மேலும் அறிய
Crime: ரயிலுக்காக காத்திருந்த பெண்.. கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய மர்மநபர் - பெருங்களத்தூரில் பெரும் பரபரப்பு..!
பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் வீட்டிற்க்கு செல்வதற்காக ரயில்நிலையத்தில் காத்திருந்த பெண்ணை கத்தியால் குத்திவிட்டு சென்ற மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
![Crime: ரயிலுக்காக காத்திருந்த பெண்.. கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய மர்மநபர் - பெருங்களத்தூரில் பெரும் பரபரப்பு..! Perungalathur, next to Chennai Tambaram, a woman was stabbed to death while waiting at the railway station Crime: ரயிலுக்காக காத்திருந்த பெண்.. கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய மர்மநபர் - பெருங்களத்தூரில் பெரும் பரபரப்பு..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/06/c00567e2195baf4fb25678ac8a7fd05d1691313747749113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பெருங்களத்தூர் ரயில் நிலையம்
செங்கல்பட்டு ( Chengalpattu News ): செங்கல்பட்டு பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வி (53) நேற்று இரவு தனது கணவர் மூர்த்தி மற்றும் மகளுடன் வீட்டிற்கு செல்வதற்காக பெருங்களத்தூர் வந்துள்ளார். அப்போது பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால், ரயில் மூலம் செல்வதற்காக பெருங்களத்தூர் ரயில் நிலையம் நடைமேடை அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, மது போதையில் இருந்த மர்ம நபர் ஒருவர் பேச்சு கொடுப்பது, போல் தன் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் கையில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
![Crime: ரயிலுக்காக காத்திருந்த பெண்.. கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய மர்மநபர் - பெருங்களத்தூரில் பெரும் பரபரப்பு..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/06/b5973c286d04147151923147d3f8dea91691313793163113_original.jpg)
கத்திக்குத்தால் பரபரப்பு:
அலறல் சத்தம் கேட்டு வந்த பயணச்சீட்டு எடுக்க சென்ற மூர்த்தி மற்றும் பாதுகாப்பு பணி போலீசார் பலத்த காயமடைந்த தமிழ்செல்வியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு கையில் பதிமூன்று தையல் போடபட்டுள்ளது. சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த தாம்பரம் இருப்புபாதை போலீசார் மர்ம நபரை தேடி வந்தனர். இச்சம்பவம் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து காவல்துறையினரிடம் விசாரித்த பொழுது தெரிவித்ததாவது : செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவர் பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் காத்துக் கொண்டிருந்த பொழுது, அங்கிருந்த மர்ம நபர் அவரிடம் பேசிக் கொடுத்துள்ளார். போதையில் அந்த நபர் இருந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து தமிழ்ச்செல்வியை அந்த நபர் குத்திவிட்டு தப்பி ஓடியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றோம் என தெரிவித்தனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
உலகம்
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion