கிண்டி: சட்டவிரோதமாக நடைபெற்று வந்த சூதாட்ட கிளப்பில் போலீசார் கட்டி புரண்டு மோதல்
சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பால முருகன் மது போதையில் இருப்பதை தெரிந்து கொண்டு அங்கிருந்து நகர முயற்சி செய்துள்ளனர்
சென்னை கிண்டி இரயில் நிலையத்தையொட்டி நடந்து வரும் சூதாட்ட கிளப்பில் காவல் துறையினர் சண்டையிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சட்டவிரோதமாக நடைபெற்று வரும் இந்த சூதாட்ட கிளப்பில் 40 வயதான பாலமுருகன் என்ற காவல் துறையைச் சேர்ந்தவர், நேற்று முன்தினம் இந்த கிளப்பிற்கு வந்துள்ளார். தொடர்ந்து விளையாடி தோற்று வந்தவர், மொபைல் போன் வைத்து விளையாடியுள்ளார். அதிலும் தோல்வி அடைந்துள்ளார்.
அதனை அடுத்து, மொபைல் போனை வாங்கி கொண்ட எதிர் தரப்பினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். மொபைல் போனை திருப்பி தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார் பால முருகன். ஆனால், எதிர் தரப்பினர் தர மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதல் ஏற்பட்டிருக்கிறது. இதனால், ஆத்திரம் அடைந்த பால முருகன் அருகில் இருந்தவரிடம் இருந்து போனை வாங்கி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசி உள்ளார். மேலும், இங்கு சூதாட்டம் நடப்பதாகவும் தகவல் தெரிவித்திருக்கிறார். இங்கு சட்டவிரோதமாக கிளப் நடந்து வருவதாகவும், கிளப்பை பூட்டி விசாரணை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார்.
மது போதையில் இருந்த பால முருகன், இப்படி செய்ததால் அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பால முருகன் மது போதையில் இருப்பதை தெரிந்து கொண்டு அங்கிருந்து நகர முயற்சி செய்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பால முருகன், காவல் துறையினரிடம் சண்டைக்கு சென்றிருக்கிறார். அவர்களை ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதனால், காவல் துறையினருக்கும் பால முருகனுக்கும் மோதல் ஏற்பட்டிருக்கிறது.
வாய் வாக்குவாதம் கைகலப்பாக மாற, காவல் துறையினரும் பால முருகனும் கட்டிப் புரண்டு சண்டைப்போட்டுள்ளனர். இதனால், மேலும் 3 காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை கூட்டிச் சென்றுள்ளனர். அதனை அடுத்து, சட்டவிரோதமாக நடைபெற்று வந்த கிளப்பிற்கு சீல் வைத்து பூட்டியுள்ளனர். மேலும், உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். காவல் துறையினருக்குள் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் படிக்க: World Homeopathy Day 2022: இன்று உலக ஹோமியோபதி தினம்! வரலாறு? காரணம்? நோக்கம்? தேவை?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்