செக்ஸ், போதை டார்ச்சர்! உஸ்பெகிஸ்தானில் இருந்து டெல்லிக்கு கடத்தப்பட்ட 7 பெண்கள் மீட்பு!
அவர்களில் ஒருவர் 2019 அக்டோபரில் 17 வயதில் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டார், ஒருவருக்கு 30 வயது மற்றும் இதயத்தில் துளை பிரச்னை உள்ள ஒரு குழந்தையும் உள்ளது
![செக்ஸ், போதை டார்ச்சர்! உஸ்பெகிஸ்தானில் இருந்து டெல்லிக்கு கடத்தப்பட்ட 7 பெண்கள் மீட்பு! sex, lies, drugs: How seven foreigners went through hell before escaping trafficking net செக்ஸ், போதை டார்ச்சர்! உஸ்பெகிஸ்தானில் இருந்து டெல்லிக்கு கடத்தப்பட்ட 7 பெண்கள் மீட்பு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/06/07c04f20c0b16797038ae697da941627_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சர்வதேச நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வேலை தேடி வரும் பெண்களை வன்முறையாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த ரஹீமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஏப்ரல் 2019ல் டூரிஸ்ட் விசாவில் இந்தியா வந்துள்ளார். அதற்கு பதிலாக, உஸ்பெகிஸ்தானில் இருந்து அவரை அழைத்து வந்த இடைத்தரகர்கள் அவரது பாஸ்போர்ட் மற்றும் உடைமைகளை பறித்துக்கொண்டு தெற்கு டெல்லி குடியிருப்பில் உள்ள அறையில் அடைத்து வைத்துள்ளனர்.
26 வயதான ரஹிமா பாஸ்போர்ட் பறிக்கப்பட்ட நிலையில் அந்த பிளாட்டுக்கு வந்த ஆண்களின் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற இடைத்தரகர்களின் கோரிக்கைக்கு இணங்குவதைத் தவிர வேறு வழியில்லை. ஒரு வாடிக்கையாளரை மறுத்ததற்காக அல்லது அவரிடமிருந்து தப்பி ஓட முயன்றதற்காக ரஹீமா தாக்கப்பட்டதாக அவரது புகாரில் தெரிவித்துள்ளார். அவரும் அவரைப் போன்ற மற்றவர்களும் தொடர்ந்து போதைப்பொருள் உட்கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர், மேலும் சில சிறுமிகள் அதற்கு அடிமைப் பழக்கத்தை வளர்த்துக்கொண்டுள்ளனர்.
"எங்களுக்கு பணம் எதுவும் வழங்கப்படவில்லை. நிலைமையை இன்னும் மோசமாக்க எங்களில் யாருக்கும் உள்ளூர் மொழி தெரியவில்லை," என்று ரஹீமா கூறினார். சிறையில் இருந்து தப்பி சாணக்யபுரியில் உள்ள உஸ்பெகிஸ்தான் தூதரகத்தை அடைந்த ஏழு பெண்களில் ரஹீமாவும் ஒருவர். சரியான அடையாள ஆவணம் எதுவும் இல்லாததால் அவரால் தூதரக வளாகத்திற்குள் நுழைய முடியவில்லை.
அதிர்ஷ்டவசமாக அந்தப் பெண்கள், மனிதநேயத்தை ஊக்குவிக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் மீட்கப்பட்டனர், அதைத் தொடர்ந்து டிச்ல்லி போலீசார் கடத்தல், குற்றவியல் சதி, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் பிற குற்றச்சாட்டுகளை இடைத்தரகர்கள் மீது சாணக்யபுரி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை பதிவு செய்தனர்.
சர்வதேச மோசடியின் பின்னணியில் இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவரைத் தவிர, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வீட்டில் குழந்தைகள் உள்ளனர். பெரும்பாலானவர்கள் தாங்கள் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டதாகவும், குழந்தைகள் இருப்பதாகவும், அவர்களது கணவர்கள் அவர்களை விட்டுச் சென்றுவிட்டதாகவும் கூறினர்.
அவர்களில் ஒருவர் 2019 அக்டோபரில் 17 வயதில் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டார், ஒருவருக்கு 30 வயது மற்றும் இதயத்தில் துளை பிரச்னை உள்ள ஒரு குழந்தையும் உள்ளது. மற்றொருவருக்கு 22 வயது அவர் இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஊருக்கு வந்துள்ளார்.
ரஹீமாவுக்கும் ஒரு குழந்தை உள்ளது. கணவர் அவரை விட்டுச் சென்ற பிறகு, டெல்லியில் வேலை வாய்ப்பு கிடைத்தபோது அவருக்கு இங்கே வர வாய்ப்பு கிடைத்தது. அவர் சுற்றுலா விசாவில் டெல்லி வந்துள்ளார், ஆனால் பின்னர் அவரால் பெயரை வெளியிட முடியாத இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். “எனது அறையின் கதவு எப்பொழுதும் பூட்டியிருக்கும், எங்களை வெளியே அனுமதிக்கவில்லை, தேவைப்பட்டால், நாங்கள் எப்போதும் புரோக்கர்கள் உடன் இருப்போம், அவர்கள் எங்களுக்கு போதைப்பொருள் கொடுத்தனர், நாங்கள் மறுத்தபோது அதை உட்கொள்ள எங்களை கட்டாயப்படுத்தினர். சில வாடிக்கையாளர்களும் எங்களுக்கு போதைப்பொருள் கொடுத்தனர்"
மனிதநேயத்தை மேம்படுத்துவதின் அடிப்படையில், மீட்கப்பட்ட பெண்களுக்கு போலீஸ் வழக்கு பதிவு செய்ய உதவியது. பெண்கள் இந்தியாவிற்கு கடத்தப்பட்டதாகக் முதல் தகவல் அறிக்கை விவரங்கள் கூறுகின்றன. "எங்களுக்கு நேபாளத்தில் சுற்றுலா விசா வழங்கப்பட்டது, எங்களில் சிலர் மருத்துவ விசாவில் இந்தியாவுக்கு வெவ்வேறு காலங்களில் வந்தோம். சுற்றுலா விசாவில் நேபாளத்திற்கு வந்தவர்களின் பாஸ்போர்ட் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டு, பாலியல் தொழிலாளர்களாக வேலை செய்ய புதுதில்லிக்கு அழைத்து வரப்பட்டோம். மருத்துவ அல்லது பிற விசாக்களில் நேரடியாக இந்தியாவிற்கு வந்த எங்களில், நாங்கள் வந்த பிறகு எங்களின் பயண ஆவணங்கள் மற்றும் பாஸ்போர்ட்டுகள் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டன" என்று அறிக்கை கூறுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)