(Source: ECI/ABP News/ABP Majha)
WhatsApp fraud : உஷார்! வாட்ஸ் அப்பில் வந்த லிங்க்! ஒரே க்ளிக்கில் காணாமல்போன ரூ.21 லட்சம்! அதிர வைக்கும் புது மோசடி!
குறிப்பிட்ட லிங்கை க்ளிக் செய்ததன்மூலம் வரலட்சுமியின் போனும் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தெரியாத நம்பரில் இருந்து வாட்ஸ் அப்க்கு வந்த லிங்கை க்ளிக் செய்த ஓய்வுபெற்ற ஆசிரியையின் அக்கவுண்டில் இருந்து ரூ.21 லட்சம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்த அன்னமையா மாவட்டத்தைச் சேர்ந்தவர் வரலட்சுமி. ஓய்வுபெற்ற ஆசிரியையான இவர் சைபர் மோசடியில் சிக்கி தன்னுடைய வங்கிக்கணக்கில் இருந்து ரூ.21 லட்சத்தை இழந்துள்ளார். தெரியாத நம்பரில் இருந்து வரலட்சுமி வாட்ஸ் அப் எண்ணுக்கு லிங்க் ஒன்று வந்துள்ளது. அதனை க்ள்க் செய்யப்போய் இந்த மோசடி நடந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து தெரிவித்த வரலட்சுமி, ’’வாட்ஸ் அப்க்கு லிங்க் ஒன்று வந்தது. அது யாருடைய நம்பர் என தெரியவில்லை. நான் அந்த லிங்கை க்ளிக் செய்தேன். உடனடியாக என்னுடைய அக்கவுண்டில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்தது. அப்போதுதான் இது சைபர் மோசடி என்றும் என் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதும் எனக்கு தெரிந்தது. உடனடியாக போலீசாருக்கு புகாரளித்தேன்’’ என்றார்
வரலட்சுமி வங்கிக்கணக்கில் இருந்து 3 முறையாக பணத்தை திருடியுள்ளனர் சைபர் மோசடிக்காரர்கள். முதலில் ரூ.20ஆயிரமும், பின்னர் ரூ.40ஆயிரமும் அதன் பின்னர் ரூ.80ஆயிரமும் எடுக்கப்பட்டுள்ளது.அதன்பின்னர் தொடர்ந்து பணம் எடுக்கப்பட்டு ரூ.21 லட்சம் வரை காணாமல் போயுள்ளது.
இந்த மோசடி குறித்து பேசிய சைபர் கிரைம் தடுப்பு போலீசார், ''அன்னமையா மாவட்டத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் வரலட்சுமி கணக்கில் இருந்தே இந்த பணம் மோசடி நடந்துள்ளது. அவரின் வாட்ஸ் அப்க்கு வந்த லிங்கே மோசடிக்கு காரணமாக இருந்துள்ளது. அந்த லிங்கை இவர் பலமுறை ஓபன் செய்துள்ளார். உடனடியாக அவரது வங்கிக்கணக்கு ஹேக் செய்யப்பட்டு அதில் இருந்து பணம் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் வங்கி அதிகாரிகளை அணுகியபோது வங்கிக்கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் ஷாக் ஆன வரலட்சுமி டோல்பிரி நம்பர் மூலம் எங்களிடம் புகாரளித்தார்’’ என்றார்.
குறிப்பிட்ட லிங்கை க்ளிக் செய்ததன்மூலம் வரலட்சுமியின் போனும் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதேபோல, ஞானபிரகாஷ் என்பவரின் அக்கவுண்டில் இருந்தும் ரூ.12 லட்சம் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது குறித்தும் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்
ஓடிபி, வங்கி பாஸ்வேர்ட் என பல பாதுகாப்புகள் இருந்தாலும் செல்போனை ஹேக் செய்தால் மோசடிக்காரர்களால் எளிதில் பணத்தை திருட முடியும். ஆனால் எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் நம் போனை ஹேக்கர்களால் ஊடுற முடியாது. அதற்காகத்தான் அவர்கள் வாட்ஸ் அப் மூலமும், சோஷியல் மீடியாக்கள் மூலமும், எஸ் எம் எஸ் மூலம் நம்மை அணுகின்றனர். சம்பந்தமே இல்லாத, எந்த அறிமுகமும் இல்லாத நம்பரில் இருந்து வரும் எந்த ஒரு லிங்கையும் நாம் க்ளிக் செய்யக் கூடாது. அறிமுகமும் இல்லாத நம்பர்களை தவிர்த்துவிடுவது நல்லது.