Crime: 4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! சப் இன்ஸ்பெக்டர் செய்த கொடூரம் - ராஜஸ்தானில் சோகம்
ராஜஸ்தான் மாவட்டத்தில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Crime: ராஜஸ்தான் மாவட்டத்தில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை:
ராஜஸ்தான் மாநிலம் தவுஸா மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தேர்தல் பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் புபேந்திர சிங் என்ற நபர் 4 வயது சிறுமியை ஏமாற்றி, நேற்று தனது அறைக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து கிராம மக்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். பாலபுகாரின் பேரில் புபேந்திர சிங் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இதுகுறித்து, காவல் துணைக் கண்காணிப்பாளர் பஜ்ரங் சிங் கூறுகையில், "சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் பூபேந்திர சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். குற்றவாளிக்கு நிச்சயம் கடுமையான தண்டனை வழங்கப்படும். விரைவில் அவர் காவல்துறை பணியில் இருந்து நீக்கம் செய்யப்படுவார்" என்றார்.
வெடித்த போராட்டம்:
இதற்கிடையில், ராகுவாஸ் காவல் நிலையத்தை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர். காவல்துறைக்கு எதிராக கண்டனக் குரல்களை எழுப்பினர். அவர் கைது செய்யப்படுவதற்கு முன், கிராம மக்கள் அவரை அடித்துள்ளதாக தெரிகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற எம்.பி.கிரோடி லால் மீனா கூறுகையில், "சம்பவ இடத்தில் கிராம மக்கள் ஆவேசத்துடன் குவிந்துள்ளனர். பட்டியலின சிறுமிக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி கிடைக்க வேண்டும்.
लालसोट में 7 साल की दलित बच्ची के साथ पुलिसकर्मी द्वारा दुष्कर्म की घटना से लोगों में भारी आक्रोश है। मासूम को न्याय दिलाने के लिए मौके पर पहुंच गया हूं। अशोक गहलोत सरकार के नाकारापन से निरंकुश हुई पुलिस चुनाव जैसे संवेदनशील मौके पर भी ज्यादती करने से बाज नहीं आ रही। pic.twitter.com/xnIB13eyWi
— Dr.Kirodi Lal Meena (@DrKirodilalBJP) November 10, 2023
இடத்திற்கு வந்துள்ளேன். அசோக் கெலாட்டின் திறன் இன்மையால் தான் போலீசார் சர்வாதிகாரிகள் ஆகிவிட்டனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு பாஜக இழப்பீடு வழங்கும்” என்று தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 25ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகள் ஏற்படுத்தியுள்ளது.