மேலும் அறிய
Advertisement
காஞ்சிபுரம்: 2வது மாடியில் இருந்து கீழே விழுந்த 11ம் வகுப்பு மாணவன் - தற்கொலை முயற்சியா? தீவிர விசாரணை!
கள்ளக்குறிச்சியில் மாணவியின் மரணம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், காஞ்சிபுரத்தில் 11 ஆம் வகுப்பு மாணவன் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் அருகே ஆர்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மணிராம் இவருடைய மகன் இஷிகாந்த் (16). இவர் காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகின்றார். இவர் தனது பள்ளியில் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். மாலை 4:30 மணிக்கு பள்ளியில் மாடியில் இருந்து கீழே விழுந்த மாணவனை சுமார் 5:30 மணிக்கு அவர்களின் பெற்றோரிடம் பள்ளி நிர்வாகத்தினர் ஒப்படைத்தனர்.
இதன் தொடர்ச்சியாக மாணவனின் பெற்றோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவனுக்கு கை மற்றும் கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மூக்கு பகுதியில் அதிக இரத்தம் வெளியேறியது. மாணவன் காயமடைந்த தகவலை தொடர்ந்து காஞ்சிபுரம் தாலுகா காவல்துறை பள்ளி முதல்வர் மற்றும் பொற்றோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உடனடியாக மாணவன் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவனுக்கு முதலுதவி கொடுக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவி மர்மமான உயிரிழந்து பள்ளி சூறையாடிய சம்பவம் அடங்குவதற்க்குள் காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்கட்ட விசாரணையில் பள்ளி ஆசிரியர் மாணவனை திட்டியதால் மாணவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து காவல்துறையில் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது மாணவன் மேலிருந்து கீழே விழுந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது இதன் அடிப்படையிலேயே, தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர். காஞ்சிபுரத்தில் தனியார் பள்ளி மாணவன் மேலிருந்து கீழே விழுந்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காரணம் என்ன என்பது விசாரணைக்கு பிறகு தெரியவரும் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்பொழுது சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104, ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050 .
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
மதுரை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion