புதுச்சேரியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சாவிற்ற 6 நைஜீரியர்கள் கைது
’’கடந்த 2009 ஆம் ஆண்டு இந்தியா வந்த அவர்கள் சட்ட விரோதமாக விசா இன்றி புதுச்சேரியில் தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்தது’’
புதுச்சேரியில் கடந்த சில மதங்களுக்கு முன்பு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார் அதில் புதுச்சேரியில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனையை கட்டுப்பட்டுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தந்த பகுதி கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். இந்த நிலையில், சட்ட விரோதமாக தங்கி இருந்ததுடன் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வெளிநாட்டினர் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு உடந்தையாக இருந்த புதுவையை சேர்ந்தவரும் சிக்கினார்.
Jayakumar Pressmeet: ”சேப்பாக்கம் சேகுவேராவ காணோமே” - உதயநிதியை கலாய்த்த ஜெயக்குமார்
புதுச்சேரியில் கஞ்சா நடமாட்டத்தை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் வாழைக்குளம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே சிறப்பு அதிரப்படை காவல் ஆய்வாளர் இனியன் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு வீட்டில் 3 பெண்களும், 3 ஆண்களும் இருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்ததில் நைஜீரியா நாட்டை சேர்ந்தவர்கள் என்பதும் கடந்த 2009 ஆம் ஆண்டு இந்தியா வந்த அவர்கள் சட்ட விரோதமாக விசா இன்றி புதுச்சேரியில் தங்கியிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து அந்த வீட்டில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்கு 3 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. போலீசார் அவர்கள் 6 பேரிடமும் விசாரித்தனர். இதில், கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிலருக்கு கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. அவர்களுக்கு வாழைக்குளம் பகுதியை சேர்ந்த ஒருவர் உதவியாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவரும் கைது செய்யப்பட்டார்.
Anna Birthday: அண்ணாவிற்கு மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின்!
கைதான 7 பேரையும் முத்தியால் பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தொடர்ந்து தமிழகம் மற்றும் ஆந்திரா பகுதிகளிலிருந்து புதுச்சேரிக்கு கஞ்சா வருவதை தடுக்க போலிசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் நடமாட்டம் சமீபகாலமாக அதிகரித்திருக்கிறது.
இதற்கான அண்டை மாநில போலீஸாருடன் இணைந்து கூட்டு நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். இத்தகைய குற்றங்களை ஒடுக்கவும், முழு நேர கண்காணிப்புக்கு வசதியாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு விரைவில் ஆரம்பிக்க இருக்கிறோம். பொதுமக்களை அச்சுறுத்தும் செயின் பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட குற்றத்தில் ஈடுபடுவோர் மீது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள்.
Rajya Sabha election: ராஜ்யசபாவுக்கு செல்லும் இருவர்! திமுக கொடுத்த TWIST |