மேலும் அறிய

40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லாத புதிதாக வாங்கிய பல்சர் பைக்?: வாடிக்கையாளர் அதிர்ச்சி!

மயிலாடுதுறையில் புதிதாக வாங்கிய பல்சர் வாகனம் 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் இயங்காததால் வாடிக்கையாளர் நிறுவனத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

மயிலாடுதுறை மாவட்டம் நல்லத்துக்குடி பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் 24 வயதான குருமூர்த்தி. இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் செல்போன் நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 14 -ஆம் தேதி மயிலாடுதுறை சீனிவாசபுரத்தில் உள்ள பஜாஜ் இருசக்கர வாகன ஷோரூமில் 1 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் செலுத்தி புதிய பல்சர் இருசக்கர வாகனத்தை வாங்கியுள்ளார்.  

40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லாத  புதிதாக வாங்கிய பல்சர் பைக்?: வாடிக்கையாளர் அதிர்ச்சி!

அந்த வாகனத்தில் தினந்தோறும் கும்பகோணத்திற்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்த சூழலில் புதிதாக வாங்கிய பல்சர் வாகனம் 40 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் இயங்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் அடைப்பு ஏற்பட்டு வாகனம் சாலையில் சென்று கொண்டிருக்கும்போதே திடீரென்று நின்று விபத்தில் சிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த குருமூர்த்தி இதுகுறித்து தான் பைக் வாங்கிய சீனிவாசபுரம் பஜாஜ் நிறுவனத்திற்கு  நேரில் சென்று கேட்டுள்ளார்.  அப்போது  அவர்கள் முதல் சர்வீஸ் செய்தால் சரியாகும் என்று கூறி அனுப்பி உள்ளனர். 

APJ Abdul Kalam: ’ஏவுகணை நாயகன்’ ஏபிஜே அப்துல் கலாம் பிறந்த தினம் இன்று - சாதனைகளின் ரவுண்டப்

40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லாத  புதிதாக வாங்கிய பல்சர் பைக்?: வாடிக்கையாளர் அதிர்ச்சி!

ஆனால், சர்வீஸ் செய்தும் வண்டி வேகம் 40 -க்கு மேல் போகாமல்  அந்த பிரச்சினை நீடித்துள்ளது. தொடர்ந்து 510 கிலோமீட்டர் தூரம் வாகனம் இயங்கிய நிலையில், தனது பல்சர் வாகனத்தை பஜாஜ் நிறுவனத்திடம் ஒப்படைத்து சரி செய்து தாருங்கள் இல்லையென்றால் பணத்தை திருப்பித் தாருங்கள் என்று கூறியுள்ளார். மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் வண்டியை நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளார். வண்டியை வாங்கி வைத்துக் கொண்ட  பஜாஜ் நிறுவனத்தினர் தீர்வு ஏற்படுத்தி தராமல் குருமூர்த்தியை இதுநாள் வரை அலைக்கழித்து வந்ததாக சொல்லப்படுகிறது. 

Sri lanka Worldcup 2023: பேரிடி..! உலகக் கோப்பையிலிருந்து விலகினார் இலங்கை கேப்டன் தசுன் ஷனகா - காரணம் இதுதான்..!

40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லாத  புதிதாக வாங்கிய பல்சர் பைக்?: வாடிக்கையாளர் அதிர்ச்சி!

இதனால் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாததால் குருமூர்த்தி தனது வேலையை இழந்து விட்டதாகவும், புதிய வண்டி என்றபெயரில் தரமற்ற வாகனத்தை தனக்கு வழங்கி மன உளைச்சலுக்கு உள்ளாகியதால் சட்ட உதவி மையம் மூலம் குருமூர்த்தி வழக்கு தொடுத்துள்ளார். இந்நிலையில் பஜாஜ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை எண்ணிலிருந்து  தாங்கள் கொடுத்த புகார் தொடர்பாக எந்த விபரமும்  இல்லை என்று எஸ்எம்எஸ் வந்துள்ளது. மயிலாடுதுறை பஜாஜ் நிறுவனத்தின் முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறி ஆத்திரமடைந்த குருமூர்த்தி, தனது ஆதரவாளர்களுடன் பஜாஜ் நிறுவனத்தை முற்றுகையிட்டு நிறுவனத்தின் வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 

Bigg Boss 7 tamil: "நான் என்ன உன் வீட்டு வேலைக்காரனா?” .. ‘டா’ போட்டு பேசிய ஜோவிகாவை வெளுத்து வாங்கிய விஷ்ணு..!

40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லாத  புதிதாக வாங்கிய பல்சர் பைக்?: வாடிக்கையாளர் அதிர்ச்சி!

அப்போதும் அங்கு யாரும் அவர்களை கண்டு கொள்ளாமல் மேனேஜரை கேட்க வேண்டும் என்று கூறியுள்ளனர். மேனேஜர் விடுப்பில் இருந்ததால், திங்கட்கிழமை அன்று கடையை பூட்டுவோம் என்று எச்சரிக்கை விடுத்து அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். வாடிக்கையாளர் புதிதாக வாங்கிய வாகனத்தின் குறைபாடுகளை சரி செய்து தராமல், வாகனத்தை வாங்கி வைத்துக் கொண்டு பொறுப்பேற்க மறுக்கும் நிறுவனத்தின் செயல் வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India Victory Parade LIVE: கோப்பையுடன் உலாவரும் வீரர்கள்! ஸ்தம்பிக்கும் வான்கடே! உற்சாகமாக வரவேற்கும் ரசிகர்கள் கூட்டம்

Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?

Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்

அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்Vikravandi By Election | ’’வராதீங்க ஸ்டாலின்’’தடுக்கும் அமைச்சர்கள்..விக்கிரவாண்டியில் பரபரப்புMayors Resign | ஆட்டம் காட்டிய மேயர்கள்..அடக்கி ஆளும் ஸ்டாலின்!களையெடுப்பு ஆரம்பமா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India Victory Parade LIVE: கோப்பையுடன் உலாவரும் வீரர்கள்! ஸ்தம்பிக்கும் வான்கடே! உற்சாகமாக வரவேற்கும் ரசிகர்கள் கூட்டம்
Team India Victory Parade LIVE: கோப்பையுடன் உலாவரும் வீரர்கள்! ஸ்தம்பிக்கும் வான்கடே! உற்சாகமாக வரவேற்கும் ரசிகர்கள் கூட்டம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
’குடி’மகன்களுக்கு அதிர்ச்சி! விழுப்புரத்தில் 4 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு ! காரணம் என்ன?

Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்.. இந்திய தடகள வீரர்கள் அறிவிப்பு - 5 தமிழக வீரர்களுக்கு இடம்!

Breaking News LIVE: ஜூலை 8ல் ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு

Paramedical Counselling: பாராமெடிக்கல் படிப்புகளுக்கு கலந்தாய்வு எப்போது? வெளியான தகவல்

Embed widget