸ்?
IND vs PAK: தடவித் தடவி சேர்த்த ரன்கள்.. பவுலிங்கில் மிரட்டிய இந்தியா! 242 ரன்களை எட்டுமா ரோகித் பாய்ஸ்?
Virat Kohli: 14 ஆயிரம் ரன்கள்! கோலியின் தலையில் புது மகுடம் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
Virat Kohli: 14 ஆயிரம் ரன்கள்! கோலியின் தலையில் புது மகுடம் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
"70 வயசுல தாத்தானு தான் கூப்பிடுவாங்க.." மு.க.ஸ்டாலினை விமர்சித்த தினகரன்
Virat Kohli ; என்ன நண்பா எப்படி இருக்க? மைதானத்தில் கட்டிப்பிடித்த கோலி -பாபர்.. வைரல் வீடியோ
Virat Kohli ; என்ன நண்பா எப்படி இருக்க? மைதானத்தில் கட்டிப்பிடித்த கோலி -பாபர்.. வைரல் வீடியோ
Embed widget