மேலும் அறிய

பள்ளியில் ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு; தடுக்க முயன்ற 3 மாணவர்கள் காயம் - விழுப்புரம் அருகே பரபரப்பு

விழுப்புரம் அருகே அரசு பள்ளியில் ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு, தடுக்க முயன்ற 3 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டதால் பரபரப்பு.

விழுப்புரம் அருகே அரசு பள்ளி வாசலில் ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு:- தடுக்க முயன்ற 3 மாணவர்களுக்கும் காயம் ஏற்பட்டதால் பரபரப்பு. விழுப்புரம் அருகே உள்ள கோலியனூரில் இயங்கி வரும் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வரும் நடராஜன் என்பவருக்கும், அவரது மூத்த சகோதரரான ஸ்டாலின் என்பவருக்கும் இடையே நீண்ட காலமாக சொத்து தகராறு இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோலியனூர் அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு சென்ற ஸ்டாலின், ஆசிரியரான தனது தம்பி நடராஜனை அழைத்து சொத்து தொடர்பாக பேசியுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதில் திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தனது தம்பியான ஆசிரியர் நடராஜனை, ஸ்டாலின் சரமாரியாக வெட்டியுள்ளார். பள்ளி வளாகத்தில் ஆசிரியர் நடராஜனை ஒருவர் அரிவாளால் வெட்டுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த மாணவர்கள் சிலர் ஓடி சென்று தடுத்துள்ளனர். இதில் 11ஆம் வகுப்பு மாணவர்களான மனோஜ், ஆகாஷ், முருகன் உள்ளிட்ட மூன்று பேருக்கு கையில் காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் ஒன்று சேர்ந்து ஸ்டாலினை பிடித்து வைத்து கொண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்ததுடன், அரிவாளால் வெட்டியதில் காயமடைந்த ஆசிரியர் நடராஜனை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வளவனூர் போலீசார், ஆசிரியர் நடராஜனை அரிவாளால் வெட்டிய அவரது அண்ணன் ஸ்டாலினை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி வளாகத்திலேயே ஆசிரியர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 


 

என்ன செய்ய வேண்டும்? 

நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

நடிகை ராதிகா வீட்டுப் பணிப்பெண் மகன் கொடூர கொலை: பீர் பாட்டிலால் கழுத்தறுத்து பீச்சில் புதைப்பு
நடிகை ராதிகா வீட்டுப் பணிப்பெண் மகன் கொடூர கொலை: பீர் பாட்டிலால் கழுத்தறுத்து பீச்சில் புதைப்பு
ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் பாணியில்! உணவு டெலிவரி உடை! கத்தி, முகமூடி! 4 பேர் கொண்ட கும்பல் சிக்கியது எப்படி?
ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் பாணியில்! உணவு டெலிவரி உடை! கத்தி, முகமூடி! 4 பேர் கொண்ட கும்பல் சிக்கியது எப்படி?
மயிலாடுதுறை தேடப்படும் குற்றவாளிகள் பட்டியல் வெளியீடு - உங்க ஊரிலிருந்து யார்-யார் இருக்காங்கன்னு பாருங்க! 
மயிலாடுதுறை தேடப்படும் குற்றவாளிகள் பட்டியல் வெளியீடு - உங்க ஊரிலிருந்து யார்-யார் இருக்காங்கன்னு பாருங்க! 
திருச்சியில் சிக்கிய 5 சிம் பாக்ஸ்: அதிரடியாக பறிமுதல் செய்த போலீசார்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
திருச்சியில் சிக்கிய 5 சிம் பாக்ஸ்: அதிரடியாக பறிமுதல் செய்த போலீசார்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Exclusive: கில்லிதான் நம்ம CM! 100 கோடி ரூபாயை மிச்சப்படுத்திய மாஸ்டர் ப்ளான்! நுகர்வோர் வாணிப கழகத்தில் நடந்தது என்ன?
ABP Exclusive: கில்லிதான் நம்ம CM! 100 கோடி ரூபாயை மிச்சப்படுத்திய மாஸ்டர் ப்ளான்! நுகர்வோர் வாணிப கழகத்தில் நடந்தது என்ன?
அந்தமான் அருகே 24 மணி நேரத்தில் உருவாகும் புயல்! - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட் என்ன?
அந்தமான் அருகே 24 மணி நேரத்தில் உருவாகும் புயல்! - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட் என்ன?
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
மெத்தனமாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை! - சிறைத்துறையினருக்கு முதலமைச்சர் எச்சரிக்கை!
மெத்தனமாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை! - சிறைத்துறையினருக்கு முதலமைச்சர் எச்சரிக்கை!
இந்தியாவின் இரும்பு மனிதர்: பிரதமர் பதவிக்கான நேருவின் போட்டியாளர் - யார் இந்த வல்லபாய் படேல்?
இந்தியாவின் இரும்பு மனிதர்: பிரதமர் பதவிக்கான நேருவின் போட்டியாளர் - யார் இந்த வல்லபாய் படேல்?
எவ்ளோ அடிச்சும் நோ யூஸ்! ஒரே நாளில் இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் தோற்ற இந்தியா! பவுலிங் படுமோசம்
எவ்ளோ அடிச்சும் நோ யூஸ்! ஒரே நாளில் இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் தோற்ற இந்தியா! பவுலிங் படுமோசம்
விண்ணில் பாய்ந்த GSLV - F18: வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட NVS-03 செயற்கைக்கோள்!
விண்ணில் பாய்ந்த GSLV - F18: வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட NVS-03 செயற்கைக்கோள்!
200 ரூபாய்க்கு 1.4 கிலோ மளிகைப் பொருட்கள்! செங்கல்பட்டு மக்களுக்கு அதிரடி சலுகை! உடனே முந்துங்க!
200 ரூபாய்க்கு 1.4 கிலோ மளிகைப் பொருட்கள்! செங்கல்பட்டு மக்களுக்கு அதிரடி சலுகை! உடனே முந்துங்க!
Embed widget